புது வேலையை தொடங்கிய கன்னிகா.. டெடிகேஷன் வேற லெவல்.. வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: கன்னிகா ரவி தன்னுடைய புது வேலையை தொடங்கி இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
நடிப்பு மட்டுமல்லாமல் ஓவியம், சமையல், சிலம்பம்,இன்னும் பல திறமைகளில் மின்னிக் கொண்டிருக்கும் கன்னிகா ரவியை பார்த்த ரசிகர்கள் சிலாகிக்க தவறவே இல்லையாம்.
பல நாட்களுக்குப் பிறகு புது ஓவியம் ஒன்றை வரைய தொடங்கியிருக்கும் கன்னிகாவின் லேட்டஸ்ட் வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

சினேகனின் காதல் மனைவி
பாடலாசிரியர் சினேகனின் காதல் மனைவியான கன்னிகா ரவி சுத்தமான தமிழ் பெண் என்பது அனைவருக்குமே தெரியும். இவர் அருப்புக்கோட்டையில் பிறந்து இருந்தாலும் இவருடைய தந்தையின் ஆசைக்காக சினிமா துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். சினிமாவில் மட்டுமல்லாமல் தற்காப்பு கலைகளையும் நன்கு கற்று தெளிந்து இருக்கிறார். இவர் காலேஜ் படிக்கும்போது இசையருவி சேனலில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

அழகான கூந்தல்
இவர் ஒரு தொகுப்பாளராக இருக்கும்போது கே பாலச்சந்திரனின் ஆச்சரியக்குறி சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பை விட்டுவிடாமல் இவரும் முதல் சீரியலில் காலடி எடுத்து வைத்த பிறகு இவருக்கு பல சீரியல்கள் வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருந்தது. இந்த நேரத்தில்தான் இவர் அழகான கூந்தலை வைத்திருப்பவருக்கான அழகி பட்டம் பெற்றிருக்கிறார். இந்த பட்டத்தை வெற்றி பெற்ற பிறகு இவருக்கு பல விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஷாம்பு மற்றும் சீயக்காய் போன்ற விளம்பரங்களில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வந்தது.

தனித்திறமைகள் அதிகம்
கன்னிகா ரவி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் கிடைக்கும் சிறு சிறு நேரங்களிலும் கூட தன்னுடைய திறமையை மேலும் மேலும் வளர்த்துக் கொள்வதில கவனமாக இருக்கிறார். புத்தகங்கள் எழுதுவது, சிலம்பம் சுற்றுவது, சமையல் செய்வது, ஓவியம் வரைவது என்று தனது தனித்திறமையை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கும் கன்னிகா தற்போது புதியதாக ஒரு ஓவியத்தை வரைய தொடங்கி இருக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் இவரை மெச்சி வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். பல நடிகைகள் லைக் பெறுவதற்காக அரைகுறை ஆடையோடு டான்ஸ் போட்டு வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் இவருடைய புதுவிதமான முயற்சி பலரையும் கவர்ந்து வருவதாக அனைவரும் கூறி வருகிறார்கள்.

வேற ரகம் தான்
கன்னிகா ரவி தற்போது வெளியிட்ட வீடியோவில் ரசிகர்கள் அந்த ஓவியத்தை முழுமையாக முடித்த படி தங்களுக்கு காண்பிக்க வேண்டும் என்று அன்பு கட்டளைகளை இட்டு வருகிறார்கள். திருமணத்திற்குப் பிறகு வீட்டையும் கவனித்துக் கொண்டு கன்னிகா நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்று இவருக்கு புகழ்ச்சி மழைகளை ரசிகர்கள் பொழிந்து வருகிறார்கள். இவருடைய நீண்ட கூந்தலுக்கு ரசிகர்களாக இருக்கும் பல பெண்கள் அந்த தலைமுடியின் ரகசியத்தை கேட்டு வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் இந்த வீடியோவில் கன்னிகா தலை முடிகளை அள்ளிக் கொண்டை போட்டுள்ளார். இதை பார்த்த சில ரசிகர்கள் இது எப்படி செய்ய வேண்டும் எங்களுக்கு இதையும் ஒரு வீடியோவாக போடுங்கள் என்று கேட்டு வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications