Mesham Rasi Palan: "குறி வச்சா இரை விழணும்".. தொழிலில் மாஸ் காட்டப் போகும் மேஷம் ராசி
வார ராசி பலன்: டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 29 ஆம் தேதி முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு அலைச்சல்கள் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். அனுகூலமான காலகட்டமாக இருக்கும். திட்டமிட்டு காரியத்தை செய்து முடித்து அதில் வெற்றி காண்பீர்கள். தூக்கமின்மையால் தொந்தரவுகள் ஏற்படும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் ரீதியாக ஏற்றத்தைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் அனுகூலம் உண்டாகும்.
தடைகள் நீங்கும்
தனிப்பட்ட முறையில் செல்வாக்கு கூடும். இழந்த பெருமைகளை மீண்டும் மீட்டெடுப்பீர்கள். தெய்வ வழிபாடுகள், மகான்கள் வழிபாடுகளைச் செய்வீர்கள். தெய்வ வழிபாடு, மகான்கள் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். இதுவரை தடைபட்டுக் கொண்டு வந்த இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். உத்தியோகம், வியாபாரம் என அனைத்து விஷயங்களிலும் யோகங்களைப் பெறுவீர்கள்.
செல்வம் சேரும்
பெரும் செல்வத்தை சேர்க்கும் யோகம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த பலவிதமான சிக்கல்கள் தீருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பெரும் தொழிலதிபர்கள், பெரும் வியாபாரிகளுடன் தொடர்புகள் ஏற்படும். உங்களை நம்பி அவர்கள் எல்லா பொறுப்புகளையும் கொடுப்பது, உங்கள் ஆலோசனைகளைக் கேட்கும் சூழல் உண்டாகும்.
ஏற்றம்
மிகச் சாதாரணமாக இருப்பது நல்லது. யாரையும், எந்த விஷயத்தையும் அலட்சியப்படுத்தாமல் இருப்பது ஏற்றத்தை ஏற்படுத்தும். எல்லா விஷயங்களிலும் ஏற்றம் உண்டாகும். இழுபறியாக இருக்கும் நிலைமைகள் படிப்படியாக மாறும். தொழில் நிமித்தமாக, உத்தியோகம் ரீதியாக நல்ல செல்வாக்கு ஏற்படும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள் நீங்கி லாபம் உண்டாகும்.
வழிபாடு
பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தோல் பிரச்சனை, அலர்ஜி ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. விநாயகர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். காரியசித்தி மாலை மந்திரம் கேட்பது, சொல்வது மேன்மையைத் தரும்.
-
Rasi Palan This Week: கண்ணா 2 லட்டு தின்ன ஆசையா.. மகர ராசிக்கு நிலம், வீட்டில் அடிக்கும் ஜாக்பாட் -
Rasi Palan This Week: தனுசு ராசிக்கு வரப்போகும் சிக்கல்.. இந்த விஷயங்களில் எல்லாம் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: விருச்சிகம் ராசியை வச்சு செய்யும் கிரகங்கள்.. வரும் 7 நாட்கள் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: துலாம் ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ஒரு விஷயத்தில் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: கன்னி ராசிக்கு கால் வைக்கும் இடமெல்லாம் கண்டம்.. ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: சிம்ம ராசிக்கு காத்திருக்கும் பேராபத்து.. கண்டத்திற்கு மேல் கண்டம் -
Rasi Palan This Week: கடக ராசிக்கு 15 நாட்களில் அடிக்கப் போகும் ஜாக்பாட்.. தொட்டதெல்லாம் துலங்கும் -
Rasi Palan This Week: மிதுன ராசிக்கு வெற்றியை குவிக்கும் நேரம்.. வேலையில் மட்டும் ரொம்ப கவனம் -
Rasi Palan This Week: ரிஷபம் ராசிக்கு பணம் கொட்டப் போகுது.. புது வேலை கன்ஃபார்ம் -
Rasi Palan This Week: மேஷம் ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம் இதோ -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம்












Click it and Unblock the Notifications