சைத்ரா ரெட்டி கூறிய சந்தோஷமான செய்தி.. இதற்குள் இவ்வளவு நாள் ஆகிவிட்டதா??
சென்னை: சன் டிவியில் கயல் சீரியலில் நடிக்கும் சைத்ரா ரெட்டி தன்னுடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை கூறியிருக்கிறார்.
Recommended Video
வில்லியாக இதுவரைக்கும் நடித்து வந்த சைத்ரா தற்போது கதாநாயகியாக மாறி சொன்ன, நல்ல செய்திக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

கயல் ஆக அறிமுகம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடிகை சைத்ரா ரெட்டி தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இதை பார்த்ததும் ரசிகர்கள் பலர் இதை ஏற்கனவே நாங்கள் எதிர்பார்த்தோம் என்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதுவரைக்கும் வில்லியாக அனைவரையும் மிரட்டிய சைத்ரா தற்போது கதாநாயகியாக அனைவருடைய மனதையும் கவர்ந்து இருக்கிறார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தற்போது கயல் என்று இவரை செல்லமாக அழைத்து வருகின்றனர்.

ரசிகர்களை கவர்ந்த கேரக்டர்
பொதுவாக சன் டிவி சீரியல்கள் ரசிகர்களின் மத்தியில் எப்போதுமே தனி மதிப்பை பெற்றுவிடுகிறது. காலகாலமாக எப்போதுமே இந்த சேனலுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமான எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் தற்போது இந்த சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலுக்கு அதிகமான ஆதரவு கிடைத்து வருகிறது. குடும்ப சுமையை தன் தலையில் சுமந்து சுமை தாங்கும் கயலை பலருக்கும் பிடித்திருக்கிறது. தான் இந்த மாதிரி ஒரு சுமையை தாங்கும் கேரக்டராக இல்லை என்றாலும் கயல் போன்ற ஒரு பெண் தன் வீட்டில் இருக்காதா என்று பலரும் பீல் பண்ணி வருகிறார்கள்.

பிடித்த கேரக்டர் இதுதானாம்
சைத்ரா ரெட்டி முதல் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியலில் பிரியா கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்து விட்டார். இவருக்கு வெள்ளித்திரை நடிகைகளுக்கு தேவையான அம்சங்கள் இருந்தாலும் இவருக்கு சின்னத்திரை வாய்ப்புகள் தான் கிடைத்து வருகிறது. இவருக்கு ஹீரோயினியாக நடிப்பதை விடவும் வில்லி கேரக்டரில் நடிப்பது தான் மிகவும் பிடித்ததாம். அதில் தான் தன்னுடைய திறமையை சிறப்பாக வெளிக்காட்ட முடியும் என்பது இவருடைய கருத்து. அதனால்தான் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக அனைவரையும் மிரட்டி வந்தார்.

மகிழ்ச்சியான செய்தி
தற்போது சன் டிவியில் இவர் நடித்து வரும் கயல் சீரியல் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடி வெற்றி பெற்றுள்ளது. அதற்கு ரசிகர்களுக்கு நன்றி கூறிய இவர் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இது அற்புதமான பயணம், அதில் தனக்கு வெற்றி தந்த ரசிகர்களுக்கு மகத்தான ஆதரவளிக்கும் என் மக்களுக்கும், நீங்கள் இது போல் இந்த மகத்தான அன்பு தந்ததற்கு நன்றி என்று சைத்ரா கூறியிருக்கிறார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications