அசீம் ஜெயிக்க கூடாது என நினைத்த காரணத்தை பற்றி பேசிய விக்ரமன்.. அதே மாதிரி ஆயிடுச்சு என வருத்தம்
அசீம் பெண்களை தரக்குறைவாக பேசியதால் அவர் ஜெயித்தால் அதை ரசிகர்கள் சரி என்று நினைத்து விடுவார்கள். அதனால் ஜெயிக்க கூடாது என தான் நினைத்ததாக விக்ரமன் கூறி இருக்கிறார்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்குப் பிறகு விக்ரமன் முதல் முறையாக அசீம் பற்றி பேசியிருக்கிறார்.
அசீம் ஜெயிக்க கூடாது என்று பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே அதிகமான முறை விக்ரமன் பேசிக்கொண்டு இருந்ததற்கான காரணத்தை தற்போது விரிவாக பேசியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் ஜெயிக்கவில்லை என்றாலும் தனக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு மிகப்பெரியது என்று அதைக் குறித்து ரசிகர்களுக்கு நன்றி கூறியிருக்கிறார்.

விளம்பரத்திற்காக இருக்கலாமாம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு பிறகு விக்ரமன் தொடர்ந்து பல பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அவரைப் பற்றி எழுந்து வந்த பல்வேறு கருத்துகளுக்கு விக்கிரமன் தற்போது பதில் கொடுத்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் விக்ரமன் இருக்கும்போது அசீம் எதற்காக ஜெயிக்க கூடாது என்று நினைத்து கொண்டிருந்தார் என்று கேள்வி அதிகமாக எழுந்து வருகிறது. அதற்கு பிக் பாஸ் வீட்டிற்குள் அசீம் எதற்காக அப்படி ஒரு செயலை செய்து விளையாடினார் என்று எனக்கு தெரியாது. அவர் விளம்பரத்திற்காக அப்படி நடந்து கொண்டாரா? அல்லது அவர் கேரக்டரே அப்படியா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனாலும் அவர் பெண்களிடம் மரியாதை இல்லாமல் பேசியது எனக்கு அப்போது பிடிக்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

தவறான விஷயம்
அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் அசீம் எந்த மாதிரி நடந்து கொண்டார் என்று அனைவருக்குமே தெரியும். இது ஒரு தவறான முன் உதாரணம் அதனால் தான் தனக்கு டைட்டில் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இப்படி ஒரு கேரக்டரை அங்கீகாரம் செலுத்தும் விதமாக டைட்டில் கிடைத்துவிட்டால் அது தவறான முன் உதாரணமாக ஆகிவிடும் அவர் ஜெயித்தால் சமூகத்துக்கு எவ்வளவு பெரிய ஆபத்து ஆகிவிடும் என்று பயந்தேன். ஆனால் அது நடந்துடுச்சி. அவருக்கு டைட்டில் கொடுத்தது எந்த அடிப்படையில் கிடைத்தது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் ரசிகர்கள் அவரை ரசித்திருக்கின்றனர். அவரும் நல்ல மனிதர் தான் சில விஷயங்கள் செய்வதுதான் தவறாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

வருத்தம் ஒன்றும் இல்லை
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு அதிகமான ஆதரவு கிடைத்து வருகிறது. இது மிகப்பெரிய வெற்றி தான். அறம் எந்த இடத்திலும் தோற்கவில்லை குறிப்பாக பிக் பாஸ் வீட்டிற்குள் நான்தான் ஜெயிப்பேன் என்று அதிகமாக நம்பினேன். கடைசி வரைக்கும் அந்த ஒரு எண்ணத்தில் தான் இருந்தேன். ஆனால் நான் தோற்றது எனக்கு பெரிய வருத்தம் ஒன்றும் இல்லை. அது ஒரு அங்கீகாரம் அவ்வளவு தான். அது எனக்கு ரசிகர்களிடம் எனக்கு ஆதரவாக அதிகமாக கிடைத்திருக்கிறது. அதனால் எனக்கு அது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை ஆனால் தப்பான விஷயங்களை செய்து அடுத்தவர்களை தரக்குறைவாக பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த அங்கீகாரம் கிடைப்பதால் அதையே பலரும் பின்பற்றி விடக்கூடாது என்பதுதான் என்னுடைய வருத்தமாக இருக்கிறது என்று விக்ரமன் கூறி இருக்கிறார்.

ரிசல்ட்க்கு சம்பந்தம் இல்லை
உண்மையில் அந்த மேடையில் அறம் தான் ஜெயித்தது கமல் என்னோடு அருகில் இருந்து அறம் ஜெயித்தது என்று கூறியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதனால் நான் தோற்கவில்லை. அதுமட்டுமில்லாமல் மக்கள் அளித்த வாக்கிற்கும் இந்த ரிசல்ட்க்கும் சம்பந்தமே இல்லை என்று நான் நினைக்கிறேன். எனக்கு ஆதரவாக இருந்த மக்கள் எல்லோரும் செல்போன் கூட இல்லாத எளிய மக்கள்தான். அவர்கள் எப்படி போய் ஆன்லைனில் வாக்களிப்பார்கள். எனவே மக்கள் ஆதரவுக்கும் இந்த தீர்ப்புக்கும் தொடர்பு இல்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் அறம் வெல்லும் என்று நான் சொன்னேன் அசீம் பிக் பாஸ் வீட்டிற்குள் எப்படி இருந்தார் என்பதை வைத்து தான் அவருக்கு எதிராக பல ஹேஷ்டேக் பரவி வருகிறது என்று கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications