பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 : மீனா பற்றி செந்திலுக்கு தெரிய வந்த உண்மை.. கதையே மாறிப்போச்சு! கோமதி பாவம்
சென்னை: (Pandian Stores 2 serial Today Episode) விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் 2026 பிப்ரவரி 6ஆம் தேதிக்கான எபிசோடில், ஒருபக்கம் சென்னையில் கதிர் - ராஜி ஜோடியின் நெருக்கம் ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில், மறுபக்கம் திருச்செந்தூர் சம்பவத்தின் உண்மை செந்திலுக்கு தெரிய வந்ததால் குடும்பத்தில் புதிய திருப்பம் உருவாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடு
(Pandian Stores 2 serial Today Episode Update (Feb 6, 2026) )சென்னையின் தெருக்களில் ஜோடியாக பேசிக்கொண்டே நடந்து வரும் கதிர் - ராஜி, வழியிலேயே ஒருவரை ஒருவர் சீண்டும் ரொமான்ஸ் மோடில் இருக்கிறார்கள். ராஜியின் கிண்டல் கலந்த உரசல் கதிரை இன்னும் நெருக்கமாக இழுக்கிறது. "ரூமுக்கு வா, உன்னை கவனிச்சுக்குறேன்" என கதிர் சொல்வதும், அதற்கு ராஜி சிரிப்புடன் ரூமுக்கு வந்தா மட்டும் என்ன பண்ணிடுவே என்று கேட்க அதற்கு கதிர் கடுப்பாகிறார்.
பின்னர் ரூமுக்குள் சென்றதும், கதிர் ராஜியை அணைத்துக் கொண்டு, தன் மனதில் இருந்ததை வெளிப்படையாக சொல்கிறார். ஆரம்பத்தில் பிடிக்காம தான் கல்யாணம் பண்ணுனேன், இப்போது வாழ்க்கையில் எனக்கு யாரு ரொம்ப பிடிக்கும்னு கேட்டா, ஒரே நபர் ராஜி தான் என்று சொல்லுவேன் என சொல்கிறார், கதிரின் வார்த்தைகளால் உருகும் ராஜி, அவர்மேல் சாய்ந்து அந்த தருணத்தை பகிர்கிறார்.
திருச்செந்தூர் உண்மை
மற்றொரு பக்கம், செந்தில் வீட்டுக்கு வந்து கோமதியுடன் பேசும் போது, திருச்செந்தூரில் நடந்த விஷயத்தின் உண்மை வெளிவருகிறது. கதிர் ராஜி கல்யாணத்தில் மீனா மீது போடப்பட்ட குற்றச்சாட்டுகள் எல்லாம் தவறானவை என்றும், அந்த கல்யாணத்தை மாமாவுக்கு தெரியாமல் நடத்த வேண்டாம் என்று முதலில் எதிர்த்தது மீனா தான் என்றும் கோமதி தெளிவாக சொல்கிறார்.
ஆனால், தான் தான் துணிந்து அந்த திருமணத்தை நடத்தி வைத்ததாகவும், அதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மீனாவிடம் சத்தியம் வாங்கிக் கொண்டதாகவும் கோமதி கூறுகிறார்.
இந்த உண்மை தெரிய வந்ததும், இதுவரை நடந்த விஷயங்களை செந்தில் வேறு கோணத்தில் புரிந்து கொள்கிறார். மீனா மீது வந்த கெட்ட பெயருக்குக் காரணம் அவள் இல்லை என்பதும் அவருக்கு புரிகிறது.
மீனாவிடம் மன்னிப்பு கேட்கும் செந்தில்
உண்மை தெரிந்த உடனே செந்தில் நேராக வீட்டுக்கு வந்து மீனாவிடம், நான் உன்னை தப்பா நினைச்சுட்டேன் என்ன மன்னிச்சிடு என்று மன்னிப்பு கேட்கிறார், ஆனால் செந்தில் மீது கடுப்பாக இருக்கும் மீனா அதையெல்லாம் கேட்கத் தயாராக இல்லை. இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
அடுத்த எபிசோடில் என்ன?
செந்திலின் மன்னிப்பை மீனா ஏற்றுக்கொள்வாளா? கோமதி எழுதி வைத்துள்ள கடிதத்தை பாண்டியன் படித்து உண்மையை புரிந்து கொள்வாரா? சென்னையில் ரொமான்ஸ் மூடில் இருக்கும் கதிர் - ராஜி ஜோடி அடுத்து என்னபண்ண போகிறார்கள் என்ற இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் வரும் எபிசோட்களில் தெரிய வரும்.
-
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்?












Click it and Unblock the Notifications