உங்க கூட சேர்ந்தாலே...பிரியங்காவை முகத்துக்கு நேரே திட்டிய தாமரை
சென்னை: கலகலப்பாக இருந்த தாமரை செல்வி தற்போது பிரியங்காவை முகத்துக்கு நேரே திட்டியதுதான் வைரலாக பரவி வருகிறது.
அடிச்சிக்கிறதும் கூடிக்கிறதும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு புதியது அல்ல ஆனால் தற்போது நடந்த விஷயம் ரசிகர்களை யோசிக்க வைத்திருக்கிறது.
ஏற்கனவே வேதனையில் இருக்கும் பிரியங்காவை தாமரையும் தன்னுடைய பங்குக்கு சிரிச்சுக்கிட்டே திட்டிவிட்டார்.

குழந்தை தனமான கேரக்டர்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னதான் நடக்குது என்று ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர். ஒருபக்கம் ஒன்றாக சேர்ந்து கூடி கும்மியடித்து ஜாலியாக இருக்கின்றனர். ஆனால் ஒரு சில நேரங்களில் சீரியஸாக பேசி விடுகின்றனர். இதில் எது உண்மையான கேரக்டர்?? எது பொய்யான கேரக்டர்?? என்பது ரசிகர்கள் புரிந்து கொள்ள முடியாமல்தான் இருந்து வருகின்றனர். ஆரம்பத்தில் இருந்த மாதிரி இந்த சீசன் இப்போது இல்லை என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.

பிரச்சனைகள் தொடங்கிவிட்டது
விஜய் டிவியில் தொகுப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரியங்கா, இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இவர் எப்போதுமே தன்னுடைய தனித்தன்மை மாறாமல் ஜாலியாகத்தான் இருந்து வருகிறார். ஆனால் ஒரு சில நேரங்களில் இவர் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் தான் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்து விடுகிறது. முதல் வாரத்தில் கலகலப்பாக இருந்த இந்த சீசன் இரண்டாவது வாரத்தில் பிரச்சனைகளில் அடி எடுத்து வைக்க தொடங்கி விட்டது. அதற்கு காரணத்தில் பிரியங்காவும் ஒருவர் தான். இவர் எதார்த்தமாக அடுத்தவர்களிடம் பேசுகிறேன் என சில நேரங்களில் பலருடைய மனதை காயப்படுத்தி விடுகிறார் என்று ரசிகர்கள் கூறிவிடுகின்றனர்.

தாமரையின் வெகுளித்தனம்
ப்ரியங்கா உடனே அடிக்கடி சுற்றிக்கொண்டிருக்கும் தாமரை செல்வியும் ரசிகர்களின் மத்தியில் நல்ல மதிப்பை பெற்றுவிட்டார். ஆரம்பத்தில் வெகுளித்தனமான பேச்சால் இவர் ரசிகர்களை கவர்ந்து விட்டாலும், அதற்குப் பிறகு இவர் உண்மையிலேயே இப்படித்தான் இருக்கிறாரா??அல்லது நடிக்கிறாரா??என்று பலபேர் யோசிக்கத் தொடங்கி விட்டனர். அதற்கு காரணம் அவருடன் நிகழ்ச்சியில் இருக்கும் சக போட்டியாளர்கள் தான். தாமரை வெள்ளந்தியாக இருப்பதைப் பார்த்து இப்படி எல்லாம் இருப்பார்களா என சிலர் பேச தொடங்கியதற்கு பிறகு ரசிகர்கள் பலருக்கும் இவர்மீது இதே சிந்தனை தொடங்கியிருக்கிறது.

பிரியங்காவின் சிறப்பு
தாமரை மன சோர்வாக இருந்த நேரத்தில் அவருக்கு ஆறுதல் கூறிய பிரியங்கா தற்போது குரூப் சேர்த்துக்கொண்டு விளையாடுகிறார் என்பது பலருடைய குற்றச்சாட்டாக இருந்தாலும், அவருடைய முகத்துக்கு நேராக நேற்றைய எபிசோட்டில் தாமரை பேசியதுதான் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உங்க கூட சேர்ந்தாலே விலங்காது என காமெடியாகவும் அதே சமயத்தில் அழுத்தமாகவும் கூறியதாக தாமரையைப் பார்த்து ரசிகர்கள் பலர் கலாய்த்து வருகின்றனர். ஆனால் இந்த மாதிரி தாமரை சொன்னதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் பிரியங்கா உதறித்தள்ளியது தான் அவருடைய சிறப்பு என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications