Siragadikka Aasai today episode: வெடித்த சொத்து பிரச்சனை! கிரிஷ் சொன்ன உண்மை! ரோகிணி கழுத்தை நெரித்த மனோஜ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2025 டிசம்பர் 29ஆம் தேதிக்கான எபிசோடில் அண்ணாமலையின் சொத்துக்களை பிரிக்க வேண்டும் என்று மனோஜ் சொல்கிறார். இதனால் குடும்பத்திற்குள் பிரச்சனை வெடிக்கிறது. அப்போது கிரிஷ், மனோஜ் செய்த செயலை பற்றி மீனாவிடம் போட்டுக் கொடுக்கிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ்க்கு பிசினஸில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர் வாங்கிய 30 லட்சம் கடனுக்காக கடன் கொடுத்தவர் வீட்டிற்கே வந்து மிரட்டி விட்டு போயிருக்கிறார். இதனால் தன்னுடைய கடனை அடைப்பதற்காக வீட்டை பிரிக்க மனோஜ் சொல்கிறார்.

அதோடு அண்ணாமலை மனோஜ்க்காக சப்போர்ட் செய்து கையெழுத்து போட்டு கொடுத்திருப்பதால் குறிப்பிட்ட நாளுக்குள் பணத்தை தரவில்லை என்றால் இந்த வீட்டில் உள்ள ஒருவரை தூக்குவேன் என்று அந்த நபர் மிரட்டி இருக்கிறார். இதனால் மனோஜ் மீது முத்துவுக்கு கோபம் ஏற்படுகிறது. அப்போது மனோஜ் வார்த்தையை விட அதனால் கோபமான முத்து நீ அடங்க மாட்டியாடா உன்னுடைய பேராசைக்காக கடன் வாங்குவ, அதற்கு அப்பா பொறுப்பு ஏற்றுக்கொள்ளுமா? என்று கேட்கிறார்.
அதோடு இவனை முதலில் வீட்டை விட்டு வெளியே அனுப்பனும் என்று முத்து சொன்னதும், போதும் நிறுத்துடா பிசினஸ்னா இதெல்லாம் நடக்கத்தான் செய்யும், எனக்காக யாரும் கடனை எல்லாம் அடைக்க வேண்டாம் என்னோடதை என்கிட்ட கொடுங்க.. நானே அடைக்கிறேன் என்று கேட்க, உனக்கானதை கொடுக்கணுமா? என்னது? என்று ரவி கேட்க, சொத்தை பிரிச்சு எனக்கான பங்கை என்கிட்ட கொடுத்துடுங்க என்று சொன்னது எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இந்த சொத்தில் எனக்கு உரிமை இருக்கு, அதனால தான் கேட்கிறேன் என்று மனோஜ் சொன்னதும் முத்து அவருடைய சட்டையை பிடித்து அடிக்க போகிறார். அப்போது விஜயா அவர்களை பிரித்து விட்டு விட்டு அருகில் இருந்த ரோகிணியை திட்டுகிறார். உன்னால தான் இத்தனை பிரச்சனை வந்தது நீ தான் பணக்கார வீட்டு பொண்ணுன்னு சொல்லி ஏமாத்துன. நீ வாங்கி கொடுத்த ஆர்டர்னாலதான் என்னுடைய மகனுக்கு இவ்வளவு பெரிய நட்டம் வந்துடுச்சு என்று திட்டுகிறார்.

அதற்கு மனோஜ் அப்பா கிட்ட சொல்லி சொத்தை பிரிக்க சொல்லுமா என்று கேட்க, விஜயா அதெல்லாம் முடியாது என்று சொல்கிறார். பிறகு மனோஜ் ரூமுக்குள் வரும்போது அங்கு கிரிஷ் விளையாடிக் கொண்டிருக்க அதை பார்த்து கோபமான மனோஜ் கிரிஷை அடிக்கிறார். இதை பார்த்து ரோகிணி இப்ப எதுக்கு அவனை அடிக்கிற என்று கோபப்பட, உடனே கல்யாணி ஆவி தான் வந்துவிட்டது என்று நினைத்து மனோஜ் ரோகினி கழுத்தை நெரிக்கிறார்.
உடனே ரோகிணி பயந்து போய் கத்த, பிறகு மனோஜ் சமாளிக்கிறார். அதைத்தொடர்ந்து கிரிஷ் வெளியே வந்து ரூமுக்குள் நடந்த விஷயத்தை மீனாவிடம் சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications