மார்கழி மக்கள் இசையில் கலக்கப்போகும் இசைவாணி... ரசிகரின் அன்பு வேண்டுகோளுக்கு கலக்கலான பதில்
சென்னை: மார்கழி மக்கள் இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இசைவாணி தன்னுடைய ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சென்னையில் இசைவாணி கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்களாம்.
தன்னுடைய திறமையை மீண்டும் நிரூபிக்க நேரம் கிடைத்து விட்டது என்று இசைவாணியின் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மார்கழி மக்கள் இசை
மார்கழி மாதத்தில் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது வழக்கமாக இருந்தாலும் தற்போது மார்கழியில் மக்கள் இசை கலை நிகழ்ச்சிகள் பா ரஞ்சித்,இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் இசைக் கலைஞர்களுடன் இணைந்து சிறப்பாக வழி நடத்தி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலையை ஜனநாயக படுத்தும் மார்கழியில் மக்கள் இசை கலைநிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு வருகின்றனர். இதில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இசைவாணியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்.

இசைவாணி சொன்ன மகிழ்ச்சி செய்தி
இசைவாணி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு கானா பாடகராக பலருக்கும் பரிச்சயமாகி இருந்தாலும், அவருடைய புகழை அடுத்து மேடைகளில் தூக்கி நிறுத்தியதில் பா. ரஞ்சித் முக்கியமான பங்கு இருக்கிறது. பா ரஞ்சித் அணியில் முக்கியமான ஒரு இடத்தை வகித்து தன்னுடைய திறமையால் பலருக்கும் பரிச்சயமாக மாறிக்கொண்டிருக்கும் இசைவாணி தற்போது தன்னுடைய ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு நல்ல செய்தியைக் கூறி இருக்கிறார். இவருடைய அடுத்த வெறித்தனமான பாடல் எப்போது வரும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியாக இருந்து வருகிறது.

பிக்பாஸ்க்கு பிறகு முதல் நிகழ்ச்சி
பிரபலங்கள் என்றாலே ஒரு சிலருக்கு படித்தவராக இருந்தாலும் பலருக்கும் பிடிக்காமல்தான் இருந்து வரும். அந்த மாதிரிதான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு இசைவாணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையைக் காட்டவில்லை என்று பல்வேறு குறைகளை கூறி கொண்டிருந்த ரசிகர்கள் தற்போது இசைவாணி தன்னுடைய திறமையை காட்ட தொடங்கி விட்டார் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில் மார்கழி மக்கள் இசை நிகழ்ச்சி இந்த வாரம் முழுக்க நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதில் நானும் கலந்து கொண்டு உள்ளேன் என்று இசைவாணி கூறியுள்ளார்.

இசை வாணியின் பதில்
ரொம்ப சிறப்பாக போய்க் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் என்று ஜெய் பீம் சோ நடக்கப்போகிறது. அதில் முழுக்க முழுக்க பாபாசாகிப் பாடல்கள் தான் இடம்பெறும். அதுல நானும் பெர்பாமஸ் பண்ண போகிறேன். எல்லாரும் கண்டிப்பா வாங்க, இடம் எங்கனா, IITM ரிசர்ச் பார்க்...டைட்டில் பார்க் ஆப்போசிட் திருவான்மியூர் என்று இடத்தையும் குறிப்பிட்டு கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் எல்லாரும் வந்து இதில் கலந்து கொள்ளுங்கள். ஏன்னா!!?? நம்ம பார்க்க வேண்டிய ஒரு ஷோ, எல்லாரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். குடும்பத்தோடு வாங்க...கரெக்டா நாலு மணிக்கு வந்துருங்க..!! நான் இதில் கலந்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதைப் பார்த்த அவருடைய ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர். ஒரு ரசிகர் தன்னால் வர முடியாது, அதனால் லைவ் போட முடியுமா??என்று கேட்டிருக்கிறார். அதற்கு கண்டிப்பாக போடுகிறேன் தம்பி என்று இசைவாணி கூறியிருக்கிறார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications