Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு | திருக்குறள் | கயமை | தேவ ரனையர் கயவர் திருக்குறள்

தேவ ரனையர் கயவர் திருக்குறள்

குறள் பால்
குறள் இயல்
அதிகாரம்
குறள் விளக்கம்
1073 தேவ ரனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான்

கயவரும் தேவரைப் போல் தான் விரும்புகின்றவைகளைச் செய்து மனம் போன போக்கில் நடத்தலால், கயவர் தேவரைப் போன்றவர்.
— மு. வரதராசன்

புராணங்களில் வரும் தேவர்களைப் போல் மனம் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவர்கள் கயவர்கள் என்பதால், இருவரையும் சமமாகக் கருதலாம்
— கலைஞர்

தம்மைக் கட்டுப்படுத்துவார் இல்லாமல் தாம் விரும்பியபடி எல்லாம் செய்து வாழ்வதால், கயவர் தேவரைப் போன்றவராவர்.
— சாலமன் பாப்பையா

தேவரைப் போலவே, தம்மை நியமிப்பவர் இல்லாமல், தாம் விரும்புவன செய்து ஒழுகுதலால், கயவரும் தேவரும் ஒரே தன்மையுடையவர் ஆவர்
— புலியூர்க் கேசிகன்

வாழ்வாங்கு வாழும் தேவர்களுக்கு ஒப்பானவர்களே கயவர்கள் காரணம் விரும்பிய செயல்களை செய்து வாழ்வதால்.
— சிவயோகி சிவகுமார்

கயவர் தேவரை யொப்பவர்: அத்தேவரும் இக்கயவரைப் போலத் தாம் வேண்டியன செய்தொழுகுவராதலான். இது கயவர் வேண்டியன செய்வாரென்றது.
— மணக்குடவர்

தேவர் அனையர் கயவர் - தேவரும் கயவரும் ஒரு தன்மையர்; அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் - அஃது யாதினான் எனின், தேவரைப் போன்று தம்மை நியமிப்பாரின்றிக் கயவரும் தாம் விரும்புவனவற்றைச் செய்தொழுகலான். (உயர்ச்சியும் இழிவுமாகிய தம் காரண வேறுபாடு குறிப்பால் தோன்ற நின்றமையின், இது புகழ்வார் போன்று பழித்தவாறாயிற்று. இதனான், விலக்கற்பாடின்றி வேண்டிய செய்வர் என்பது கூறப்பட்டது.).
— பரிமேலழகர்

English Couplet:

The base are as the Gods; they too
Do ever what they list to do!.

Couplet Explanation:

The base resemble the Gods; for the base act as they like.

Transliteration (Tamil to English):

thaevar anaiyar kayavar avarundhaam
maevana seydhozhuka laan

மொத்தம் 133 அதிகாரங்கள்
1073 of 1330

மேலும் கயமை குறள்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+