வீடியோ காலில் மனைவி.. எந்த கணவனும் பார்க்க கூடாத கோலம்.. தமிழா தமிழாவில் கண்ணீர் விட வைத்த கதை
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தமிழா தமிழா நிகழ்ச்சியின் கடந்த வார எபிசோடில், "வாழ்க்கைத் துணை இறந்த பிறகு அதிகமாக கஷ்டப்படுவது கணவரா, மனைவியா?" என்ற தலைப்பில் நடைபெற்ற விவாதம் ரசிகர்களின் மனதை நெகிழ வைத்தது. இந்த விவாதத்தில் ஆண்கள் அணியில் கலந்து கொண்ட ஒரு இளைஞர், தன் மனைவி மறைவுக்கு பிறகு அனுபவித்து வரும் வலி, வெறுமை மற்றும் மனவேதனையை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார்.
தலைமுடியை வெட்டாமல் கொண்டை வைத்துக் கொண்டு, கையில் மனைவியின் பெயரை பச்சை குத்தியிருந்ததும், உடம்பில் மனைவியின் உருவத்தை பச்சை குத்தியிருந்ததும் அவரை பார்த்த அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. அவரின் வெளிப்படையான காதலும், மனைவியின் மீது வைத்திருந்த ஆழமான பாசமும், பார்வையாளர்களை கண்கலங்க வைத்தது.

கருத்தை உடைத்த மனிதர்
இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ஆவுடையப்பன்,"பொதுவாக காதலில் பெண்கள்தான் அதிகம் உறுதியானவர்கள் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால் அந்த கருத்தை இந்த இளைஞர் உடைத்துள்ளார். ஆண்களும் காதலில் எவ்வளவு ஆழமான உறுதியுடன் இருப்பார்கள் என்பதை இவர் நிரூபித்திருக்கிறார்" என்று பாராட்டினார். இந்த வார்த்தைகள் நிகழ்ச்சியை பார்த்த பலரையும் தொட்டது.
காதலித்து திருமணம்
அந்த இளைஞரும் அவரது மனைவியும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். குடும்ப சம்மதம் இல்லாததால், இருவரும் வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையைத் தொடங்கியுள்ளனர். திருமணத்திற்கு பிறகு முதல் இரண்டு மாதங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே சென்றதாக அவர் கூறினார்.
மனைவி வீட்டில் ஒரே மகள் என்பதால், பெற்றோர் பின்னர் அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளனர். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, இருவரும் மீண்டும் கணவரின் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். மனைவி வீட்டிலேயே தங்கிக்கொள்ளும்படி பெண்ணின் பெற்றோர் கேட்டிருந்தாலும், "அக்காவின் திருமணம் இன்னும் நடக்கவில்லை; இந்த நேரத்தில் நானும் வீட்டை விட்டு வந்துவிட்டால் சரியாக இருக்காது" என்று அந்த இளைஞர் திரும்பி வந்ததாக சொன்னார்.
தீபாவளி அழைப்பு
பின்னர் தீபாவளி நேரத்தில், மனைவி தன் வீட்டிற்கு செல்ல அழைத்துச் சென்றுள்ளார். கணவரையும் வர சொல்லியிருக்கிறார். அவர், "நான் வந்து பார்த்துவிட்டு திரும்பிவிடுகிறேன்" என்று கூறியுள்ளார். ஆனால் மனைவியின் பெற்றோர், "நீ இங்கேயே இரு. நீ இங்கே இருந்தால் உன் கணவர் இங்கே வருவார்" என்று சொல்லி, அவரை அங்கேயே தங்க வைத்துள்ளனர். இதுதான் இருவருக்கிடையே மன அழுத்தத்தை உருவாக்கியதாக அந்த இளைஞர் கூறினார்.
மனைவி, "என்னை பெற்றோர் கணவர் வீட்டிற்கு அனுப்ப மறுக்கிறார்கள்; நீயும் என்னுடன் வரவில்லை" என்று மனவிரக்தியுடன் தொடர்ந்து போன் செய்து வந்ததாகவும், அவர் வேலை காரணமாக "பிறகு பேசுகிறேன்" என்று சில நேரங்களில் தள்ளிப் போட்டதாகவும் சொன்னார்.
கண் முன்னே நடந்த துயரம்
ஒரு கட்டத்தில், "ஒரு முறை வீடியோ காலில் பேசு" என்று மனைவி கேட்டுள்ளார். அவர் வீடியோ காலில் பார்த்த போது, மனைவி தற்கொலை செய்ய தயாராக இருந்த காட்சி அவர் கண்முன்னே நடந்துள்ளது. அவர் வீடியோ காலில் இணைந்த நொடியில், மனைவி தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
இந்த சம்பவம் அவரது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டதாகவும், "இனி நான் எந்த பெண்ணையும் திருமணம் செய்ய மாட்டேன். ஒரு விதத்தில், என் மனைவியின் இறப்புக்கு நானும் காரணமாகிவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சி என்னை விடவில்லை. அவளுடன் எப்படி எல்லாமோ வாழ வேண்டும் என்று கனவுகள் கண்டேன்" என்று அவர் உடைந்த குரலில் பேசினார்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல
இந்த கதையை கேட்ட பலரும், "உலகத்தில் பெண்கள் பலரும் எத்தனையோ பெரிய பிரச்சனைகளை தாங்கிக்கொண்டு வாழும் நிலையில், ஒரு குடும்பப் பிரச்சனை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டது மனதை வலிக்க வைக்கிறது" என்று வேதனை தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில்,
தற்கொலை எந்த பிரச்சனையுக்கும் தீர்வு அல்ல; வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் பேசித் தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்ற செய்தியும் இந்த சம்பவம் மூலம் மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது.
இந்த இளைஞரின் கதை, காதல் என்றால் சுகமான நினைவுகள் மட்டுமல்ல, பொறுப்பு, புரிதல், ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்கத் தெரிந்த மனப்பக்குவமும் அவசியம் என்பதை உணர்த்தும் ஒரு வலியான உண்மை.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications