ஹேப்பி.. திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை.. திருமாவளவன் உற்சாகம்
Recommended Video

சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இருப்பது உறுதியாகி விட்டது. இன்று இரு கட்சி தலைவர்கள் இடையே நடந்த தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்ததாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது மக்கள் நல கூட்டணி என்ற பெயரில், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் தனியாக கூட்டணி அமைத்துக் கொண்டனர். இவர்கள் எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை.

இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி, லோக்சபா தேர்தலில், திமுக கூட்டணியில் இணைவதற்கு மறைமுகமாக விருப்பம் தெரிவித்து வந்தது. ஆனால் திமுக தலைமை இதுவரை அந்தக் கட்சியை கூட்டணிக்கு அழைக்காமல் இருந்தது. பாமக தங்கள் பக்கம் வரலாம் என்பதால் திமுக யோசித்து வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் கூட்டணி தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திமுக அழைப்பு விடுத்தது. இன்று மதியம் 12.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பங்கீடு குழு, திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி குழுவும், துரைமுருகன் தலைமையில் திமுக குழுவும் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் நிருபர்களிடம், திருமாவளவன் கூறியதாவது: தொகுதிப் பட்டியலை திமுக குழுவிடம் வழங்கியுள்ளோம். மீண்டும் கலந்துரையாடி தொகுதிகளை முடிவு செய்வோம். திமுக குழுவுடன் நடந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமாக இருந்தது. எத்தனை இடங்கள் கேட்டுள்ளோம் என்பது பின்னர் தெரிவிக்கப்படும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஒருமுறை மட்டுமே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். தற்போது தனி சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிட்டு வருகிறோம். வரும் லோக்சபா தேர்தலிலும் தனி சின்னத்திலேயே போட்டியிடுவோம். விஜயகாந்த்தை சந்தித்து உடல் நலம் விசாரிக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
-
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
இளைஞர்கள் ஆதரவு.. விஜய்யின் அரசியல் வருகையை எப்படி பார்க்கிறீங்க? ஆ.ராசா சொன்ன கருத்து! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
மதுரை தெற்கு தொகுதி.. புதூர் பூமிநாதன் vs ராம ஸ்ரீனிவாசன்.. பலம் என்ன? பலவீனம் என்ன?












Click it and Unblock the Notifications