ஜீ தமிழில் மீண்டும் கில்லாடி ஜோடிஸ்.. சின்ன தளபதி தான் ராக்! இதை கவனிச்சீங்களா? கலக்குறாங்களே!
சென்னை: ஜீ தமிழ் என்றாலே சின்னத்திரை ரசிகர்களுக்கு புதுமையும் விறுவிறுப்பும் நினைவுக்கு வரும். அந்த வரிசையில், ஒருகாலத்தில் செம்ம ஹிட்டான 'மிஸ்டர் & மிஸஸ் கில்லாடிஸ்' நிகழ்ச்சி இப்போ முழுக்க புதிய ரூபத்தில் திரும்பி வரப்போகிறதுதான் இப்போ பேசுபொருள். இந்த முறை நிகழ்ச்சியின் பெயர் 'கில்லாடி ஜோடிஸ்'. பெயர் மாறினாலும், அதிரடி, சாகசம், உணர்ச்சி எல்லாமே முன்பை விட ஒரு லெவல் மேலேன்னு சொல்லலாம்.
"இப்போ ஏன் இவ்வளவு ஆர்வம்?"ன்னு கேட்டா, காரணம் நிறைய இருக்கு. முதல்ல, இந்த நிகழ்ச்சி ஜனவரி 25, 2026 முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8:30 மணி முதல் 10:30 மணி வரை ஜீ தமிழில் ஒளிபரப்பாகப் போகுது. ஞாயிறு நைட் டைம் ஸ்லாட்டே குடும்ப ரசிகர்களுக்கான பிரைம் டைம். அந்த இடத்துல 'கில்லாடி ஜோடிஸ்' வருதுன்னா, எதிர்பார்ப்பு தானா வரும்.

இந்த நிகழ்ச்சி சும்மா ஒரு ஜோடி விளையாட்டு கிடையாது. சின்னத்திரை, வெள்ளித்திரை, சமூக வலைதளங்களில் பிரபலமான ரீல் மற்றும் ரியல் ஜோடிகள் இதில் பங்கேற்கிறாங்க. கணவன் - மனைவி, காதல் ஜோடி, ரியல் லைஃப் பார்ட்னர்ஸ் எல்லாருமே இதில் இடம் பெறுறாங்கன்னு தகவல்.
இவர்களை சோதிக்கப் போறது சாதாரண டாஸ்க் இல்ல. காடு, நீர், நெருப்பு, மலைன்னு நான்கு விதமான கடினமான நிலப்பரப்புகளில் அமைக்கப்பட்ட சவால்கள். அதுல ஜோடிகளோட உடல் வலிமை மட்டும் இல்ல, மன உறுதி, ஒருவருக்கொருவர் நம்பிக்கை, புரிதல் எல்லாமே டெஸ்ட் ஆகப்போகுது.
இதுல இன்னொரு பெரிய ப்ளஸ் என்னன்னா, சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத்திரைக்கு திரும்பி வர்றார் சஞ்சீவ் வெங்கட். இவரை சின்ன தளபதி என்று கூட பலரும் கலாய்ப்பார்கள். ஒருகாலத்தில் அவரோட தொகுப்பு ஸ்டைலுக்கே தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. இப்போ 'கில்லாடி ஜோடிஸ்' மூலமா அவர் ரீ-என்ட்ரி கொடுக்குறது நிகழ்ச்சிக்கே ஒரு தனி ஸ்பெஷல்.
சஞ்சீவ் பேசுற விதம், போட்டியாளர்களோட பழகும் முறை எல்லாம் நிகழ்ச்சியை இன்னும் இயல்பா, நெருக்கமா கொண்டு போகும்னு சொல்லலாம். இந்த நிகழ்ச்சி வெறும் போட்டி மட்டும் இல்லன்னு தான் ஜீ தமிழ் சொல்றது. சவால்களுக்கு நடுவுல, அந்த ஜோடிகளோட வாழ்க்கை அனுபவங்கள், அவர்கள் கடந்து வந்த பாதை, ஒருவருக்கொருவர் கொண்ட அன்பு, நம்பிக்கை எல்லாமே அழகா காட்டப்படுமாம். அதனால சிரிப்பும், டென்ஷனும், சில இடங்கள்ல எமோஷனும் சேர்ந்து வரும்.
மேலும், இந்த சீசன் சர்வதேச தரத்தில் உருவாக்கப்படுது. இலங்கை, வியட்நாம், தாய்லாந்து, மாலத்தீவுகள் மாதிரி கண் கவரும் வெளிநாட்டு லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டிருப்பதால், டிவி முன்னாடி உட்கார்ந்து பார்க்குறவர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான விஷுவல் ட்ரீட் கிடைக்கும்.

மொத்தமா சொல்லப்போனா, பயம், சவால், வேகம் எல்லாத்தையும் தாண்டி "ஜோடி என்றால் என்ன?"ன்னு நிரூபிக்க வருது இந்த 'கில்லாடி ஜோடிஸ்'. பெரிய பில்டப் இல்லாமலேயே, உள்ளடக்கத்தாலேயே கவனத்தை ஈர்க்கப்போற ஒரு ரியாலிட்டி ஷோவா இது மாறும்னு எதிர்பார்ப்பு இருக்கு. ஜனவரி 25 முதல், ஞாயிறு இரவு 8:30 மணிக்கு ஜீ தமிழை மிஸ் பண்ணாம பாருங்கன்னு தான் இப்போ எல்லாரும் பேசிக்கிறாங்க.
அதுபோல இந்த நிகழ்ச்சியில் கூமாம்பட்டி தங்கத்துரை மீண்டும் சாந்தினியுடன் கலந்து கொள்கிறார். அதுபோல சின்னத்திரை நடிகையும் தொகுப்பாளியும் ஆன மைனா நந்தினி அவருடைய கணவருடன் கலந்து கொள்கிறார். இன்னும் சில டான்ஸர்களும் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்ததும் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications