For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

60ம் கல்யாணத்திற்கு வந்தவர்களுக்கு இலவச மரக்கன்றுகள் பரிசளித்த தம்பதி

Google Oneindia Tamil News

கரூர்: கரூரில் நடந்த திருமண விழா ஒன்றில், நாட்டின் சுற்றுசுழலை பாதுகாக்கும் வகையில், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது, காண்போரை ஆச்சரியத்திற்குள்ளாகியது.

கரூர் தாந்தோனிமலையில் உள்ள நல்லான்சக்கரவர்த்தி திருமண மண்டபத்தில், பிரபல சமுக சேவகர் பத்திரிநாராயணன்-உஷா தம்பதியரின் 60ம் கல்யாணம் நடந்தது. இந்த சுபநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும், தம்பதியரை வாழ்த்தி, ஆசீர்வாதம் பெற்றனர்.

திரிசக்தி குழுமத் தலைவர் டாக்டர் திரிசக்தி சுந்தரராமன், திரிசக்தி குழுமம் சார்பில் தமிழக அரசியல் நிர்வாக ஆசிரியர் எஸ்.சீனிவாசன், சுமார் 100 மரக்கன்றுகளை கரூர் மாவட்ட லயன்ஸ் சங்க தலைவர் சுமங்கலி செல்வராஜிடம் பெருமையுடன் வழங்கினார்.

அப்போது, திரிசக்தி குழுமத்தின் தலைவர் டாக்டர் திரிசக்தி சுந்தரராமன் சார்பில் வழங்கப்பட்ட வாழ்த்துச் செய்தியில், நாட்டின் முன்னேற்றத்திற்கும், மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும், சிறந்த சுற்றுச்சூழலுக்கும் மரங்கள் மிகவும் அவசியம். நாட்டின் உயிரான மரங்களை நம் உயிர் போல போற்றி பாதுக்காக்க வேண்டும். ஆனால் சில இடங்களில் மரங்கள் வெட்டப்படுவது வேதனை தருகின்றது.

மரங்கள் இருந்தால் சுபிச்சமாக மழை பொழியும். எனவே, இது போன்ற சுப மங்கள நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகளை தானமாக வழங்க நாம் பழகி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால், நம் எதிர்கால சந்ததியினரும், நாடும் வளம் பெற முடியும். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விழாவில் லயன்ஸ் கிளப் தலைவர் எஸ்.சேதுகுமார், செயலாளர் வி.முருகேசன், தே.மு.தி.க., முன்னாள் மாவட்டத் தலைவர் விஸ்வநாதன், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சாமிநாதன், கேப்டன் மன்ற முன்னாள் துணைச் செயலாளர் கார்த்திகேயன், புத்தக விற்பனையாளர் சுப்பிரமணியம், மற்றும் தொழில் அதிபர்கள் சமுக சேவர்கள், அரசு உயர் அதிகாரிகள் பலர் உள்பட கலந்து வாழ்த்துக் கூறினர்.

வாழ்த்து செய்தியில் கூறியதை போல, ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில், நாட்டின் சுற்றுசுழலை பாதுக்காக்கும் மரக்கன்றுகளை வழங்குவதன் மூலம் முழு நிறைவு பெறலாம்.

English summary
Social worker Badrinarayanan and his wife Usha celebrated their 60th marriage recently in Karur. The couple gifted the people who came to wish them with tree saplings.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X