சிறகடிக்க ஆசை: ரோகிணிக்கு எதிராக முத்து கண்டுபிடித்த ஆதாரம்.. குட்டையை குழப்பிய விஜயா.. ஸ்ருதி வைத்த செக்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 பிப்ரவரி 7ஆம் தேதிக்கான எபிசோடில் ரோகிணி மற்றும் மனோஜ் விவாகரத்து வழக்கில் முத்து மீனா ரோகிணிக்கு எதிராக சில ஆதாரங்களை திருட்டுகின்றனர். ஆனால் விஜயா சில சொதப்பல்கள் செய்து வைத்திருக்கிறார். என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் (Siragadikka Aasai serial Feb 7, 2026) எபிசோடின் ஆரம்பத்தில், முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செல்வத்திற்கு ஹெல்ப் பண்ணுவதால் அருணுக்கு இன்னும் கோபம் அதிகரிக்க தான் செய்யும் ஆனால் நாம தானே செல்வத்துக்கு ஹெல்ப் பண்ண வேண்டும் என்று முத்து சொல்லிக் கொண்டிருக்கிறார். பிறகு சீதாவிற்கு மீனா போன் செய்து அருண் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்று விசாரிக்கிறார். பிறகு அவன் உன்னை அடிச்சா எனக்கு உடனே கால் பண்ணு என்று சொல்கிறார்.

அடுத்ததாக முத்து - மீனா ரோகிணிக்கு எதிராக கோர்ட்டில் வலுவான சாட்சிகளை நிறுத்த திட்டமிடுகிறார்கள். அதற்காக வித்யாவை நேரில் சந்தித்து, இதுவரை ரோகிணி செய்த அனைத்து பொய்களையும் கோர்ட்டில் வெளிப்படையாக சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். முதலில் தயங்கிய வித்யா, "உண்மையை தான் சொல்ல சொல்றீங்கன்னா நாளைக்கு வந்து எல்லாத்தையும் சொல்லிடுறேன்" என்று சம்மதிக்கிறார்.
இதோடு மட்டுமல்லாமல், முன்பு 'மலேசியா மாமா' என்று நடித்த நபரையும் கோர்ட்டில் சாட்சியாக அழைக்க முத்து - மீனா திட்டமிடுகிறார்கள். இதை அறிந்த விஜயா, பார்வதி வீட்டிற்கு வந்து சிந்தாமணிக்கும் பார்வதிக்கும் இந்த விஷயத்தை சொல்லிவிடுகிறார். முத்து - மீனா வித்யாவை சாட்சியாக கொண்டு வர போகிறார்கள் என்ற தகவலும் ரோகிணியின் காதுக்கு போகிறது.
சிந்தாமணி போனை ஆன் செய்து அருகில் வைத்ததால், விஜயா பேசிய முழு விஷயத்தையும் ரோகிணி கேட்டு விடுகிறார். "இப்படி ஒரு பிளானா?" என்று அதிர்ச்சியடைந்த ரோகிணி, நாளைய டைவர்ஸ் கேஸில் இந்த சாட்சிகள் பெரிய பிரச்சனையை ஏற்படுத்துமோ என்று கவலைப்படுகிறார். இதனால், அடுத்த எபிசோடுகளில் ரோகிணி என்ன மாதிரி புதிய பொய்களை சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரிக்கிறது.

இதற்கிடையில், ரோகிணியின் அம்மா முத்து - மீனாவிடம் போய் உதவி கேள் என்று சொல்ல, "எனக்கு என் வாழ்க்கையை காப்பாத்திக்க தெரியும், நீ எதுவும் சொல்லாத" என்று கோபமாக பேசுகிறார் ரோகிணி. தன்னை யாரிடமும் தாழ்த்திக் கொள்ள விரும்பாத மனநிலையிலேயே அவர் இருக்கிறார் என்பதும் இங்கு வெளிப்படுகிறது.
அடுத்ததாக, முத்து - மீனா, வித்யா - முருகன், சந்தோஷ் ஆகியோர் சேர்ந்து மலேசியா மாமாவாக நடித்த நபரை நேரில் சந்தித்து, கோர்ட்டில் வந்து உண்மையை சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறார்கள். அவரும் அதற்கு ஒப்புக்கொள்ள, "இப்போ டைவர்ஸ் நிச்சயம் கிடைக்கும்" என்ற நம்பிக்கை முத்து - மீனாவுக்கு வருகிறது. ஆனால் இந்த ரகசியத் திட்டம் ஏற்கனவே ரோகிணிக்கு தெரிந்துவிட்டதால், அவர் இதை எப்படி சிதைக்கப்போகிறார் என்பதே சஸ்பென்ஸாக உள்ளது.

இது ஒருபக்கம் இருக்க, ஸ்ருதியின் கதையிலும் முக்கிய திருப்பம் வருகிறது. ஹோட்டலுக்கு வந்த ரவி, "இனிமேல் இங்கேயே வேலை பாக்குறேன்" என்று சொல்கிறார். ஆனால் நீத்துவின் பிரச்சனைக்கு உங்க அப்பா தான் பணம் கொடுக்கணும் என்று கண்டிஷன் போடுகிறார். இதனால் கடுப்பான ஸ்ருதி, "அப்படின்னா நீத்துவை நேரா வந்து என்னிடம் மன்னிப்பு கேக்கணும். நீ என்னை லவ் பண்ணலன்னு வீடியோ வெளியிடணும்" என்று செக் வைக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: அஞ்சலி பற்றி பாண்டியன் கேட்ட கேள்வி! சரவணன் சொன்ன விஷயம்! மீனா கண்டுபிடித்த உண்மை -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications