Year Ender 2025: 2025ல் மறைந்த திரை பிரபலங்கள்.. மறக்க முடியாத முகங்கள்! வருத்தத்தை ஏற்படுத்திய தருணம்
சென்னை: 2025 கடைசி மாதத்தில் இருக்கிறோம். இந்த வருடத்தில் பல பிரபலங்களை தமிழ் சினிமா இழந்திருக்கிறது. அதில் யாரெல்லாம் இந்த வருடத்தில் நம்மை விட்டு பிரிந்து இருக்கிறார்கள் என்று ஒரு ரிமைண்ட் பார்க்கலாம்.
நடிகர் மனோஜ் பாரதிராஜா
நடிகராகவும், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என்று பல முகங்களை கொண்ட பாரதிராஜாவின் ஒரே மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் இதய நோய் காரணமாக தன்னுடைய 48 வயதில் திடீரென காலமானார். அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இதய அறுவை சிகிச்சை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரவிக்குமார் மேனன்
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபலமானவர் ரவிக்குமார். 1970களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்து பிறகு குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். அவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் சென்னையில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக 71 வயதில் காலமானார்.
சூப்பர்குட் சுப்பிரமணி
உதவி இயக்குனராக சினிமாவில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய சூப்பர் குட் சுப்பிரமணி பிறகு நடிகராக மாறி இருந்தார். அதிலும் 2014 இல் வந்த பிசாசு, பரியேறும் பெருமாள், ஜெய் பீம் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்த சூப்பர் குட் சுப்பிரமணி கடந்த மாதம் பத்தாம் தேதி புற்றுநோய் காரணமாக 58 வயதில் காலமானார்.
நடிகை சரோஜாதேவி
தமிழ், கன்னடம் தெலுங்கு இந்தி என பல மொழிகளிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமான பழம்பெரும் நடிகை சரோஜாதேவி. இவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த ஜூலை 14ஆம் தேதி அன்று பெங்களூரில் உள்ள வீட்டில் உடல் நல பிரச்சனையால் 87 வயதில் காலமானார்.
ரோபோ சங்கர்
சின்னத்திரை வெள்ளி திரையில் பலருக்கும் தெரிந்த முகமாக இருந்த ரோபோ சங்கர் 46 வயதில் மரணமடைந்தார். அவர் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி உயிரிழந்தார். ஒரு படப்பிடிப்புக்காக சென்றிருந்தபோது திடீரென மயக்கமடைந்த நிலையில் அவரை ஆஸ்பிட்டலில் சேர்த்த போது அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.
நடிகர் அபினய் கிங்கர்
துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக அறிமுகமான நடிகர் அபிநய் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் பெரிய அளவில் அவருக்கு பிரபலம் கொடுக்கவில்லை. ஆனால் விளம்பரங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 10ஆம் தேதி அன்று 44 வயதில் மரணமடைந்தார்.
நடிகர் கோட்டா சீனிவாச ராவ்
தமிழில் சாமி திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்த நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் கடந்த ஜூலை 13ஆம் தேதி காலமானார்.
நடிகர் மதன் பாப்
நடிகர் அஜித், விஜய், ரஜினி, சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் மதன் பாப் கடந்த ஆகஸ்ட் இரண்டாம் தேதி தன்னுடைய 71 வது வயதில் காலமானார்.
இயக்குனர் வி சேகர்
பல குடும்பபாங்கான படங்களை எடுத்த வி சேகர் 74 வயதில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி உடல்நிலை குறைபாடு காரணமாக காலமானார். அவர் இறப்பதற்கு பத்து நாட்களுக்கு மேலாக ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஏவிஎம் சரவணன்
பல முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்த ஏவிஎம் ப்ரொடக்ஷன் சீன் தயாரிப்பாளர் சரவணன் கடந்த டிசம்பர் எட்டாம் தேதி உடல்நிலை குறைபாடு காரணமாக காலமானார்.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications