துபாய்- கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
துபாய்: துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டலில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மாலை நடந்தது.
துணை முதல்வர் ஹுமாயுன் கபீர் வரவேற்றார். 'சிராஜுல் உம்மத்' விருது வென்ற மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் வாழ்த்துரையில், 40 ஆண்டுகளுக்கு முன்பு கல்வித் தந்தை பி.எஸ். அப்துல் ரஹ்மான் தொடங்கிய கிரஸெண்ட் பள்ளி இன்று தரமான கல்வியை வழங்கி வருவது பெருமையாக உள்ளது. இதற்காக சீதக்காதி டிரஸ்ட்டை பாராட்டுகிறேன் என்றார்.
பள்ளி முதல்வர் முனைவர் தாவூத் ஷா பள்ளியின் செயல்பாடுகள், மாணவர்களின் திறமையை வளர்க்கும் முறைகள், சர்வதேசப் பள்ளிக்கான பிரிட்டிஷ் விருது பெற்றது ஆகியவை குறித்து தெரிவித்தார்.
மேலும் விரைவில் சர்வதேசப் பள்ளி ஒன்று துவங்கப்பட இருப்பதாகவும், கூடுவாஞ்சேரியில் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். முன்னாள் மாணவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.
கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி முதல்வர் செய்யத் மஸ்ஊத் ஜமாலி, கல்லூரியின் பாடத் திட்டங்கள் குறித்து விவரித்தார்.
கூட்டத்தில் ஈடிஏ அஸ்கான் நிறுவன இயக்குநர்கள் அல்ஹாஜ் ஆரிஃப் ரஹ்மான், தைக்கா நாஸர் சுஐப் ஆலிம், ஹமீத் கான், எஸ்.எம். புகாரி, ஹபிபுல்லாஹ், ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ.லியாக்கத் அலி, கல்விக்குழு செயலாளர்கள் ஏ.முஹம்மது தாஹா, யு.முஹம்மது ஹிதாயத்துல்லாஹ், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.