சிறகடிக்க ஆசை: கோர்ட்டில் ஆதாரங்களை மனோஜ்க்கு எதிரா திருப்பிய ரோகிணி.. வசமா சிக்கும் விஜயா
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில் (Siragadikka Aasai serial today episode) 2026 பிப்ரவரி 10ஆம் தேதிக்கான எபிசோடில், மனோஜ் தாக்கல் செய்த விவாகரத்து வழக்கு இன்றைய எபிசோடில் நீதிமன்ற விசாரணைக்கு வருகிறது. மனோஜ் தரப்பில் ரோகிணிக்கு எதிராக சாட்சிகளை கொண்டு வந்து, வழக்கை தன் பக்கம் திருப்ப முயற்சி செய்யும் நிலையில், ரோகிணி திட்டமிட்டு வைத்திருந்த ராஜதந்திரம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், (Siragadikka Aasai serial Feb 10, 2026) நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியதும், வழக்கம்போல் நீதிபதி மற்றும் மனோஜ் தரப்பு வக்கீல் இடையே கலகலப்பான பேசி கொண்டு இருக்கின்றனர். வக்கீல் கணவருக்கு கையில் அடிபட்டதை பற்றி விசாரிக்கிறார். இதை பார்த்த ஸ்ருதி "கோர்ட்டில் இப்படி தான் பேசுவார்களா?" என்று ஆச்சரியப்பட, முத்து "இதுதான் ரியல், சினிமாவுல காட்டுற மாதிரி இல்ல" என்று விளக்குகிறார். இதன்பின்னர் விவாகரத்து வழக்கின் முக்கிய விசாரணை ஆரம்பமாகிறது.

மனோஜ் தரப்பில் முதலில் ரோகிணியின் தோழி வித்யாவை சாட்சியாக அழைக்கின்றனர். ரோகிணிக்கு எதிராக வித்யா பல குற்றச்சாட்டுகளை முன்வைக்க, உடனே ரோகிணி பதிலடி கொடுக்கிறார். வித்யா தன்னிச்சையாக பேசவில்லை, அவளுடைய கணவர் முருகனும், முத்துவும் சொல்லி தான் இப்படிப் பொய் சொல்ல வைத்திருக்கிறார்கள் என கூறி, வித்யாவின் கணவர் முருகனை சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்று கேட்கிறார்.
அதற்கு ஜட்ச் அனுமதி கொடுக்க, முருகனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கும் ரோகிணி, "முத்துவுக்காக நீங்க எதுவும் செய்வீங்களா?" என கேட்க, அதற்கு முருகன், முத்துவும் மீனாவும் தான் தங்கள் திருமணத்தை நடத்தி வைத்ததால், அவர்கள் சொல்வதை எதையும் செய்யத் தயங்க மாட்டேன் என்கிறார். இதை உடனே பயன்படுத்திக் கொள்ளும் ரோகிணி, "அவர்கள் சொன்னதால்தான் இவர்கள் இங்கே வந்து பொய் சாட்சி சொல்லுகிறார்கள்" என்று நீதிமன்றத்தில் வாதிடுகிறார்.
இதனைத் தொடர்ந்து மனோஜ் தரப்பில் கறிக்கடைக்காரர் மணியை சாட்சியாக அழைக்கிறார்கள். அவர் ரோகிணிக்கு எதிராக பேச முயற்சி செய்தாலும், ரோகிணி அவருடைய குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுக்கிறார். மேலும், "நேற்றுதான் மனோஜ் இவருக்கு பணம் அனுப்பியிருக்கிறார். இதனால் தான் இவர் பொய் சாட்சி சொல்ல வந்துள்ளார். வேண்டுமானால் அவருடைய மொபைலை சோதிக்கச் சொல்லுங்கள்" என்று நீதிபதியிடம் சொல்கிறார்.
இந்த இடத்தில் தான் ரோகிணி வைத்திருந்த ராஜதந்திரம் வெளிச்சத்திற்கு வருகிறது. நேற்று ஷோரூமில் ஆர்டர் தொடர்பாக பணம் அனுப்ப வேண்டும் என்று சொல்லி, மனோஜின் போனை வாங்கிய ரோகிணி, அந்த போனிலிருந்தே 10 ஆயிரம் ரூபாயை கறிக்கடைக்காரருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அந்த விஷயத்தை இன்றைய கோர்ட் விசாரணையில் ஆதாரமாக காட்டுகிறார்.
மனோஜின் போனை நீதிபதி வாங்கி சரிபார்த்த போது, உண்மையிலேயே கறிக்கடைக்காரருக்கு பணம் அனுப்பப்பட்டிருப்பது உறுதியாகிறது. "பணம் கொடுத்து சாட்சியை அழைத்தாயா?" என்று நீதிபதி மனோஜை கேட்க, மனோஜ் தப்பிக்க முயன்று ரோகிணி தான் போனை வாங்கி அனுப்பிவிட்டாள் என்று கூறுகிறார். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால், மனோஜ் திணறி நிற்கிறார்.
இதன் மூலம், ரோகிணி மீது மனோஜ் வைத்திருந்த குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் பலவீனமாகி, வழக்கின் திசையே மாறுகிறது. இன்றைய எபிசோட்டில், மனோஜ் தான் சாட்சிகளை பணம் கொடுத்து கொண்டு வந்ததாக நீதிமன்றத்தில் வெளிச்சத்திற்கு வர, ரோகிணி இந்த விவாகரத்து வழக்கில் இருந்து தற்காலிகமாக பெரிய பிரச்சனையிலிருந்து தப்பித்துவிடுகிறார்.
-
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: அஞ்சலி பற்றி பாண்டியன் கேட்ட கேள்வி! சரவணன் சொன்ன விஷயம்! மீனா கண்டுபிடித்த உண்மை -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications