திருவள்ளூர்: ஓடும் ரெயிலில் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: 2 பேர் கைது
திருவள்ளூர்: திருவள்ளூரில் மின்சார ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற இரண்டு போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம் அடுத்த பழனிப்பேட்டையை சேர்ந்தவர் தங்கவேலு. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சர்மிளா (22).
இருவரும் நேற்று மாலை ரெயில் மூலம் திருவள்ளூரில் உள்ள வீரராகவர் கோவிலுக்கு வந்தனர். பின்னர் திருவள்ளூர் தபால் நிலையம் அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.
இரவு 11 மணிக்கு திருவள்ளூர் ரயில் நிலையம் வந்து சென்னை-அரக்கோணம் ரெயிலில் ஏறி அரக்கோணம் புறப்பட்டனர். இவர்களை பின் தொடர்ந்த 2 போதை ஆசாமிகள் அதே பெட்டியில் ஏறினர். ஏகாட்டூர் ரெயில் நிலையம் வந்த போது அவர்கள் தங்கவேலுவை சரமாரியாக அடித்துவிட்டு சர்மிளாவை ரயிலில் இருந்து கீழே இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றனர்.
அதிர்ச்சி அடைந்த தங்கவேலுவும், சர்மிளாவும் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அந்த போதை ஆசாமிகளை மடக்கி பிடித்தனர். தகவல் அறிந்த கடம்பத்தூர் போலீசார் அவர்களை கைது செய்தனர்.
பின்னர் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் போதை ஆசாமிகள் இருவரும் திருவள்ளூர் பெரிய குப்பத்தை சேர்ந்த லாரன்ஸ், சாலமோன் என்று தெரிய வந்தது.
இரவு நேரங்களில் புறநகர் மின்சார ரயில்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்?












Click it and Unblock the Notifications