கிட்ட கிட்ட வந்த சத்யா.. அதுவும் பஸ்ஸூக்குள்ளே.. கன்னத்தில் மஞ்சள்.. அதைவிடுங்க.. அந்த சொகுசு பங்களா
கோவை திருவிழாவில் கொள்ளையடிக்க வந்த இளம்பெண்ணை போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்
கோவை: குடும்பத்தில் யாராவது ஒருவர் குற்றவாளியாக இருக்கக்கூடும்.. ஆனால், குடும்பமே குற்றவாளிகளாக இருந்து வந்திருக்கிறார்கள்.. கோவையை சேர்ந்த இந்த குடும்பத்தினர் யார்? இவர்கள் இப்போது பேசுபொருளாக என்ன காரணம்?
கோவையை அடுத்த துடியலூர் அருகே உள்ளது டீச்சர்ஸ் காலனி.. இங்கு வசித்து வருபவர் பெருமாள் பிரபு... இவருடைய மனைவி சந்திர பிரபா.. 35 வயதாகிறது..
சம்பவத்தன்று இவர் தன்னுடைய சகோதரியுடன் பஸ்சில் பூ மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தார்... அந்த நேரம் பஸ்சில் கூட்டம் அதிகளவு இருந்ததாக தெரிகிறது.

தள்ளுமுள்ளு
பூ மார்க்கெட் பஸ்ஸ்டாப் வந்துவிட்டதால், பஸ்சில் இருந்து இறங்க முயன்றார்.. ஆனால், கூட்ட நெரிசலில் அவரால் உடனடியாக இறங்க முடியவில்லை.. மிகவும் சிரமப்பட்டு, பஸ்ஸில் இருந்து இறங்க முயற்சிக்கும்போது, ஒரு பெண் கிட்ட வந்து நின்றார்.. டக்கென சந்திரபிரபா கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை பறித்துக்கொண்டு, கூட்டத்தையும் பிளந்துகொண்டு எகிறி குதித்து தப்பியோடினார்.. இதைப்பார்த்து சந்திரபிரபா அதிர்ச்சியடைந்து, அலறி கூச்சல் போட்டார்.. உடனே, பஸ் ஸ்டாப்பில் இருந்தவர்களும், பொதுமக்களும், அந்த பெண்ணை விரட்டிக்கொண்டே ஓடினார்கள்.

கிளம்பிய டவுட்
ஒருவழியாக அவரை மடக்கி பிடித்து, ஆர்எஸ் புரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர்... உடனடியாக விசாரணையும் ஆரம்பமானது.. சந்திரபிரபாவிடம் நகையை பறித்துக்கொண்டு ஓடியவர் பெயர் சத்யா.. 32 வயதாகிறது.. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர். கணவர் பெயர் வடிவேல் என்பது தெரியவந்தது... திருடிய நகையை சந்திரபிரபாவிடம் போலீஸார் ஒப்படைத்தாலும், சத்யாவின் மீது சந்தேகம் வலுத்தபடியே இருந்தது. அதனால், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை தீவிரப்படுத்தினர்.. எதிர்பார்த்ததுபோல, பல்வேறு திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

கும்பாபிஷேகம்
சத்யாவின் குடும்பமே திருட்டு குடும்பமாம்.. இவர்கள் யாருமே எந்த வேலைக்கும் போவது கிடையாது.. திருடுவது மட்டும்தான் தொழில்.. அதிலும் ஒரு கொள்கையை வைத்திருக்கிறார்கள்.. கோயில் திருவிழாக்களில் மட்டும்தான் திருடுவார்களாம்.. இதற்காக, தமிழகத்தில் உள்ள கோவில்களில் எந்தெந்த தேதியில் திருவிழா, கோயில் கும்பிபாபிஷேம் நடக்கிறது என்பதை எல்லாம் முன்கூட்டியேயே அறிந்து வைத்துக்கொள்வார்கள்.. அதற்கேற்றபடி வெளியூர் டூர்கள் பிளான்களை போடுவார்களாம்.. திருவிழாக்கள் நடைபெறும் நேரத்தில் அங்கு சென்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி, எவ்வாறு நகை பறிப்பில் ஈடுபடலாம் என்பதையும் முன்கூட்டியே திட்டம் வகுப்பார்கள்.

கன்னத்தில் மஞ்சள்
இதில், ஆளுக்கு ஒருபக்கம் டூர் பிளான் போட்டு தரப்படும்.. அதன்படி சத்யாவுக்கு, திருவண்ணாமலை, பழனி, திருப்பதி, கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் கோவில்களில் நடந்த திருவிழாக்களுக்கு வந்துள்ளார்.. அங்கு கைவரிசையும் காட்டியுள்ளார்.. ஆனால், திருவிழாவுக்கு போவதால், அதற்கேற்றபடி டிரஸ் செய்துகொண்டு போவாராம்.. நெற்றி முழுக்க சந்தனத்தையும், குங்குமத்தையும் பூசிக்கொள்வாராம்.. கன்னங்களிலும், மஞ்சள் பூசி, சந்தனம், குங்குமம் எடுத்து பெண் பக்தரை போல வேடமிட்டுகொள்வாராம்..

பண்ணை வீடு + சொகுசு பங்களா
பக்தி பரவசத்தில் ஆடிக்கொண்டே கூட்டத்தில் நுழையும்போதும், கண்களை மூடி பக்தர்கள் பரவசத்தில் இருக்கும் நேரத்திலும், நகை பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதில் அந்த குடும்பமே நல்ல வருமானத்தை சம்பாதித்துள்ளது.. அதாவது, தங்கள் சொந்த ஊரில், பண்ணை வீடும், சொகுசு பங்களாவும் கட்டி ஆடம்பரமாக வாழும் அளவுக்கு வருமானம் பார்த்திருக்கிறார்கள்.. கோவை கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா நாளைக்கு அதாவது புதன்கிழமை நடைபெற உள்ளது..

ஆன் தி வே
எப்படியும் இங்கும் பக்தர்களின் கூட்டம் அதிகளவு இருக்கும்.. அந்த கூட்டத்தை பயன்படுத்தி நகையை திருடுவதற்காக, டூர் பிளான்படி, கோவைக்கு வந்துள்ளார் சத்யா.. திருவிழாவுக்காக பஸ்ஸில் அப்போதுதான் வந்து கொண்டிருந்தார்.. அதுக்குள்ளே, "ஆன் தி வே"யிலேயே வேலையை காட்டிவிட்டார் சத்யா.. இப்போது இவ்வளவும் விசாரணையில் வாக்குமூலமாக தந்துள்ளார்..
நகை பறிப்பில் ஈடுபட்ட சத்யாவுடன் தொடர்பில் உள்ளவர்கள் யார்? யார்? மற்ற குடும்ப உறுப்பினர்கள் எந்தெந்த ஊர்களில் இப்போது டூர் சென்றிருக்கிறார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. சத்யாவிடமும் விசாரணை தொடர்கிறது.

பஸ் நெரிசல்
முன்னதாக சத்யா, போலீசில் தந்த வாக்குமூலம் இதுதான்: "நாங்கள் பழனி பெத்தநாயக்கன்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்க குடும்பத்தில் எல்லாருமே செயின் பறிப்பை தொழிலாக வைத்திருக்கிறோம்.. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் நடைபெறும் திருவிழா மற்றும் தேரோட்ட நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் பக்தர் போல செல்வோம்... அங்கு நகைகளை அணிந்து வரும் பெண்களை கண்காணித்து அவர்களை பின்தொடர்ந்து செல்வோம். பிறகு கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவர்களுக்கே தெரியாமல் செயினை பறித்து விட்டு சென்று விடுவோம்... அதன்பின்னர் நாங்கள் எங்கள் சொந்த ஊருக்கு சென்று நகைகளை விற்று ஆடம்பரமாக வாழ்வோம்.

வெள்ளோட்டம்
இப்படி தமிழகத்தில் திருவண்ணாமலை, பழனி, திருப்பதி, கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்த கோவில் திருவிழா மற்றும் தேரோட்ட நிகழ்ச்சியில் நாங்கள் கைவரிசை காட்டி உள்ளோம்... கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் நாளை நடக்க உள்ளது. அதற்காக, பெண்களிடம் நகை பறிப்பதற்காக நானும், என்னுடைய கணவர் மற்றும் உறவினர் பெண்கள் 3 பேர் என மொத்தம் 5 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பே கோவைக்கு வந்துவிட்டோம்.. இங்கு வந்து தேரோட்டம் செல்லும் இடங்களுக்கு சென்று எந்த இடத்தில் செயின் பறிக்க முடியும், செயினை பறித்த பிறகு எப்படி தப்பிப்பது என்பது குறித்து நோட்டம் போட்டோம்..

முன்னோட்டம் - கண்ணோட்டம்
இன்னும் சில பிளான்கள் இருந்ததால், அதற்காக நானும் என்னுடைய கணவரும் பஸ்சில் சென்றோம்... அப்போது அங்கிருந்த ஒரு பெண்ணின் கழுத்தில் செயின் கிடந்தது.. பஸ்ஸிலும் கூட்டம் அதிகமாக இருக்கவும், அதை பறித்து ஓட முயன்றேன்.. இப்போது சிக்கி கொண்டேன்" என்றார் சத்யா.. இதையடுத்து, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, ஆனந்த மூர்த்தி, ஏட்டுக்கள் கார்த்திக், பூபதி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதுடன், சத்யாவின் கணவரையும், அவருடன் வந்த 2 பேரையும் தேடி கொண்டிருக்கிறார்களாம்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications