For Daily Alerts
Just In
தசைத்திறன் குன்றியோருக்கு சிறப்புப் பள்ளி
சென்னை: சென்னையில் நாளை தசைத்திறன் குறைபாடு கொண்ட மாணவர்களுக்கான சிறப்பு பள்ளியை துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சமீபத்தில் சென்னையில் தசைத்திறன் குறைபாடு கொண்ட மாணவர்களுக்கான சிறப்பு பள்ளி துவக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் தசைத்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான சிறப்பு பள்ளி துவங்கும் பணிகள் தொடக்கப்பட்டன.
சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாடல் பள்ளி சாலையில் இருக்கும் மாநகராட்சி உயர்நிலை பள்ளி வளாகத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் இந்த சிறப்புப் பள்ளியை திறந்து வைக்கிறார்.