For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. முதல் வானொலி வந்த நாள் இன்று!

Google Oneindia Tamil News

- லதா சரவணன்

சூறாவளி அல்லது புயல் என்பது அதன் பெயர், மேற்கிந்திய தீவுகளில் சூறாவளி என்றும் ஐக்கிய அமெரிக்காவில் சுழன்றடிக்கும் சூறாவளி (TORNADO) என்றும் சீனக் கடற்கரையில் (TYPOON) என்றும், மேற்கு ஆஸ்திரேலியப் பகுதியில் வில்லி வில்லி என்றும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் புயல் (CYCLONE)என்றும் அழைக்கப்படுகிறது. சூறாவளிகள் பூமியில் மட்டுமில்லாமல், நெப்ட்யூனில் சிறிய கரும்புள்ளியாக உள்ளது. இது கண்போன்ற வடிவத்தைக் கொண்டு இருப்பதால் மந்திரவாதியின் கண் என்று அழைக்கப்படுகிறது. அந்த மந்திரவாதியின் கண்ணில் ஒரு வெள்ளைமேகமும் உள்ளது. மே 7ம்நாள் 1840 ல் ஐக்கிய அமெரிக்காவில் மிசிசிப்பியில் பெரும் சூறாவளி தாக்கியதில் 317 பேர் உயிரிழந்தனர்.

may 7: What is special on may 7

1895 ரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார் இந்நாள் ரஷ்யாவில் வானொலி நாளாக கொண்டாடப்பட்டது.

may 7: What is special on may 7

1946 சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது. டோக்கியோவைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனம் கணிணித் தயாரிப்பிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தனது பொருட்கள் துறை சார்ந்த விற்பனையில் சோனி நிறுவனம் முதல் 20 இடங்களுக்குள் பட்டியலிடப்பட்ருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

may 7: What is special on may 7

1861ல் மே 7ம் நாள் கீதாஞ்சலி என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியரும், இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூர் கல்கத்தாவில் பிறந்த நாள். இந்தியாவின் தேசிய கீதமான ஜன கண மன பாடலை இயற்றிய பெருமையும் இவரையே சாரும் அதே போல் இவரின் அமர் சோனார் பங்களா வங்களாதேசத்தில் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது,

1883 மே 7 தஞ்சையில் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்து முப்பதாண்டு காலம் கட்டிக்காத்த இலக்கியத்திற்கு அலப்பரிய பணியாற்றிய உமாமகேசுவரனார் பிறந்த நாள், நீராருங் கடலுடத்த என்ற மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை பாடலை தமிழ்தாய் வாழ்த்தாக அறிமுகப்படுத்தியவரும் இவரே. தமிழ்மொழியை செம்மொழியாக அறிவிக்கவேண்டும் என்று 1919ம் ஆண்டிலும், தமிழுக்கு தனியே ஓர் பல்கலைக் கழகம் வேண்டும் என்று 1922 ம் ஆண்டிலும் தீர்மானம் நிறைவேற்றியவர். யாழ்நூல்,நக்கீரர், கபிலர் தொல்காப்பியம் போன்ற நூல்களைப் பதிப்பித்தவரும் இவரே. இவரை பெருமைப்படுத்தும் விதமாக 1973ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13ம்நாள் கரந்தைத்தமிழ் சங்கத்தில் அவரது சிலை கலைஞர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று என்று பாராட்டிப்பேசினார்.

அருணாச்சலம் மாரிசாமி மே 7 1935 ஆம் ஆண்டு, பிறந்த இவர் இதழாளர், எழுத்தாளர், நூலாசியர் என பன்முகங்கள் கொண்டவர். தினத்தந்தி நிறுவனத்தில் செய்தியாளராக தம் பணியைத் தொடங்கி சி.பா.ஆதித்தனார் அவர்களை குருவாய் ஏற்றுக்கொண்டவர். இவர் 44ஆண்டுகள் ராணி வார இதழின் ஆசிரியராக பொறுப்பில் பணியாற்றியவர்.

கிருஷ்ணா டாவின்ஸி மாயக்குதிரைகள் என்று கல்கியின் முதல் தொடர்கதை மூலம் புகழ்பெற்றவர். தென்னக இருப்புப்பாதைத் துறையில் பயணச்சீட்டு ஆய்வாளராக வாழ்க்கையைத் தொடங்கிய இவர் முழுநேர எழுத்தாளராக மாறினார் எழுத்தின் மேல் உள்ள ஆர்வத்தினால், தமிழின் முதல் இணைய இதழான குமுதம் டாட்.காம் இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றினார் இவரின் பிறப்பு மே மாதம் ஏழாம் தேதி 1968ம் வருடம்.

நடிப்பு முழுவதும் கல்லூரி மாணவனாக நடித்துப் புகழ்பெற்ற நடிகர் முரளியின் மகன் அதர்வா 1989ம் வருடம் மே7ம் தேதி பிறந்தார் . தற்போது அவரும் தமிழ் திரைப்படத்தின் நடிகர். 2010ம் ஆண்டு பாணாகாத்தாடியில் அறிமுகமானார்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் மனோகரா திரைப்படத்தில் பொறுத்தது போதும் பொங்கியெழு என்ற வசனத்தின் மூலம் பாராட்டைப் பெற்றவர் 150 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் 25 படங்களை தயாரித்தும் உள்ளார் அற்புதமான குரலும், ஏற்ற இறங்கங்களோடு கூடிய உச்சரிப்பும் உணர்ச்சிகரமான நடிப்பும் கொண்ட கலைமாமணி விருதுபெற்றஅருமையான நடிகை இவர் மறைந்தது மே7ம்தேதி 1964ம் வருடத்தில்,

1983ம் ஆண்டு மேமாதம் 7ம் தேதி ஐக்கிய மாகாணங்களில் தேசிய சுற்றுலா தினம் மற்றும் தேசிய சுற்றுலா வாரம் என்று இரண்டு வகையாக கொண்டாடப்படுகிறத. ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் இந்நாளை தேசிய சுற்றுலா தினமாக கொண்டாட மக்களுக்கு அறிவித்தார்.

(தொடர்ந்து வரும்)

English summary
May 7 has so many specials in the history.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X