Keerthy Suresh: வீட்டில் விசேஷம்.. மகிழ்ச்சியாக கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ! குவியுது வாழ்த்து
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்தின் பிறந்த நாளில் போன வருடம் திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமணம் அந்த நேரத்தில் பெரிதாக பேசப்பட்டது. இந்த நிலையில் இன்று கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய காதலர் ஆண்டனி தட்டிலை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். ஆனாலும் அவருடைய திரைப்படங்கள் பெரியதாக வெற்றி பெறவில்லை. சமீபத்தில் வெளியான ரிவால்வர் ரீட்டா திரைப்படம் மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த படத்தை விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் பழனிச்சாமி தயாரித்திருந்தார்.

இன்று அதிகமான ரசிகர்கள் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள் சொல்லி வரும் நிலையில், இதே நாளில் தானே கீர்த்தி சுரேஷும் கல்யாணம் செய்து இருந்தார் அப்போ அவர் என்ன போஸ்ட் போட போகிறார் என்ற எதிர்பார்ப்போடு அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை அடிக்கடி எட்டிப் பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இப்போது ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் தன்னுடைய திருமணத்தின் போது நடந்த சில மகிழ்ச்சியான தருணங்களை ஒரு வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார். தன்னுடைய திருமணத்தின் அன் சீன் வீடியோவாக அது இருக்கிறது. அந்த வீடியோவில் கீர்த்தி சுரேஷ் டான்ஸ் ஆடி கொண்டிருப்பது, அதனுடைய கணவரோடு அவர் செய்யும் சின்ன சின்ன சேட்டைகள் போன்றவை அழகாக பதிவாகி இருக்கிறது. இதை பகிர்ந்து இருக்கும் கீர்த்தி சுரேஷுக்கு அதிகமான வாழ்த்துக்கள் குவிகிறது.
திருமணநாள் கொண்டாட்ட வீடியோவை பகிராத கீர்த்தி சுரேஷ் தன்னுடைய திருமணத்தின் போது எடுத்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். கல்யாண நாளை கூட வீட்டில் கொண்டாடாமல் அவ்வளவு பிஸியாக இருக்கிறாரா? என்று சில ரசிகர்கள் கமெண்ட் போட்டு இருக்கிறார்கள். இன்னும் ஒரு சில ரசிகர்கள் நீங்கள் என்றும் ஒற்றுமையாக வாழ வாழ்த்துகிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள். அது போல சில ரசிகர்கள் உங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருடம் ஆகிவிட்டது விரைவில் ஜூனியர் வருவார் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் தங்களுடைய கமாண்ட் போட்டு இருக்கிறார்கள்.
கீர்த்தி சுரேஷ் பற்றி அவருடைய கல்யாணத்திற்கு முன்பு அதிகமான வதந்திகள் பரவிக்கொண்டே இருந்தது. அவருடைய காதலர் யார் தெரியுமா? என்று பல தொழில் அதிபர்கள் முதல் நடிகர்கள் பெயர் வரைக்கும் அடிபட்டது. ஆனால் அப்போதெல்லாம் கீர்த்தி சுரேஷ் எந்த விளக்கமும் கொடுக்காமல் இருந்தார். கடைசியில் கீர்த்தி சுரேஷ் மற்றும் அவருடைய கணவர் குடும்பத்தில் இவர்களுடைய திருமணத்திற்கு சம்மதித்த பிறகு தான் காதல் ரகசியத்தை வெளியேவே சொன்னார்.
15 வருடங்களாக ரகசியமாக வைத்திருந்த காதல் கீர்த்தி சுரேஷுக்கு கடந்த வருடம் கல்யாணத்தில் கைகூடியது. இந்த திருமணத்தின்போது நடிகர் விஜய் தனி விமானத்தில் சென்று வாழ்த்து தெரிவித்திருந்தார். இது கூட அந்த சமயத்தில் பெரிதாக பேசப்பட்டது. அது போதாத குறைக்கு நடிகை திரிஷாவும் தானும் கீர்த்தி சுரேஷ் கல்யாணத்திற்கு போயிருக்கிறேன் என்பது போல சில ஸ்டோரிகளை பகிர அது கூட அந்த நேரத்தில் பல வதந்திகளையும் பரப்ப வைத்தது. இது எல்லாம் தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் இன்று கீர்த்தி சுரேஷ்க்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications