கணவனுக்காக தன் கிட்னியை கொடுத்த கன்னியாகுமரி மனைவி.. பிறகு நடந்த சோகம்! சரிகமபாவில் அம்பலமான ரகசியம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவம்தான் சோசியல் மீடியாவில் பலரையும் வியக்க வைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரியை சார்ந்த ஒரு பெண் போட்டியாளரின் குடும்பத்தில் நடந்த சோகம் தான் பலரையும் பீல் பண்ண வைத்திருக்கிறது.
சரிகமப நிகழ்ச்சியில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய வாழ்க்கையில் சந்தித்த பல பிரச்சனைகளை பற்றி பேசி இருக்கிறார்கள். அதுபோலத்தான் தற்போதைய சரிகமப ஜூனியர் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 2025 டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது. இதில் கன்னியாகுமரியை சார்ந்த மித்ரா என்ற ஒரு மாணவியும் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் ஆடிஷனில் கலந்து கொள்ளும்போது தனியாகத்தான் கலந்து கொண்டார்.

மித்ராவின் அம்மாவும் அப்பாவும் வராமல் அவரது தனியாக வந்ததை பார்த்ததும் சைந்தவி என்ன விஷயம் என்று விசாரிக்க, அப்போதுதான் பலருக்கும் ஒரு அதிர்ச்சியான விஷயத்தை சொல்லி இருந்தார். அதாவது மித்ராவின் அப்பா வெளிநாட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். பிறகு அவர் சொந்த ஊருக்கு வந்த சில மாதங்களில் உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது.
அப்போது ஹாஸ்பிடலில் செக் பண்ணி பார்த்தபோது அவருக்கு கிட்னி செயலிழந்து விட்டது, உடனே மாற்று கிட்னி பொருத்த வேண்டும் என்று டாக்டர் அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் அப்படி யாரும் தமக்கு கிட்னி தரமாட்டார்கள். மாற்று கிட்னி பொருத்துற அளவிற்கு தன்னிடம் வசதியும் இல்லை தான் வெளிநாட்டில் ரொம்பவும் கஷ்டப்பட்ட வேலை தான் செய்து கொண்டு இருந்தேன் என்று சொல்லி இருக்கிறார்.
அந்த நேரத்தில் தான் அவருடைய மனைவி யாரும் செய்யத் துணியாத ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார். அதாவது தன்னுடைய கணவருக்கு தானே கிட்னி கொடுக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். முதலில் அவருடைய கணவரும் அதை ஏற்றுக்கொள்ளவில்லையாம். ஆனால் தன்னுடைய கணவர் வாழுற வரைக்கும் தனக்கு வாழ்க்கை வேண்டும் என்று அவர் விடாப்பிடியாக சொல்ல, பிறகு கணவரும் வேறு வழியில்லாமல் சம்மதம் சொல்லி இருக்கிறார்.
இப்போது மனைவியின் ஒரு கிட்னி கணவருக்கு பொருத்தி இருக்கிறார்கள். ஆனால் இதில் சோகம் என்னவென்றால் பொதுவாக கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யும்போது இரண்டு கிட்னிகளில் செயல் திறன் குறைவாக இருக்கும் கிட்னியை அடுத்தவர்களுக்கு டொனேட் பண்ணுவார்களாம். ஆனால் மித்ராவின் அம்மாவிற்கு அதற்கான அறுவை சிகிச்சை செய்யும்போது அந்த செயல் குறைவான கிட்னியை மாற்றும்போது அதில் சில சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் அதனால் அவரிடம் இருந்து நல்ல கிட்னியை எடுத்து அப்பாவுக்கு பொருத்தி இருப்பதாகவும் சொல்லியிருந்தார்.
இதனால் மித்ராவின் அம்மாவால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியவில்லை. அவருடைய உடலில் இப்போது செயல் குறைவான கிட்னி மட்டுமே இருப்பதால் அவரால் அதிகமாக சிரிக்கவோ, சந்தோஷப்படவும் முடியாது. தும்மலை கூட தாங்கிக்க முடியாத சூழ்நிலை இருக்கிறதாம். இது பற்றி ஏற்கனவே மித்ரா சரிகமப நிகழ்ச்சியில் பேசி இருந்தார். இப்போது முதல் முறையாக மித்ராவின் பெற்றோர் பல சிரமங்களை தாண்டி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அப்போது தங்களுடைய வாழ்க்கையில் நடந்த பல சோகங்களை பற்றியும் பேசி இருக்கின்றனர். இதை பார்க்கும் பலரும் இப்படியும் கணவன் மனைவி இருக்கிறார்களா? தற்போதைய சூழ்நிலையில் சில பெண்கள் சொந்த கணவனை கொலை செய்கிறார்கள், சில கணவன்கள் மனைவியை கொலை செய்கிறார்கள்.. ஆனால் தன்னுடைய கணவன் தான் தனக்கு முக்கியம் என்று உடலில் இருந்த ஒரு பாகத்தையே கணவனுக்காக கொடுத்துவிட்டு எவ்வளவு கஷ்டப்படுகிறாரே இந்த மனைவி என்று பலரும் கமெண்ட்ஸ் கொடுத்து வருகிறார்கள்.
அதுபோல இவர்களுக்கு உதவி செய்வதற்காக சிலர் முயற்சி எடுத்து இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் ஸ்ரீநிவாசன் சொல்லி இருக்கிறார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி மித்ராவின் குடும்பத்தில் அவருடைய பெற்றோருக்கு நல்லது நடந்து, அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்பதுதான் பலருடைய ஆசையாகவும், விருப்பமாகவும் இருக்கிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications