சிவகார்த்திகேயன் போல சினிமாவில் யாருமே இல்லை! ராதிகா சொன்ன அந்த விஷயம், விஜய்க்கு தான் பதிலடியா!
சென்னை: தாய்க்கிழவி திரைப்படம் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகையான ராதிகா சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் வெற்றி விழாவில் நடிகை ராதிகா பேசியது தான் இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளதுடன், அறிமுக இயக்குநரான சிவக்குமார் முருகேசன் இயக்கியுள்ளார். குடும்ப உணர்வுகளையும் ஒரு பெண் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்களையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

நல்ல வரவேற்பு பெற்ற தாய் கிழவி
பிப்ரவரி 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான தாய் கிழவி படம் முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. வயதான பெண் கதாபாத்திரத்தில் ராதிகா நடித்த விதம் பாராட்டுகளை பெற்றுள்ளது.
ஒரு பெண் சமூகத்தில் தனியாக எப்படி போராடுகிறாள், வாழ்க்கையில் எத்தனை சிரமங்களை சந்திக்கிறாள் என்பதைக் காமெடியுடன் கலந்த உணர்ச்சிகரமான முறையில் படம் சொல்லியிருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.
வெளியான சில நாட்களிலேயே இந்த படம் வசூல் ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் கண்டது. தற்போது உலகளவில் சுமார் 55 முதல் 60 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெற்றி விழா கொண்டாட்டம்
படம் வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில், படக்குழுவினர் சமீபத்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் சக்சஸ் மீட் நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்து பேசினர். அப்போது பேசிய ராதிகா சரத்குமார் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன், இந்த படம் தனது மனதிற்கு மிகவும் பிடித்த கதையாக இருந்ததால் தான் உடனே நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறினார்.
"நான் எதையும் மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்ளும் மனிதர் இல்லை. ஆனால் இந்த கதையை கேட்டபோது எனக்கு மிகவும் பிடித்தது. 'சித்தி' சீரியலுக்கு பிறகு ஒரு பெண் தனியாக நின்று போராடும் கதையாக இது தோன்றியது. அதனால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்" என்று அவர் கூறினார்.
கிழவியை மையமாக வைத்து பல கதைகள்
மேலும் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு பல இயக்குநர்கள் கிழவி கதாபாத்திரங்களை மையமாக வைத்து கதைகள் கொண்டு வர ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் சிரிப்புடன் தெரிவித்தார்.
"நேற்று மட்டும் நான் 6 கதைகள் கேட்டேன். எல்லாமே கிழவியை மையமாக வைத்து தான் இருந்தது. அதை எல்லாம் 'ஸ்டாப்' என்று சொல்லி நிறுத்திவிட்டேன்" என்று ராதிகா காமெடியாக கூறினார்.
லாபத்தில் பங்கு பெற்ற முதல் நடிகை
இந்த நிகழ்ச்சியில் அவர் கூறிய மற்றொரு விஷயம் தான் தற்போது அதிகமாக பேசப்படுகிறது. "ஒரு நடிகையாக எனக்கு 48 வருட அனுபவம் இருக்கிறது. ஆனால் இந்த அளவுக்கு ஒரு படத்தின் லாபத்தில் பங்காக சம்பளம் கிடைத்தது இதுவே முதல் முறை. தமிழ் சினிமாவில் லாபத்தில் கிடைக்கும் பங்கில் சம்பளம் பெற்ற ஹீரோயின் நானாக தான் இருக்கலாம்" என்று ராதிகா சரத்குமார் கூறினார். இந்த விஷயமும் தற்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
டிக்கெட் விலை குறித்து பேசிய ராதிகா
அதே நிகழ்ச்சியில் டிக்கெட் விலை குறித்து பேசிய அவர் கூறிய கருத்தும் தற்போது பெரிய விவாதமாக மாறியுள்ளது. "நியாயமான விலையில் டிக்கெட்டுகளை விற்றும் இந்த படம் 60 கோடி வசூல் செய்துள்ளது. சில பெரிய ஹீரோக்களின் படங்கள் ரூ.1500 முதல் ரூ.2000 வரை அதிக விலையில் டிக்கெட்டுகளை விற்று பெரிய வசூலைக் காட்டுகின்றனர். ஆனால் நாங்கள் டிக்கெட் விலையை நியாயமாக வைத்து வெற்றி பெற்றுள்ளோம். இதுதான் உண்மையான வெற்றி" என்று அவர் கூறினார்.
விஜய்யை கலாய்த்தாரா? - ட்ரோல்
ராதிகா கூறிய இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் விவாதமாகி வருகிறது. காரணம், சமீப காலங்களில் சில பெரிய நடிகர்களின் படங்களுக்கு அதிக விலையில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக பல விமர்சனங்கள் எழுந்திருந்தன.
அதனால் ராதிகா சொன்ன "பெரிய ஹீரோக்கள்" என்ற குறிப்பு யாரை பற்றி என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக சிலர் இது நடிகர் விஜய் குறித்து தான் கூறப்பட்டதாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தை வைத்து சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் உட்பட பலரும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
"பெரிய ஹீரோக்கள் என்று ராதிகா சொன்னது யாரை குறித்தது? அது விஜய்யை தான் கலாய்த்து சொன்னாரா?" என்ற கேள்வியும் ரசிகர்களிடையே அதிகமாக பேசப்படுகிறது.
சமூக வலைதளங்களில் வைரல்
இதனால் தற்போது தாய் கிழவி படத்தின் வெற்றியோடு சேர்ந்து, ராதிகா சரத்குமார் கூறிய இந்த கருத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒருபுறம் படத்தின் வெற்றி கொண்டாடப்பட்டு கொண்டிருக்க, மறுபுறம் அவர் கூறிய "பெரிய ஹீரோக்கள்" குறித்த கருத்து புதிய சர்ச்சையாக மாறியுள்ளது. இதனால் இந்த விவகாரம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் விவாதமாகி வருகிறது.
-
நீட் கோச்சிங் கொடுக்கும் பள்ளிக்கு.. ரூ.20 கோடி கடன் கொடுத்த விஜய்? வெளியான ஷாக் தகவல்! -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
’ஆங்கிலோ இந்தியர்கள்’ நண்பரான விஜய் - பெரம்பூர் தொகுதி ஸ்பெஷல் தெரியுமா? -
கல்லூரியில் இருந்து டிராப் அவுட்.. 10, 12th தேர்வை தனித்தேர்வராக எழுதிய விஜய்.. வேட்புமனுவில் தகவல் -
அதிமுகவுக்கு ஆப்பு வைக்கப் போறாரு விஜய்! இப்பவே உஷாராவது நல்லது! அடித்துச் சொல்லும் ஜெ.வின் நிழல்! -
தவெக பூந்தமல்லி வேட்பாளருக்கு சிக்கல்.. பெண் அளித்த புகாரின் பேரில் பாலியல் வழக்கு பதிவு












Click it and Unblock the Notifications