"இரவின் நிழல்".. கலையாக பாருங்கள்.. கதைக்கு வேணும்னா நிர்வாணமாக நடிக்கவும் ரெடி.. ரேகா நாயர்
சென்னை: கதைக்கு தேவை என்றால் நிர்வாணமாகவும் நடிக்க நான் தயார் என நடிகை ரேகா நாயர் தெரிவித்தார்.
நடிகர் பார்த்திபன் நடித்து இரவின் நிழல் படம் அண்மையில் வெளியானது. இந்த படத்தில் ராணி என்ற கதாபாத்திரத்தில் சின்னத்திரை நடிகை ரேகா நாயர் நடித்திருந்தார்.
இந்த படத்தில் அவர் அரை நிர்வாணத்துடன் நடித்திருந்தார். இந்த படம் அனைவராலும் பாராட்டப் பெற்றது. அது போல் ரேகா நாயரின் ரோல் பலரால் பாராட்டப்பட்டது.

ரேகா நாயர்
ரேகா நாயர் மிகவும் தைரியத்துடன் இந்த படத்தில் இந்த ரோலில் நடித்திருப்பதாக பலர் பாராட்டினர். அதே வேளையில் ரேகா நாயரை திரை விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கடுமையாகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் விமர்சித்திருந்தார். இது தொடர்பாக போலீஸில் ரேகா நாயர், ரங்கநாதன் மீது புகார் கொடுத்திருந்தார்.

புகார்
இந்த புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் திருவான்மியூர் பீச்சில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வந்த பயில்வான் ரங்கநாதன் ஏதேச்சையாக ரேகா நாயர் நேருக்கு நேர் பார்த்துவிட்டார். உடனே நான் எப்படி நடித்தால் உனக்கென்ன வந்தது, நான் உன் மனைவியா இல்லை பொண்ணா?

கண்டபடி பேசுறியே
என்னை கண்டபடி பேசுறியே என் கணவர் துரத்திவிட்டால் நீ என்னை வச்சு காப்பாற்றுவியா என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். அப்போது ஒரு கட்டத்தில் இருவரும் கைகலப்பில் இறங்கினர். அங்கிருந்தவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் இதற்கு மேல் என்னை பற்றியோ நடிகைகளை பற்றியோ பேசினால் செருப்பு பிஞ்சிடும் என ரேகா நாயர் மிரட்டினார்.

பரபரப்பு
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ரேகா நாயர் கூறுகையில் ஒரு கலையை கலையாகத்தான் பார்க்க வேண்டும். நான் இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்ததால் எந்த அளவுக்கு பாராட்டுகள் கிடைத்ததோ அதே அளவுக்கு விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன.
Recommended Video

நிர்வாணமாக நடிக்க தயார்
அது மட்டுமல்லாமல் பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா என பலர் என்னை விமர்சித்து வருகிறார்கள். எனக்கு ஹீரோயினாக நடிக்க ஆசை இல்லை, எந்த ரோல் கொடுத்தாலும் நடிப்பேன். ஒரு பிச்சைக்காரியாகவோ விபச்சாரியாகவோ எதுவாக வேண்டுமானாலும் தயங்காமல் நடிப்பேன். கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக கூட நடிக்க நான் தயாராக உள்ளேன் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications