யார் சொல்லியும் செய்யாததை, பிக்பாஸ்க்காக செய்த பெண்ணை இந்த வாரம் தூக்கிட்டாங்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் பெயரைப் பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

கடைசி வரைக்கும் இவர் பாதுகாப்பாக இருந்தாலும் கடைசியில் இந்த முடிவை பிக்பாஸ் எதற்காக எடுத்தது என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

துருதுருவென இருந்த போட்டியாளரை தூக்கி விட்டார்களே என்று சிலர் பீல் பண்ணி வருகின்றனர்.

வாய்ப்பில்லை ராஜா

வாய்ப்பில்லை ராஜா

பிக்பாஸ் போட்டி என்றாலே அதில் ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு வாரம் ஒரு போட்டியாளர் வெளியேறும் வகையில் தான் இருந்து வருகிறது. இதில் ஒரு சில சீசன்களில் மட்டும் குறிப்பிட்ட ஒரு சில வாரங்களில் எலிமினேஷன் இல்லாமல் இருந்திருக்கிறது. ஆனால் இந்த சீசனில் இதுவரைக்கும் எந்த ஒரு சூழ்நிலையிலும் எலிமினேஷன் இல்லாமல் இல்லை. ஆனால் கமல் பிறந்தநாள் வாரத்தில் எப்படியும் எலிமினேஷன் இருக்காது என்று போட்டியாளர்கள் ஒரு சிலர் உறுதியாக கூறி இருந்தனர். ஆனால் கடைசியில் அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது என்று ஆகிவிட்டது.

தொடரும் பெண் போட்டியாளர்கள் வெளியேற்றம்

தொடரும் பெண் போட்டியாளர்கள் வெளியேற்றம்

ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேறிக் கொண்டே இருப்பது வழக்கமாக ஒன்றாக இருந்தாலும், இந்த வாரம் வெளியேறும் போட்டியாளரின் பெயரை கேட்டதும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். என்ன இப்படி சொல்லிட்டீங்க என்று பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த சீசனில் இதுவரைக்கும் வெளியேறிய போட்டியாளர்களில் அதிகமானோர் பெண்கள்தான். அதுமட்டுமல்லாமல் அபிஷேக் வெளியேறி இருந்தாலும் மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு வந்து விட்டார். ஆனால் தற்போது மீண்டும் ஒரு பெண் போட்டியாளர் வெளியேறுவது நிகழ்ச்சிக்கு சுவாரசியத்தை குறைக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

 சொல்வதற்கு ஒன்றும் இல்லை

சொல்வதற்கு ஒன்றும் இல்லை

பல நேரங்களில் ஐக்கி பெர்ரி நிகழ்ச்சிக்கு சுவாரசியம் தரவில்லை என்று சக போட்டியாளர்கள் குற்றம்சாட்டப்பட்டு வந்தாலும் இவர் தன்னுடைய வேலையை சரியாக செய்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் இவருக்கு சப்போர்ட் கொடுத்து இருந்தனர். இந்த நிலையில் இந்த வாரம் வெளியேறப் போவது இவர்தான் என்று உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை இதைக் கேட்டதும் ஐக்கியின் ரசிகர்கள் இவர் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார், இவரை வெளியே தூக்கி விட்டால் நிகழ்ச்சி எப்படி இருக்குமோ என்று அதிர்ச்சியான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதிர்ச்சி கொடுத்துட்டாங்களே

அதிர்ச்சி கொடுத்துட்டாங்களே

நிகழ்ச்சியில் காலைவேளையில் ஒலிக்கும் பாடல்களில் முதலாவதாக தனது நடனத் திறமையை காட்டுவது ஐக்கியாகத்தான் இருந்துகொண்டிருக்கும். இவருடைய சுறுசுறுப்பைப் பார்த்து பலர் இவரை போல ஆட தொடங்கிவிடுவார்கள். அந்த அளவிற்கு சுறுசுறுப்பாக இருந்தாலும் இவர் ஒரு மருத்துவர், பாடகர், நடிகர், ஓவியக் கலைஞர் என பல திறமைகளை கைவசம் வைத்துள்ளார். எப்படியும் இவர் கடைசிவரைக்கும் இந்த நிகழ்ச்சியில் இருப்பார் என்று எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு இவருடைய வெளியேற்றம் கொஞ்சம் அதிர்ச்சிதான். இதுவரைக்கும் தனக்கு பிடித்து வைத்திருந்த முடி கலரை கூட தற்போது இந்த பிக்பாஸ் டாஸ்க்காக மாற்றிவிட்டார். இதனால் ஐக்கியின் ரசிகர்கள் இதுவரைக்கும் யாருக்காகவும் மாற்றாத முடி கலரை கூட பிக்பாஸாக்காக மாற்றியிருந்தார் ஆனால் கடைசியில் இப்படி ஆகி விட்டதே என்று கூறிவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+