
PR டீமின் அக்ரீமெண்ட் முடிந்து விட்டதா? அசீமை கலாய்த்து 2வது நாளும் வலம் வரும் கருத்துக்கள்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி ஞாயிற்று கிழமையோடு முடிவடைந்து இருக்கிறது.
இந்த சீசனின் வெற்றி யாரும் எதிர்பார்க்காத அதே நேரத்தில் சரியான நபருக்கு கொடுக்கப்படாத வெற்றி என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆரம்பத்தில் இருந்து சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டு இருந்த அசீமிற்கு இந்த சீசன் டைட்டில் வின்னர் கொடுக்கப்பட்டது சமூக வலைத்தளத்தில் அதிகமான நெகட்டிவ் கருத்துக்களை பெற்றுக் கொண்டிருக்கிறது.
அறம் எங்கே செல்லுபடியாகும்? கமல் வெளியிட்ட பதிவை கலாய்க்கும் நெட்டிசன்கள்... குவியும் கருத்துக்கள்

எதிர்பார்க்காத கடைசி நேரம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி பெரும் பரபரப்பாக எதிர்பார்ப்புக்க பட்ட நிகழ்வில் ஞாயிற்றுக்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில் முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்து இரண்டு நாட்கள் ஆனாலும் சமூக வலைத்தளத்தில் இந்த நிகழ்ச்சியை பற்றி பல்வேறு தரப்பட்ட ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அசீம் மற்றும் விக்ரமன் இருவருக்கு உடைய ரசிகர்களும் தொடர்ந்து கருத்து மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே அதிகமான நெகட்டிவ் கருத்துக்களை பெற்றுக்கொண்டு அதிகமாக கமல் இடம் திட்டு வாங்கிக் கொண்டிருந்த போட்டியாளர் என்றால் அது அசீமாகத்தான் இருக்க முடியும்.

இரண்டு விதமான கருத்துக்கள்
அசீம் தன்னை சக போட்டியாளர்கள் யாரும் எதிர்த்தாலும் அவர்களை தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி அடுத்தவர்களின் மனம் புண்படும்படி நடந்து கொண்டு, பாடி லாங்குவேஜ் காட்டி பலரையும் வெறுப்படைய செய்து கொண்டிருந்தார். ஆனாலும் அடுத்தவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஓடிவரும் முதல் நபராக இவர் இருப்பதாலே இவருக்கு அதிகமான ரசிகர்கள் ஒரு பக்கம் உருவாக தொடங்கிவிட்டனர். ஆனால் அசீம் என்னதான் உதவி செய்தாலும் அடுத்த நேரத்தில் செய்யும் செயல்கள் எல்லாம் வெறுப்படைய செய்யும் விதமாக இருக்கிறது என்று இவரை எதிர்க்கும் ரசிகர்கள் பலர் கருத்து கூறிக் கொண்டிருந்தனர்.

மரியாதை முக்கியம்
இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு முறையும் சுமார் 11 முறை நாமினேஷனில் அசீம் வந்திருக்கிறார். ஆனால் ஒவ்வொரு முறையும் அசீம் பாதுகாக்கப்பட்டு இருக்கிறார். அதுவும் அன் அபிஷியல் ஓட்டுங்கில் அதிகமான வாக்குகள் இவர்தான் பெற்றிருக்கிறார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது. என்னதான் இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக இருந்தாலும் சக போட்டியாளர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டு, அடுத்தவர்கள் தன்னை நீ வா போ என பேசக்கூடாது என்று அதிகாரம் செய்யும் இவர், தான் அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுக்க நினைப்பதே இல்லை. பல நேரங்களில் அசீம் வாடி போடி என்றும் வாடா போடா என்றும் போட்டியாளர்களை மிரட்டும் வகையில் பேசி இருக்கிறார் என்று இவரை இவருக்கு எதிராக பல்வேறு கருத்துக்கள் குவிந்து வந்தது.

அக்ரீமெண்ட் முடிந்ததா
ஆரம்பத்தில் இருந்து அசீம் டைட்டில் ஜெயிக்க வாய்ப்பே இல்லை. அசீமிற்க்கு டைட்டில் கொடுத்தால் அது தப்பான முன் உதாரணமாக மாறிவிடும் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் எல்லாருடைய கருத்தும் பொய்யாகும் வகையில் இவருக்கு திடீரென டைட்டில் கொடுக்கப்பட்டது. அதற்குப் பிறகு சமூக வலைத்தளத்தில் அதிகமான கருத்துக்கள் அசீமை பற்றி குவிந்து வருகிறது .ஆனால் டைட்டில் ஜெயித்த பிறகு அசீமிற்கு ஆதரவாக குரல் கொடுத்து கொண்டிருந்த ரசிகர்களில் அதிகமானோர் காணவில்லை. தொடர்ந்து ட்ரெண்டிங்கில் விக்ரம் ரசிகர்கள் தான் விக்ரமனுக்கு ஆதரவாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதை குறித்து நெட்டிசன்கள் பலரும் அப்போ ஆரம்பத்தில் இருந்து ரசிகர்கள் சந்தேகப்பட்டது சரியாக போய்விட்டதா? PR டீமின் அக்ரிமெண்ட் 106 நாளோடு முடிஞ்சிருச்சு போல, டைட்டில் ஜெயித்த பிறகும் அவர் பெயர் கூட பெருசா ட்ரெண்ட் ஆகாமல் இருக்கிறது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.