முதல்முறையாக கலாய்த்த பிக்பாஸ்.. மாட்டிக்கொண்ட நிரூப், பிரியங்கா,ராஜு.. பதிலுக்கு பதில் மெர்சல் தான்
சென்னை: இதுவரைக்கும் தன்னை கலாய்த்த போட்டியாளர்களை முதல்முறையாக பிக்பாஸ் கலாய்த்து தள்ளியுள்ளார்.
போட்டியாளர்களின் வழியிலே அவர்களுக்கு பதிலை கூறியுள்ள பிக்பாஸின் புதுமுறை ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்த முறை பிக் பாஸின் அதிரடி செயல்பாடுகள் பார்த்து அனைவரும் திகைத்துப் போயுள்ளனர்.

பிக் பாஸின் புது யுக்தி
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில், இந்த சீசனில் இன்னும் ஏழு போட்டியாளர்கள் மட்டுமே இருந்து வருகின்றனர். இவர்களில் யார் ஜெயிக்க போகிறார்கள் என்று ஒரு பக்கம் ரசிகர்களின் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இந்த வீட்டை விட்டு வெளியே சென்ற பிறகு என்ன செய்யப் போகிறீர்கள் என்று பிக்பாஸ் தனித்தனியாக அழைத்து அனைவருடைய விருப்பங்களையும் கேட்டு தெரிந்து கொண்டுள்ளார். இது புது உத்தியாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

நிரூப்க்கு மச்சான் ஆன பிக் பாஸ்
போட்டியாளர்கள் அனைவரையும் தனித்தனியாக அழைத்து பிக்பாஸ் பேசிக்கொண்டிருக்கும்போது முதல் ஆளாக வந்த நிரூப் முதல்முறையாக பிக்பாஸ் இடம் நான் இதுவரைக்கும் அடிக்கடி உங்கள மச்சான் கூப்பிடுவேன் தப்பா எடுத்துக்காதீங்க என்று கூறியிருக்கிறார். அதற்கு தனக்கே உரிய அந்த கண்ணீர் குரலோடு பிக் பாஸ் சரி மச்சான் போயிட்டு வா என்று கூறியிருக்கிறார். இதை கேட்டு நிரூப் மட்டுமல்லாமல் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களும் சிரித்துவிட்டனர். ஏற்கனவே பிக் பாஸுக்கு ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் பலவிதமான பெயர்களை வைத்துக் கொண்டிருக்கும் போது இது ஒன்றும் பெரியது அல்ல என்று நினைத்துவிட்டார் போல என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அமெரிக்க அசத்தலான வாழ்த்து
அடுத்ததாக வந்த அமீர் நான் வருங்காலத்தில் பிரபுதேவாவை போல வர வேண்டும் என்று எனக்கு வாழ்த்துக்கள் கூறுங்கள் பிக் பாஸ் என்று சொன்னதும், அதற்கு அடுத்த நொடியே நான் உங்களை நான் ஃபியூச்சர் பிரபுதேவா வாக பார்க்க விரும்பல, பியூச்சர் அமீர்னு மத்தவங்க சொல்றதை கேட்க விரும்புகிறேன். என்று தன்னுடைய விருப்பத்தை மட்டுமல்லாமல் வாழ்த்துக்களையும் கூறி அனுப்பியுள்ளார். அதற்கு அடுத்ததாக எப்போதும் தனக்கே உரிய நையாண்டி தனத்தோடு பிக்பாஸை கிண்டல் அடித்துக் கொண்டிருந்த பிரியங்கா உள்ளே வந்தார். இவர் என்ன செய்யப் போகிறாரோ என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஜாலியாக கலாய்த்த பிக் பாஸ்
ஆரம்பத்திலிருந்து பிக் பாஸை பெருசு என்று பிரியங்கா அழைத்து வருவார். இது ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றாலும், ஒரு சிலர் ஏதோ ஜாலியாகத்தான் இருக்கிறது என்று என்ஜாய் பண்ணி வந்தனர். ஆனால் கொஞ்ச நாட்களாக தற்போது அந்தப் பெயரை மறந்து இருந்த பிரியங்கா இன்று அந்த ரூமுக்குள் வந்ததும் என்ன பெருசு??என்று கேள்வியை எழுப்பியிருக்கிறார். அதற்கு கொஞ்சமும் சலைக்காமல் சொல்லுங்க சிறுசு..!!!என்று பிக்பாஸ் கூறியிருக்கிறார். ஆக இது என்னய்யா புதுக்கதை என்று நினைத்துவிட்டாரோ பிரியங்கா, என்னவோ தெரியல நன்றாக சிரித்து வைத்துள்ளார். அதற்கடுத்த வந்த ராஜுவையும் பிக்பாஸ் விட்டுவிடவில்லை. அவர் பேசி முடித்து வெளியே செல்லும் தருணத்தில் தொடர்ந்து ஃபன் பண்ணுங்க கோபால்..!!!என்று அவரையும் குறும்பால் சேட்டை செய்யத் தொடங்கியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications