Pandian Stores 2 serial: மீனாவிடம் போனில் கெஞ்சிய மயில்! பாண்டியன் எடுத்த முடிவு! கோபத்தில் கோமதி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2025 டிசம்பர் 22ஆம் தேதிக்கான எபிசோடில் மயில் தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மீனாவுக்கு போன் செய்து கெஞ்சுகிறார். அதற்கு மீனா என்ன பதில் சொன்னார் என்று விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மயில் பற்றிய உண்மைகளை வீட்டில் சொன்ன சரவணன் முதல் முறையாக தன்னுடைய அப்பாவிடம் மனம் விட்டு பேசுகிறார். அப்போது நான் இதுவரைக்கும் உங்ககிட்ட எதையும் கேட்டதே இல்ல முதல் தடவை ஒன்று கேட்கிறேன் எனக்கு இவ கிட்ட இருந்து டைவர்ஸ் வாங்கி கொடுக்க இல்லன்னா நான் செத்துப் போயிருவேன் என்று சொன்னதும் மயில் பதறி போய் இருந்தார். ஆனாலும் அவருடைய அம்மா நான் எப்படியாவது உன்னை சேர்த்து வைக்கிறேன் என்று சொல்லி பாண்டியன் வீட்டில் இருந்து கூட்டிக்கொண்டு போகிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், மயில் செய்த பிரச்சனையால் கோமதி உட்பட வீட்டில் எல்லோரும் சோகமாக இருக்கின்றனர். அப்போது சரவணன், பாண்டியன் பக்கத்தில் வந்து எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்லப்பா. என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு சொல்லி தான் கல்யாணம் பண்ணி வச்சீங்க. ஆனா இதுக்கு மேல என்னால அவளோட வாழ முடியாது எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுத்துடுங்க என்று மீண்டும் சொன்னதும் குடும்பத்தினர் எல்லோரும் வருத்தப்படுகின்றனர்.
கோமதி என்னடா பேசுற என்று கேட்க, அதற்கு சரவணன் அவளுடன் சேர்ந்து வாழ்வதற்கு நான் தனியாவே இருந்துட்டு போறேன் என்று சொல்கிறார். அப்போது கதிர் உடனே எந்த முடிவும் எடுக்க வேண்டாம், கொஞ்சம் பொறுமையா யோசிச்சு முடிவெடுக்கலாம் என்று சொல்கிறார். அப்போது இதுவரைக்கும் பாண்டியன் மீது கோபத்தில் இருக்கும் செந்தில் பேச ஆரம்பிக்கிறார்.
நானும், கதரும் எங்களுக்கு பிடித்த பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு வந்தப்போ எவ்வளவு பேசினார்? இப்போ இவரு பார்த்து நடத்தி வைத்த அண்ணன் வாழ்க்கை என்ன ஆச்சு என்று குத்தலாக பேச, உடனே கோமதி கோபப்பட்டு திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது மீனம் முதல்ல வா கிளம்பி நம்ம வீட்டுக்கு போகலாம் என்று அங்கிருந்து வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போய்விடுகிறார்.
மறுபக்கத்தில் மயில் என் வாழ்க்கையே போச்சி அம்மா... டைவர்ஸ் வேணும்னு சொல்லுறாரு என்று புலம்பி கொண்டு இருக்க, அதற்கு பாக்கியம் அப்படியெல்லாம் எதுவும் நடக்காது, திரும்ப அந்த வீட்டில் உன்னை வாழ வைக்க போறேன் என்று ஆறுதல் சொல்கிறார். பிறகு மயில் மீனாவுக்கு போன் பண்ணி பார்க்கிறார். அப்போது மீனா செந்தில் உடன் வீட்டில் பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் போனை எடுக்காமல் கட் பண்ணி விடுகிறார்.
சிறகடிக்க ஆசை: ரோகிணி வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிய பிஏ.. முத்துக்கு தெரிய வரும் உண்மை!
மீண்டும் மீண்டும் மயில் போன் பண்ணி கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் எடுக்கிறார். அப்போது நீ இதுவரைக்கும் என்ன அக்கா அக்கா என்று சொல்லுவ இன்னைக்கு மாமா என்னை டைவர்ஸ் பண்றேன்னு சொல்றப்ப எல்லோரும் அமைதியாக இருக்கீங்க? அப்போ அவ்வளவுதானா...? என்று கேட்க, அதற்கு மீனா நீங்க இதையெல்லாம் என்கிட்ட கேட்கக்கூடாது சரவணன் மாமா கிட்ட தான் கேக்கணும் என்று சொல்லி போனை கட் பண்ணி வைத்து விடுகிறார்.
கடைசியாக பாண்டியன் கடைக்கு போகலாமா என்று கேட்க, சரவணன் போலாம் என்று சொல்கிறார். அதை பார்த்து கதிர் மற்றும் அரசி இருவரும் இன்னிக்கு கடைக்கு போகணுமா? அண்ணன் வீட்டில் இருக்கட்டுமே என்று சொல்கிறார்கள்.
அதற்கு பாண்டியன் பொழப்பை பாக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது கோமதி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் என்று சொல்லி பாண்டியனை தனியாக அழைத்துப் போகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது. மயிலுக்கு இனி மீனா ஹெல்ப் பண்ண போகிறாரா? அல்லது மயில் தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications