விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தனது திரையுலக பயணத்தை முடிக்க உள்ளதாக அறிவித்திருப்பது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'ஜனநாயகன்' திரைப்படத்துடன் சினிமாவுக்கு விடை கொடுத்து, இனி முழுமையாக அரசியலில் ஈடுபட உள்ளார் என்ற தகவல் பரவலாக பேசப்படுகிறது.

நடிகர் ஷியாம் பேட்டி
இந்த முடிவு குறித்து நடிகர் ஷியாம் ஒரு பேட்டியில் பேசும்போது, வாரிசு படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த தருணங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாது. எனக்கு விஜயை ஆரம்பத்திலிருந்து பிடிக்கும். அந்த சூட்டிங் ஸ்பாட்டில் அவருடன் நிறைய பேசியிருக்கிறேன். அதற்கு பிறகும் பல நேரங்களில் பேசி இருக்கிறேன் ஆனால் அவர் திடீரென நான் ஜனநாயகம் படத்துடன் சினிமாவை விட்டு விலகப் போறேன் என்று அறிவித்தார். அதை கேட்டதும் எனக்கே அதிர்ச்சி தான்.
விஜய் சொன்ன விளக்கம்
அதனால் அவரிடமே அதைப் பற்றி கேட்டேன். அதற்கு அவர் ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களில் முழு கவனம் செலுத்த முடியாது என்பதால், அரசியலில் முழுமையாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் விஜய் இந்த முடிவை எடுத்தேன் என்று சொன்னார் என ஷியாம் பேசியிருக்கிறார். இந்த கருத்து, விஜய்யின் எதிர்கால நோக்கத்தை தெளிவாக காட்டுவதாக பார்க்கப்படுகிறது.
விஜய்யின் கடைசி படமாக கூறப்படும் 'ஜனநாயகன்' திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் வெளியானவுடன் பல சாதனைகளை முறியடிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதே நேரத்தில், சென்சார் தொடர்பான சில பிரச்சனைகள் காரணமாக படத்தின் வெளியீடு தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால், படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அரசியல் பயணம்
இதற்கிடையில், விஜய் தனது அரசியல் பயணத்திலும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவரது கட்சியான தமிழக வெற்றி கழகம் மூலம் பொதுக்கூட்டங்கள், மக்கள் சந்திப்பு, தேர்தல் பிரச்சாரம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார். அவரது பேச்சுகள் மற்றும் அரசியல் அணுகுமுறைகள் குறிப்பாக இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
விஜய் பற்றிய சர்ச்சை
ஆனால் இந்த பயணம் சர்ச்சைகளின்றி இல்லை. மனைவி சங்கீதா உடனான கருத்து வேறுபாடுகள் மற்றும் விவாகரத்து குறித்த தகவல்கள், நடிகை திரிஷா உடன் தொடர்பு குறித்த வதந்திகள், சொத்து விவரங்கள் வெளியானது, குடும்பத்தினருக்கு வழங்கிய கடன் விவாதங்கள், மகன் ஜேசன் சஞ்சய் குறித்து எழுந்த விமர்சனங்கள் என பல்வேறு விஷயங்கள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன.
பல ஆண்டுகளாக சினிமாவில் வெற்றி பெற்ற நடிகராக இருந்த விஜய், அந்த பயணத்தை விட்டு முழுமையாக அரசியலுக்கு திரும்புவது ஒரு முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது. இது அவரது வாழ்க்கையில் புதிய அத்தியாயமாக மட்டுமல்லாமல், தமிழ் அரசியலிலும் புதிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது.
மொத்தத்தில், 'ஜனநாயகன்' திரைப்படம் ஒரு சாதாரண வெளியீடு அல்ல. அது விஜய்யின் திரையுலக பயணத்திற்கு நிறைவுக் கட்டமாகவும், அரசியல் பயணத்திற்கு தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் ஒரு பக்கம் அந்த படத்தின் வெளியீட்டை காத்திருக்க, மறுபக்கம் அரசியல்வாதியாக விஜய் எப்படிப் பயணிக்கப் போகிறார் என்பதை ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.
-
எல்லாத்தையும் விட்டுட்டு வந்தாரா விஜய்? நல்ல கதையா.. இருக்கே! இதெல்லாம் கணக்குல வராதா? -
விஜய் தேர்தலில் தோல்வி அடைந்த பின்.. அந்த விஷயம் நடக்கும் பாருங்க.. அடித்து சொல்லும் பியூஷ் கோயல்! -
விஜய் பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவில் தவறு செய்திருந்தாலும்! அவரது வேட்புமனு ரத்தாகாதாமே! ஏன்? -
வேட்புமனு விஷயத்தில் பயங்கரமாக சொதப்பும் விஜய்.. எக்கச்சக்க பிழைகள்! நிராகரிக்க நிறைய வாய்ப்பு -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
தவெக தலைவர் விஜய் விஜயகாந்த் போல தாக்கத்தை ஏற்படுத்துவார்.. மதுரையில் டிடிவி தினகரன் பேட்டி -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
2026 தேர்தல் களம்.. மக்களுக்கு அட்வைஸ்! ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்.. அடுத்த பஞ்சாயத்து -
நடிகர் அரசியல்வாதியாக கூடாதா? அதுவும், ஓம் சக்தி... பராசக்தி டயலாக்.. வில்லங்க கேள்விக்கு MS பாஸ்கர் பதிலடி -
விஜயை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது! சின்ன வயசுல இருந்தே எனக்கு தெரியும்.. ஒய் ஜி மகேந்திரன் ஓபன் -
இனி நீங்க முதல்வரா? உங்க ஜோடி நடிகை முதல்வரா? கேள்விக்கு விஜய் கேரக்டரில் நடித்த நட்டி ஓபன் -
காதலர் தினம் பட ஹீரோயினி சோனாலிக்கு வந்த சிக்கல்.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன புகார்.. நடிகை கொடுத்த விளக்கம்














Click it and Unblock the Notifications