For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விமானம், கப்பலில் ஏறி வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு இருக்கு? #Astrology

வெளிநாடுகளில் சென்று படிக்க, வேலை செய்ய யாருக்கு யோகம் இருக்கிறது என்பதை ஜோதிட ரீதியாக அறிந்து கொள்ளலாம்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: விமானத்திலோ, கப்பலிலோ ஏறி கடல் கடந்து செல்லவேண்டும்... வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். யாருக்கு அந்த யோகம் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

சொர்க்கமே என்றாலும் நம் ஊரு போல வருமா? எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கு ஈடாகுமா? என திரைப்படப்பாடல் இருந்தலும் நிறைய பேருக்கு வெளிநாடு செல்லும் ஆசை உண்டு.

பாரின் மாப்பிள்ளைதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் பெண்களும், பெற்றோரும் இருக்கத்தான் செய்கின்றனர். வெளிநாடு செல்லும் யோகம் யாருக்கு இருக்கிறது என்று பிரபல ஜோதிடர் விவேகா கணித்துள்ளார்.

ராசிகளின் தன்மை

ராசிகளின் தன்மை

12 ராசிகளில் நிலம், நீர், நெருப்பு, காற்று என்று 4 விதமாக பிரிக்கப்பட்டுள்ளன. மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகள், கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை நீர் ராசிகள். காற்று ராசிகள் விமான பயணத்தினை குறிக்கும் நீா் ராசிகள் கடல் பயணத்தினை குறிக்கும். காற்று ராசியும் நீா் ராசியும் 9 12 அதிபதிகளுடன் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் கிடைக்கும்.

சர ராசிகள்

சர ராசிகள்

மேஷம்,கடகம், துலாம், மகரம் இவை நான்கும் சரராசிகள். லக்ன ரீதியாக 9,12 ஆம் வீடுகள் சரராசிகளாக இருத்தல்.

மேலும் 9,12ஆம் வீட்டின் அதிபதிகள்,சரராசிகளில் இருந்தாலும் வெளிநாடு செல்லும் யோகம் வரும்.

வெளிநாடு யோகம்

வெளிநாடு யோகம்

வெளிநாடு செல்லும் யோகத்தினை தீா்மானிக்கும் கிரகங்கள் சந்திரன்,குரு, ராகு, செவ்வாய் இவா்கள் 9 12 வீடுகளுடன் சோ்ந்திருந்தாலும் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் வரும்.

3,9,12ஆம் வீடுகள்

3,9,12ஆம் வீடுகள்

ஒருவரின் ஜாதகத்தில் 3ஆம் வீடு சிறிய பயணத்தைக் குறிக்கும். 9ஆம் வீடு நீண்ட பயணத்தையும், 12ஆம் வீடு வெளிநாட்டு பயணத்தையும் குறிக்கும். 9 12ம் அதிபதிகள் 8ம் வீட்டில் அமா்ந்தாலும் 8ம் அதிபதியோடு தொடா்பு கொண்டாலும் மறைவு தேசங்களில் வாழ நோிடும்.

கடல் கடந்து செல்லும் யோகம்

கடல் கடந்து செல்லும் யோகம்

சந்திரன், சுக்கிரன் நீர் கோள்கள். கடல்கடந்த வெளிநாட்டு பயணத்திற்கு அவர்கள் இருவரும் காரணமாகின்றனர்.

ராகு, சனி காற்றுக்கோள்கள். எனவே இவையும் வெளிநாட்டு பயணத்திற்குக் காரணமாக கோள்கள். இவைகள் மட்டுமின்றி 9ஆம் அதிபதி, 12ஆம் அதிபதிகளின் நிலைமையை பொருத்தும் வெளிநாடு பயணம் அமைகிறது.

கல்வி சார்ந்த பயணம்

கல்வி சார்ந்த பயணம்

ஜாதகத்தில் 4ஆம் இடம் கல்வியைக் குறிக்கிறது. எனவே 4ஆம் அதிபதியும், வெளிநாட்டு பயணத்திற்கு காரணமான 12ஆம் அதிபதியும் தொடர்பு கொள்ளும் போது அவர்களின் தசாபுத்தி காலத்தில் கல்வி சார்ந்த வெளிநாட்டு பயணம் அமையும்.

உல்லாச பயணம்

உல்லாச பயணம்

5ஆம் இடம் உல்லாச பயணம். பொழுதுபோக்கு கேளிக்கை மகிழ்ச்சியைக் குறிக்கும். 5ஆம் அதிபதியும், 12ஆம் அதிபதியும் தொடர்பு கொள்ளும் போது அவர்கள் தசாபுத்தி காலத்தில் சுற்றுலாவிற்காக வெளிநாடு செல்லலாம்.

9ஆம் வீடு அல்லது 12ஆம் வீட்டில் ராகுவோ, சனியோ இருந்து 9 அல்லது 12ஆம் அதிபதி சேர்க்கை இருந்தால் வெளிநாடு செல்லும் யோகம் அமையும்.

வெளிநாட்டில் தொழில்

வெளிநாட்டில் தொழில்

9 மற்றும் 12ஆம் அதிபதிகள் சேர்க்கை,பரிவர்த்தனை, அல்லது சம சப்தம பார்வை இருந்தால் வெளிநாடுகளில் சென்று பணிபுரியும், அல்லது குடியிருக்கும் யோகம் அமையும். 9 அல்லது 12ஆம் அதிபதிகளுடன் 10ஆம் அதிபதியும் சேர்க்கை பெற்றால் வெளிநாடு சென்று சொந்தமாக தொழில் செய்வார்.

எந்த திசையில் யோகம்

எந்த திசையில் யோகம்

சந்திரதசை, ராகுதசை, சனிதசை, சுக்கிரதசை, நடக்கும் போது வெளிநாட்டு பயணம் ஏற்படலாம். ஜாதக ரீதியாக,3,7,9,12 ஆகிய வீட்டில் இருக்கும் கிரகங்களின் திசை மற்றும் புத்திகள் நடப்பது. இத்தகைய தசா காலங்களில் அவர்களே எதிர்பாராத வகையில் வேலைபார்க்கும் நிறுவனம் மூலம் கூட வெளிநாடு செல்லலாம். அப்புறம் என்ன உங்க ஜாதகம் எப்படியிருக்கு என்று பார்த்து உடனே பாஸ்போர்ட் எடுங்க விமானத்தில் பறங்க வாசகங்களே.

English summary
We will discuss some the most important yogas that give an individual opportunity to travel to foreign lands with all the permutation and combinations.9th lord when in 4th house, 12th house, 7th house becomes very powerful to bless with foreign traveling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X