எதிர்நீச்சல் சீரியலை பங்கம் செய்த நெட்டிசன்கள்... வீடியோவை பார்த்து மிரண்டு போன சீரியல் நடிகர் பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலை தற்போது நெட்டிசன்கள் கலாய்த்து இருக்கிறார்கள்.

நெட்டிசன்கள் வெளியிட்ட வீடியோவை பார்த்த சீரியல் நடிகர் மிரண்டு போய் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதை பதிவிட்டு இருக்கிறார். இதை பார்த்த பலரும் சிரிப்பை அடக்க முடியாமல் திணறி வருகிறார்களாம்.

சன் டிவி சீரியல்

சன் டிவி சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பல நேரங்களில் நெடுந்தொடர்களாக இருந்து வரும் நினையில் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விடுகிறது. ஆரம்ப காலகட்டங்களில் சன் டிவிக்கு சீரியலுக்கு இணையாக எந்த டிவி சேனல்களும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு சீரியல்களும் ரசிகர்களை கவர்ந்து வந்தது. ஆனால் தற்போது சன் டிவி சீரியல்களை டிஆர்பி யில் முந்த வேண்டும் என்பதற்காக பிற சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு அதற்காக பார்த்து பார்த்து வேலை செய்து வருகிறார்கள். என்ன தான் புது சேனல்கள் பல வந்தாலும் தரமான சீரியல் எதில் வருகிறதோ அதில் தங்களது கவனம் இருக்கும் என்று ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் நிரூபித்து வருகிறார்கள். அந்த மாதிரி தற்போது எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலும் இருக்கிறார்கள்.

மிரட்டும் குணசேகரன்

மிரட்டும் குணசேகரன்

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரராக மாரிமுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய தம்பிகளை தன்னுடைய பாசப்பிடியை விட்டு விலகி விடக்கூடாது என்பதற்காக இவர் செய்யும் வில்லங்கங்களை ரசிக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர் எப்போதும் முறைத்த மாதிரியே தன்னுடைய முகத்தை வைத்துக்கொண்டு செய்யும் வில்லத்தனத்தை பார்த்து சிலர் இவரை திட்டி தீர்த்தாலும் இந்த சீரியலுக்காக பலர் காத்து இருக்கத்தான் செய்கிறார்களாம். சீரியலின் கதாநாயகியாக ஜனனி கேரக்டரில் மதுமிதா நடித்து வருகிறார்.

குணசேகரரின் அல்டிமேட் வசனம்

குணசேகரரின் அல்டிமேட் வசனம்

என்னதான் படித்த பெண்ணாக இருந்தாலும் குணசேகரன் வீட்டில் அனைவரும் வீட்டு வேலை செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள் இந்த நிலையில் ஜனனி வந்து இந்த வீட்டில் மாற்றத்தை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். தற்போது அதற்கான முன்னேற்றம் ஏற்படுவதாக இந்த சீரியல் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். ஆனாலும் என்னதான் ஜனனி குரலை உயர்த்தி பேசினாலும், இந்தா....மா இது எல்லாம் எங்க குடும்பத்துக்கு சரிப்பட்டு வராது. என்று குணசேகரன் அனைவரின் வாயையும் மூட வைத்து விடுகிறார். இதை பார்த்து நெட்டிசன்கள் கடுப்பாகி போயிருக்கிறார்கள்.

சிரிக்க வைக்கும் வீடியோ

இந்த வார எபிசோட் குணசேகரனை ஜனனி நடுத்தெருவில் வைத்து எதிர்த்து பேசி அவமானப்படுத்தி விடுகிறார். இந்த வேதனையை வீட்டில் சாமி போட்டோ முன்பு நின்று அவர் கூறி கதறுவதை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பேசும் மைண்ட் வாய்ஸ் ஆக நெட்டிசன்கள் ஒரு வீடியோவை கிரியேட் செய்து சமூக வலைத்தளத்தில் பரவ விட்டு இருக்கிறார்கள். இந்த வீடியோவை அந்த சீரியலில் நடிக்கும் கமலேஷ் பார்த்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழிக்கிற இமோஜியை வைத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு சிரிப்பதை தவிர கருத்து ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்று பலரும் சிரித்த இமோஜிகளை அனுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+