பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகை விலாசினிக்கு ரகசிய மறுமணமா? என்ன நடந்தது? அவரே கொடுத்த விளக்கம்
சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றான 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' தற்போது திருப்பங்களுக்கு மேல் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. ஒருபுறம் மயில்-சரவணன் விவாகரத்து விளிம்பில் நிற்க, மறுபுறம் கதிர்-ராஜி திருமண ரகசியத்தால் பாண்டியன்-கோமதி தம்பதிக்குள் பெரும் போர் வெடித்துள்ளது. இந்த பிரச்சனைகளுக்கு நடுவே, ராஜி-கதிர் இருவரும் சென்னையில் மகிழ்ச்சியாக வலம் வருவது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலைத் தருகிறது.
ஆனால், சீரியல் கதையை விட இப்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருவது அந்த தொடரில் நடிக்கும் ஒரு நடிகையின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திதான்.

யார் அந்த நடிகை
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் குழலி கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் விலாசினி. இசைஞானி இளையராஜாவின் உறவினரான இவர், ஒரு சிறந்த பாடகி மற்றும் பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்த டப்பிங் கலைஞரும் கூட.
வைரலாகும் மறுமணப் பேச்சு
சமீபகாலமாக விலாசினிக்கும், பிரபல சின்னத்திரை நடிகர் மற்றும் மிமிக்ரி கலைஞரான ஆதவனுக்கும் ரகசியமாக மறுமணம் முடிந்துவிட்டதாகத் தகவல்கள் உலா வருகின்றன. இதற்கு முக்கியக் காரணம், இருவரும் ஒரு குழந்தையுடன் பிறந்தநாளைக் கொண்டாடியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியானதுதான். "இருவரும் இணைந்து புது வாழ்வைத் தொடங்கிவிட்டார்களா?" என ரசிகர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று விலாசினி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்திருந்தார். இவர் இதுபோல இதற்கு முன்பும் சில நேரங்களில் லைவில் ரசிகர்களுடன் பேசி இருக்கிறார். அதேபோல இப்போது பேசும்போது ஒரு ரசிகர், "உங்களுக்கு இரண்டாவது கல்யாணம் முடிந்து விட்டதா..?" என்று கேட்டார். அதற்கு விலாசினி, "நான் எப்போதாவது எனக்கு கல்யாணம் முடிந்து விட்டது என்று சொன்னேனா? நான் அப்படி சொல்லாத போது எதற்காக நீங்க மறுபடியும் மறுபடியும் இப்படி கேட்கிறீங்க என்று எனக்கே தெரியல" என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

விலாசினி ஒரு குழந்தையுடன் பிறந்தநாள் கொண்டாடியதை பார்த்ததும் அது ஆதவன் மற்றும் விலாசினி இருவருக்கும் பிறந்த குழந்தை என்று சோசியல் மீடியாவில் சிலர் வதந்தி பரப்பி வர, அதை விலாசினியின் ரசிகர்கள் மறுத்து இருக்கின்றனர். விலாசினி தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார் அப்படி இருக்கையில் அவர் கர்ப்பமாக இருந்தால் தான் தெரிந்திருக்குமே? எதற்காக ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தேவையில்லாத வதந்திகளை பரப்புகிறார்கள் என்றும் சிலர் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
ஏற்கனவே விலாசினிக்கு திருமணம் முடிந்து விவாகரத்து ஆகிவிட்டது. முதல் திருமண வாழ்க்கையில் தன்னுடைய வயிற்றில் இருந்த இரண்டு குழந்தைகளை நான் இழந்துவிட்டேன் என்று பல இன்டர்வியூக்கலில் கண்ணீருடன் பேசி இருக்கிறார். இதனால் இவர் இன்னொரு மறுமணம் செய்து தன்னுடைய வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடங்க வேண்டும் அது தவறு ஒன்றும் இல்லை என்றும் அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: கொடூரத்தின் உச்சத்துக்கு சென்ற விஜயா.. மயங்கி விழுந்த ரோகிணி! முத்து வீட்டுக்கு வந்த நபர் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications