திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டேபிள்டாப் ரன்வேயில் தரையிறங்கும் போது முழு வேகத்தில் வந்த விமானம்.. விபத்து குறித்து டிஜிசிஏ தகவல்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் முழுவேகத்தில் வந்ததாக விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தெரிவித்துள்ளது. டேபிள்டாப் ரன்வே என்றால் சாய்வாக இருக்கும், இரு மருங்கிலும் ஆழமான பள்ளத்தாக்குகள் இருக்கும்.

Recommended Video

    கோழிக்கோடு விமான விபத்து.. இரண்டாக உடைந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்

    இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து இரண்டாக பிளந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விமானத்தில் மொத்தம் 191 பேர் இருந்தனர். தரையிறங்கும் நேரத்தில் 2 கி.மீ. தூரம் வரை பார்க்க முடியும் நிலை இருந்தது. கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமானம் முழு வேகத்தில் வந்தது. இதனால் ரன்வேயை தாண்டிச் சென்று 35 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தது என்று தெரிவித்துள்ளது.

    கனமழை.. விமானம் சறுக்கி விபத்துக்குள்ளாக 'ஹார்ட் லேண்டிங்' காரணம்.. மத்திய அமைச்சர் தகவல்கனமழை.. விமானம் சறுக்கி விபத்துக்குள்ளாக 'ஹார்ட் லேண்டிங்' காரணம்.. மத்திய அமைச்சர் தகவல்

    ஆழம்

    ஆழம்

    முதற்கட்ட விசாரணையில் முதலில் தரையிறங்கும் முயற்சி தோல்வி அடைந்தது. இரண்டாவது முறை ஹார்ட் லேண்டிங் முறையில் தரையிறங்கியதே இந்த விபத்திற்கு காரணம் என சொல்லப்படுகிறது. கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தின் ஓடுதளங்களை (runway) சுற்றி ஆழமான பள்ளத்தாக்குகள் இருக்கும்.

    3 விமான நிலையங்கள்

    3 விமான நிலையங்கள்

    இந்தியாவில் விமான நிலையங்களில் உள்ள ரன்வேயில் தரையிறங்க ஆபத்தான விமான நிலையங்களில் கோழிக்கோடு விமான நிலையம் ஒன்றாகும். அதாவது சாய்வான நிலப்பரப்பில் இந்த ஓடுதளம் அமைக்கப்பட்டிருக்கும். இந்தியாவில் 3 சாய்தள ஓடுபாதைகள் உள்ளன. அவை கோழிக்கோடு, மங்களூர், மிசோரமில் உள்ள லெங்பய் ஆகியவை ஆகும்.

    ரன்வே

    ரன்வே

    இந்த டேபிள் டாப் ரன்வேக்களில் தரையிறக்க கூடுதல் திறமையும் அனுபவமும் தேவை. சாய்தளம் மற்றும் ரன்வேயை சுற்றி பள்ளத்தாக்குகள் என்பதால் இங்கு விமான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். துபாயிலிருந்து கோழிக்கோடு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. இதில் விமானம் இரண்டாக பிளந்தது.

    விமானி பலி

    விமானி பலி

    இந்த விமானத்தில் 174 பயணிகள், 10 குழந்தைகள், 2 விமானிகள், 4 விமான பணியாளர்கள் இருந்தனர். இதில் விமானி தீபக் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். துணை விமானியும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு இறந்துவிட்டார். விமானி தீபக் இந்திய விமான படையின் முன்னாள் விங் கமாண்டர் ஆவார்.

    English summary
    DGCA says that aircraft was at full speed while landing and it passes beyond the runway.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X