Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் திரையுலகில் சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வரும் விஷயங்களில் முக்கியமானது விஜய் மற்றும் திரிஷா தொடர்பான சர்ச்சை. குறிப்பாக, இருவரும் ஒன்றாக கலந்து கொண்ட திருமண விழாவைத் தொடர்ந்து கிளம்பிய விமர்சனங்கள், அதற்கு முன்பே பரவிய குடும்ப பிரச்சனை குறித்த தகவல்களுடன் சேர்ந்து பெரிய விவாதமாக மாறியது. அப்போது பலர் விஜயை விமர்சித்து பேசி இருந்தனர். அதில் சமுத்திரக்கனியும் ஒருவர். அது குறித்து சமுத்திரக்கனி இப்போது விளக்கம்.

Samuthirakani Vijay Trisha Tamil Cinema

விஜய் திரிஷா சர்ச்சை

விஜய் திரிஷா விவகாரம் சூடுபிடித்துக் கொண்டிருந்த நேரத்தில், நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி வெளிப்படையாக கருத்து தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் கூறிய கருத்துகள் நேரடியாக விஜயை விமர்சிப்பதாகப் பார்க்கப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் கலவையான கருத்துக்கள் எழுந்தன.

இயக்குனர் சமுத்திரக்கனியின் விளக்கம்

அப்போது ஏற்பட்ட சர்ச்சைக்கு பின்னர் அமைதியாக இருந்த சமுத்திரக்கனி, தற்போது அதைப் பற்றியே மீண்டும் ஒபனாக பேசியிருப்பது புதிய திருப்பமாகியுள்ளது. சமீபத்திய பேட்டியில் அவர் கூறும்போது, "அப்போது நான் பேசியது யோசித்து தான். என்ன மனதில் இருந்ததோ அதையே வெளியில் சொன்னேன். உள்ளே ஒன்று வைத்து வெளியே வேறொன்று பேசும் பழக்கம் எனக்கு இல்லை. அது சந்தோஷமாக இருந்தாலும் சரி, வலியாக இருந்தாலும் சரி, அப்படியே வெளிப்பட வேண்டும்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

வீடியோ பின்பு நடந்த சம்பவம்

மேலும், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய விதம் குறித்து பேசும்போது, "பலர் அதை வேறு கோணத்தில் எடுத்துச் சென்றார்கள். ஆனால் நான் அதை குறையாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் சொன்னது ஒரு அக்கறையால்தான். அதற்காக எனக்கு எந்த வருத்தமும் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதில் தற்போது மீண்டும் அந்த பழைய சர்ச்சையை உயிர்ப்பித்துள்ளது.

சமுத்திரக்கனி சொன்ன ரகசியம்

மேலும் சமுத்திரக்கனி பேசும்போது, நானும் என்னுடைய நண்பர்களும் அன்னைக்கு பேசிக் கொண்டு இருந்தோம். அப்போது அங்கிருந்த ஒரு தம்பி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் மூன்று கிலோ மீட்டருக்கு அங்கே கேமரா இருந்தாலே கண்டுபிடித்து விடுவோம் ஆனால் அந்த தம்பி என் கண் முன்னே வீடியோ எடுத்தது எனக்கு தெரியாது என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

அவர் வீடியோ எடுப்பது தெரிந்துதான் நான் அப்படி பேசினேன். நாங்கள் அதற்கு முன்பு நிறைய பேசினோம். கடைசியில் கொஞ்சம் பேசி அப்படியே முடித்தேன். அதை மட்டும் அவர் வீடியோவில் எடிட் செய்து கடைசியில் போஸ்ட் போட்டு விட்டார். அவர் வீடியோ எடுப்பது தெரிந்து நாங்கள் அவருடன் குரூப் போட்டோவும் எடுத்துக் கொண்டோம். ஆனாலும் அவர் வீடியோவில் அவருடைய வித்தைகளை காட்டிவிட்டார்" என்று சிரித்தபடியே சமுத்திரக்கனி பேசியிருக்கிறார்.

விஜயை சுற்றும் சர்ச்சைகள்

இதே நேரத்தில், விஜயை சுற்றி சமீபத்தில் உருவாகி வரும் விவகாரங்களும் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக அவரது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றிய விவாகரத்து குறித்த தகவல்கள், அதே சமயத்தில் திரிஷாவுடன் அவர் பொதுவிழாவில் கலந்து கொண்டது போன்ற சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பின.

ரசிகர்களின் மனநிலை

அதோடு, அரசியல் களத்தில் காலடி வைத்த பிறகு விஜயின் ஒவ்வொரு நடவடிக்கையும் அதிக கவனத்தை பெற்றுள்ளது. புதிய அரசியல் பயணம், அதனுடன் வரும் விமர்சனங்கள், ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகள் - இவை அனைத்தும் சேர்ந்து அவரை தொடர்ந்து செய்திகளில் வைத்திருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், சமுத்திரக்கனி அளித்துள்ள இந்த விளக்கம் ஒரு வகையில் பழைய சர்ச்சைக்கு பதிலாக இருந்தாலும், அது மீண்டும் விவாதத்தை அதிகரித்துள்ளது. விஜயின் தற்போதைய பயணம் சினிமாவை தாண்டி அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என பல தளங்களில் சோதனைகளை சந்தித்து வருவது தெளிவாகிறது.

மொத்தத்தில், இந்த விவகாரம் இன்னும் முழுமையாக அடங்கவில்லை என்பதே உண்மை. சமுத்திரக்கனி கூறிய இந்த நேரடி விளக்கம், ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்களில் மேலும் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் கவனிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+