Year Ender: 2025-ஆம் ஆண்டு இல்லறத்தில் இணைந்த தமிழ் சின்னதிரை பிரபலங்கள்.. இத்தனை பேரா?
சென்னை: 2025 ஆம் ஆண்டு இறுதி கட்டத்திற்கு வந்திருக்கிறோம். இந்த வருடத்தில் பல மறக்க முடியாத சம்பவங்களை நினைவுபடுத்தி வருகிறோம். அதில் இந்த வருடத்தில் இல்லறத்தில் இணைந்த சின்ன திறை பிரபலங்கள் யார் யாரெல்லாம் என்று பார்க்கலாம்.
விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் உள்ளிட்ட முன்னணி தொலைக்காட்சிகளில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்ற பல சின்னதிரை நட்சத்திரங்கள் இந்த ஆண்டில் திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். அவர்களின் திருமண செய்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ரசிகர்களின் வாழ்த்துகளை குவித்தன.

பிரியங்கா தேஷ்பாண்டே - வசி திருமணம்
விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளராக இருக்கும் பிரியங்கா தேஷ்பாண்டே, 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரபல டிஜேவான வசி சாச்சியுடன் திருமணம் செய்து கொண்டார். மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடைபெற்ற இந்த திருமணம் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.

ஜிஷ்ணு மேனன் - அபியாத்ரா
சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமான நடிகர் ஜிஷ்ணு மேனன், தனது நீண்ட நாள் காதலியான அபியாத்ராவை 2025-ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார். கோயிலில் நடைபெற்ற இந்த திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

செம்பருத்தி புகழ் அக்னி
ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தியில் 'ஆதி' கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான நடிகர் அக்னி, 2025-ஆம் ஆண்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண விழாவில் சின்னதிரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

ஆஹா கல்யாணம் நடிகை அக்ஷயாவின் திருமணம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் தொடரில் மகாலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை அக்ஷயா, உதவி இயக்குநராக பணிபுரியும் ஜைனு ஜெய்யை 2025-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

பிக்பாஸ் புகழ் அமீர் - பாவனி திருமணம்
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அமீர் மற்றும் பாவனி, நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்த காதலை திருமணமாக மாற்றினர். 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.

விஜே சங்கீதா - அரவிந்த் சேஜு திருமணம்
வணக்கம் தமிழா நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே அறியப்பட்ட விஜே சங்கீதா, தனது நீண்ட நாள் காதலரான அரவிந்த் சேஜுவை 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

நடிகை ஸ்மிருதி காஷ்யப்
ரோஜா, கார்த்திகை தீபம் உள்ளிட்ட பிரபல தொடர்களில் நடித்த நடிகை ஸ்மிருதி காஷ்யப், அபிஷேக்கை 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் சின்னதிரை மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

ஆஹா கல்யாணம் ராம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் சீரியல் நடித்திருந்த ராம்- ரஞ்சினி என்பவரை திருமணம் செய்திருந்தார். ராம் ஆரம்பத்தில் கலைஞர் டிவியில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பிறகு ஆஹா கல்யாணம் சீரியலை தொடர்ந்து டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான ஹார்ட் பீட் வெப் சீரிஸிலும் நடித்திருந்தார். இவருடைய திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

-
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம்












Click it and Unblock the Notifications