சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் 14ஆம் தேதிக்கான எபிசோடில், நீதிமன்றத்தில் ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மையால் விஜயாவுக்கு பெரிய பிரச்சனை வந்திருக்கிறது. அதே நேரத்தில் அண்ணாமலை மனோஜின் வாழ்க்கைக்கு ஒரு முக்கிய முடிவு எடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடின் (Siragadikka Aasai serial April 14 , 2026 episode) ஆரம்பத்தில், நீதிமன்றத்தில் மனோஜ் மற்றும் ரோகிணி இருவரிடமும் விசாரணை நடக்கிறது. அப்போது இடையில் விஜயா கத்தி பேச அதனால் நீதிபதி கடுப்பாகி விஜயாவை குத்தி விடுகிறார். பிறகு ரோகிணியிடம் விசாரிக்கும் போது ரோகிணி எனக்கு வருமானமே இல்லை. நான் ஆரம்பத்தில் கல்யாணம் நடந்ததைப் பற்றி குடும்பத்தில் சொல்லாமல் பொய் சொன்னேன் உண்மைதான் ஆனால் என்னை பற்றிய எல்லா உண்மைகளையும் என் புருஷனுக்கு தெரியும்.
ரோகிணி சொன்ன வார்த்தை
அவரிடம் நான் எந்த பொய்யும் சொல்லல என்று சொல்கிறார். அதோடு என் மாமியார் என்கிட்ட இருந்து அதிகமா பணம் வாங்கி இருக்காங்க. என்னோட பார்லர் கூட அவங்களுக்காக தான் விற்று கொடுத்தேன் என்று சொன்னதும் விஜயா அதிர்ச்சியாக, பிறகு நீதிபதி இப்போதைக்கு இந்த வழக்கில் எந்த தீர்ப்பும் சொல்ல முடியாது அதனால் ஆறு மாதத்திற்கு இந்த வழக்கை தள்ளி வைக்கிறேன் அதோடு ரோகிணி எந்த வருமானமும் இல்லாமல் இருக்கிறாங்க அதனால அவங்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் மனோஜ் கொடுக்கணும் என்று சொல்லிவிடுகிறார்.
அண்ணாமலைக்கு வந்த சந்தேகம்
இதைக் கேட்டு ரோகிணி சந்தோஷப்படுகிறார். விஜயாவும் மனோஜும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு அவர்கள் இருவரும் பேசும் போது இங்க நடந்த விஷயம் வீட்டுக்கு தெரிய கூடாது. அப்படி தெரிந்தால் நாளைக்கு எங்கேஜ்மென்ட் நடத்த முடியாது என்று விஜயாவும் மனோஜும் பிளான் போடுகின்றனர். பிறகு அடுத்த நாள் மனோஜ் எங்கேஜ்மென்ட்க்கு என்ன டிரஸ் போடலாம் என்று முத்துவும் மீனாவும் யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.
மனோஜ் சொன்ன விஷயம்
அந்த நேரத்தில் அண்ணாமலை வந்து எனக்கு மனசுக்கு சரியாக படல, நீ வக்கீலுக்கு போன் பண்ணி விவாகரத்து வழக்கு என்ன ஆச்சுன்னு விசாரி என்று சொல்கிறார். அப்போதும் முத்து வக்கீலுக்கு போன் பண்ண அவர் போனை எடுக்கவில்லை. இதனால் எங்கேஜ்மென்ட்காக எல்லோரும் கிளம்பி வந்து உட்கார்ந்து இருக்கின்றனர். அந்த நேரத்தில் எங்கேஜ்மென்ட் மோதிரத்தை காணவில்லை என்று மனோஜ் வந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் பரபரப்பாக எல்லோரும் தேடிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி போட்ட பிளான்.. செக் வைத்த ரோகிணி! அடித்து விரட்டிய மீனா! சந்தோஷத்தில் முத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
சூப்பர் சிங்கர் அருணா கல்யாணத்தில் சுவாரசியம்! ஒன்று சேர்ந்த விஜய் டிவி பிரபலங்கள்.. அதுவும் யாரெல்லாம்னு பாருங்க -
பரிதாப நிலையில் “எங்கேயும் காதல்” பட பாடகர்.. கேபிஒய் பாலா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ.. கலங்க வைத்த காட்சி -
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் ஏமாந்து நிற்கும் சீரியல் நடிகை.. கதறி அழுது வெளியிட்ட வீடியோ! வெளிவந்த ரகசியங்கள் -
திவாகருக்குள் தான் ஜாதி வெறி இருக்கு.. குக் வித் கோமாளியில் நடந்தது இதுதான்! கானா வினோத் ஆதங்கம் -
“குக் வித் கோமாளி” போட்டியாளர் மனைவியிடம் திவாகர் ஆபாசமாக அப்படி பேசினாரு! அதனால் தான் பிரச்சனை! மாகாபா விளக்கம் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி













Click it and Unblock the Notifications