For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'மக்கள் விருதுகள்-2008'

By Sridhar L
Google Oneindia Tamil News

Makkal TV
பல துறைகளில் சிறந்து விளங்கி சாதனை படைத்தவர்களுக்கு பாமகவின் மக்கள் டிவி சார்பில், 'மக்கள் விருதுகள்-2008' வழங்கப்பட்டன.

அதில், சிறந்த நாளிதழாக தினத்தந்தி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.

சிறந்த வார இதழாக ஆனந்த விகடன், சிற்றிதழாக உயிர் எழுத்து, எழுத்தாளராக மேலாண்மை பொன்னுசாமி, தமிழ்ப் பணிக்காக தமிழ் ஓசை நாளிதழ், தமிழரல்லா தமிழ்ப் பணியாளராக அனிதா குப்புசாமி,

சிறந்த கல்வியாளராக எஸ்.எஸ்.ராஜகோபால், சிறந்த பள்ளியாக திருப்பூரைச் சேர்ந்த தாய்த் தமிழ் தொடக்கப் பள்ளி, சிறந்த கல்லூரியாக லயோலா, சிறந்த நாடகவியலாளராக பிரளயன்,

சிறந்த சினிமாவாக பூ, குறும்படமாக விழி, ஆவணப் படமாக எரியும் நினைவுகள், ஓவியராக சந்துரு, சிற்பியாக ஜன், பதிப்பகமாக விடியல், விவசாயியாக முத்துமல்லா ரெட்டியார், அறிவியலாளராக இஸ்ரோவின் மயில்சாமி அண்ணாதுரை,

சிறந்த இளம் விஞ்ஞானியாக விஷ்ணு ஜெயப்பிரகாஷ், வணிகவியலாளராக சாந்தி துரைசாமி, மருத்துவராக சாந்தா, சுற்றுச் சூழலியாளராக மரம் தங்கசாமி, சுய உதவிக்குழுவாக களஞ்சியம்,

சிறந்த முன்மாதிரி கிராமமாக குண்டலநாயக்கன்பட்டி (தேனி மாவட்டம்), விளையாட்டு வீரர்ராக இளவழகி, மாற்றுத் திறனாளராக ரஞ்சித்குமார், மழலை மேதையாக லவினாஸ்ரீ, மக்கள் பணியாளராக வழக்கறிஞர் சுரேஷ், சிறந்த குடிமகனாக ஹிதேந்திரனின் தந்தை டாக்டர் அசோகன் ஆகியோர் உள்பட 31 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

போட்டி போட வாருங்கள்-ராமதாஸ்:

நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,

டிவியில் எது, எது இருக்கக் கூடாது, எவை எவை இருக்க வேண்டும் என்று ஓராண்டு காலமாக சிந்தித்து கொண்டு வரப்பட்ட டி.வி. தான் மக்கள் இது. சினிமாத்தனம், நீண்ட நெடிய தொடர் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற கனவில் சிறிதும் பிறழாமல் வெற்றி பெற்றிருக்கிறோம்.

மற்ற டிவிகளுடன் சேர்ந்து பத்தோடு ஒன்று பதினொன்றாக மக்கள் டிவி இருந்தாலும் தமிழ், கலைகள், பண்பாடு வளர்க்க மக்கள் டிவியுடன் போட்டி போட வாருங்கள் என்று அவற்றுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

இது தமிழர்களின் தனி அடையாளமாக இன்றும், என்றும் நடத்தப்படும். இன்னும் பல சாதனையாளர்களுக்கு விருது வழங்க விரும்புகிறோம். தமிழ் பண்பாட்டை காக்கும் பணியில் தவற மாட்டோம். மரபு விளையாட்டுகளைக் காப்போம். நீங்கள் விரும்பாத எதையும் டிவியில் காட்ட மாட்டோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X