Rasi Palan This Week: மகர ராசிக்கு வாயில் தான் கண்டமே.. மற்றபடி பண மூட்டையை அள்ளும் யோகம்
Magaram Rasi Palan: பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம் [Magaram Rasi Palan].
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

கும்ப மாதம் என்று அழைக்கப்படும் இந்த அற்புதமான மாசி மாதத்தில் பிப்ரவரி 22 ஆம் தேதி முதல் மார்ச் 1 ஆம் தேதி வரையிலான, மாசி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மகர ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மகரம் ராசி பலன் (Magaram Rasi Palan)
மகரம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு உத்தியோகத்தில் இருந்த சிக்கல்கள் பரிபூரண நிவர்த்தியை ஏற்படுத்தும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், வெளிவட்டாரத்திலும் காப்பாற்றக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். தேவையற்ற சங்கடங்கள் நீங்கும். காது, மூக்கு, தொண்டை, சளி தொந்தரவு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
விநாயகர் வழிபாடு, காரியசித்தி மாலை கேட்பது, படிப்பது ஏற்றத்தைத் தரும். உத்தியோகம், தொழில், வியாபாரம் என அனைத்திலும் ஏற்றம் ஏற்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். தொழில் ரீதியாக, உத்தியோக ரீதியாக எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடைபெறக்கூடிய நல்ல காலகட்டம். பெரிய அளவு நம்பிக்கையை ஏற்படுத்தும்.
மாற்றம், முன்னேற்றம்
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். பண வரவுக்கான உத்தரவாதம் ஏற்படும். குடும்பத்தில் மனமகிழ்ச்சி ஏற்படும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேரும் யோகம் உண்டாகும். தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம், என அனைத்து மாற்றமும் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சுபவிரய பிராப்தம் ஏற்படும்.
ஆரோக்கியம்
பொருளாதாரத்தில் முக்கியமான முன்னேற்றங்கள் காணப்படும். பல், கண், முகம் சார்ந்த பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. கணவனாக இருந்தால் மனைவிக்கும், மனைவியாக இருந்தால் கணவருக்கும் வயிறு, இடுப்பு வலி போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. யாரிடமாவது பணம் வாங்கியிருந்தால் அந்தக் கடனை திருப்பிக் கொடுத்து விடுவது நல்லது. இல்லையெனில் தேவையில்லாத பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.
பணம் கொட்டும்
மிகப்பெரிய பணம் வந்து சேரும். கையிருப்பு பணம் கூடுவதற்கான வாய்ப்புள்ளது. வாயை வைத்துக் கொண்டு அமைதியாக இருப்பது நல்லது. பேச்சினால் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். சந்தோஷம் ரீதியாக 70 சதவீதமும், பொருளாதாரம் ரீதியாக 90 சதவீதமும் நன்றாக இருக்கும்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications