Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் விலை உயரும் பூஜை பிரசாத கட்டணங்கள் - எவ்ளோ தெரியுமா

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜைக் கட்டணம் முதல் அரவணை பாயசம் உள்ளிட்ட பிரசாதங்கள் வரை அனைத்துக் கட்டணங்களின் விலையும் உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சபரிமலை: கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பூஜைக் கட்டணம் முதல் அரவணை பாயசம் உள்ளிட்ட பிரசாதங்கள் வரை அனைத்துக் கட்டணங்களின் விலையும் உயர்த்த கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த கட்டண விலை உயர்வானது வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது ஐயப்ப பக்தர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆன்மீகத் திருத்தலம் சபரிமலை ஐயப்பன் கோயில். இக்கோயிலுக்கு கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் முதல் நாடு முழுவதும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசித்து செல்வதுண்டு.

குறிப்பாக ஓவ்வொரு தமிழ் மாதப்பிறப்பு மற்றும் கார்த்திகை முதல் தை முதல் தேதி வரை நடைபெறும் மண்டல பூஜை, படி பூஜை, மகர விளக்கு, மகரஜோதி தரிசனம் வரை நாள்தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசித்துச் செல்வார்கள்.

சபரிமலை பிரசாதம்

சபரிமலை பிரசாதம்

ஐயப்ப பக்தர்கள் தரிசனம் முடிந்து திரும்பிச் செல்லும்போது சபரிமலையில் இருந்து பிரசாதங்களான அரவணை பாயசம், அப்பம், நெய். விபூதி, குங்குமம் ஆகியவற்றை வாங்கி வந்து தங்கள் குடும்பத்தாருக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் கொடுப்பது வழக்கம்.

பக்தர்கள் அனுமதி

பக்தர்கள் அனுமதி

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா நோய்த் தொற்று அபாயம் காரணமாக பக்தர்களுக்கு நேரடியாக பிரசாதம் வழங்குவது நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக பிரசாதம் வேண்டுவோருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. தற்போது நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று அபாயம் குறைந்து விட்டதால், வழக்கம்போல் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

கட்டண விலை உயர்வு

கட்டண விலை உயர்வு

சபரிமலையிலும் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கையை தேவசம் போர்டு கடந்த மாதம் முதல் அதிகரித்தது. இந்நிலையில் சபரிமலையில் பக்தர்கள் மேற்கொள்ளும் அனைத்து வகை பூஜைக் கட்டணம் முதல் அரவணை பாயாசம், நெய் உள்ளிட்ட பிரசாதங்கள் வரை, அனைத்து வகைக் கட்டணங்களின் விலையையும் தேவசம் போர்டு அதிரடியாக உயர்த்தியுள்ளது.

ஏப்ரல் 10 முதல் விலை உயர்வு அமல்

ஏப்ரல் 10 முதல் விலை உயர்வு அமல்

இந்த விலை உயர்வு வரும் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:


1) படி பூஜை ரூ.1,37,900 (பழைய கட்டணம் ரூ.1,15,000)

2) சகஸ்ரகலசம் ரூ.91,250 (பழைய கட்டணம் ரூ.80,000)

3) உதயாஸ்தமன பூஜை ரூ.61,800 (பழைய கட்டணம் ரூ.50,000)

4) உற்சவபலி ரூ.37,500 (பழைய கட்டணம் ரூ.30,000)

5) களபாபிஷேகம் ரூ.38,400 (பழைய கட்டணம் ரூ.22,500)

6) தங்க அங்கி சார்த்துதல் ரூ.15,000 (பழைய கட்டணம் ரூ.10,000)

7) புஷ்பாபிஷேகம் ரூ.12,500 (பழைய கட்டணம் ரூ.10,000)

8) சதகலசம் ரூ.12,500 (பழைய கட்டணம் ரூ.10,000)

9) அஷ்டாபிஷேகம் ரூ.6,000 (பழைய கட்டணம் ரூ.5,000)

10) உச்ச பூஜை ரூ.3,000 (பழைய கட்டணம் ரூ.2,500)

11) பகவதி சேவை ரூ.2,500 (பழைய கட்டணம் ரூ.2,000)

12) உஷ பூஜை ரூ.1,500 (பழைய கட்டணம் ரூ.1,000)

13) கணபதி ஹோமம் ரூ. 375 (பழைய கட்டணம் ரூ.300)

14) கெட்டு நிறைத்தல் ரூ.300 (பழைய கட்டணம் ரூ.250)

15) அபிஷேக நெய்(100 மி.லி) ரூ.100 (பழைய கட்டணம் ரூ.75)

16) நீராஞ்சனம் ரூ.125 (பழைய கட்டணம் ரூ.100)

17) அரவணை ரூ.100 (பழைய கட்டணம் ரூ.80)

18) அப்பம் (ஒரு பாக்கெட்) ரூ.45 (பழைய கட்டணம் ரூ.35)


இந்த விலை உயர்வானது சித்திரை விஷூ கனி பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் ஏப்ரல் 10ஆம் தேதி முதலே அமலுக்கு வரும் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இந்த அறிப்பானது ஐயப்ப பக்தர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+