Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி நீங்க முதல்வரா? உங்க ஜோடி நடிகை முதல்வரா? கேள்விக்கு விஜய் கேரக்டரில் நடித்த நட்டி ஓபன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள (TN 2026) த.நா 2026 திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அரசியல் பின்னணியுடன் காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம், டீசர் வெளியான தருணத்திலிருந்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பி வருகிறது.

TN 2026 Natti Natraj Vijay Tamil Cinema

கிளப்பிய டீசர் சர்ச்சை

'டிஎன் 2026 தங்க நட்சத்திரம்' என்ற பெயரில் வெளியான டீசரில், நட்டி நட்ராஜ் அரசியல் களத்தில் இறங்கும் நடிகராக காட்டப்படுகிறார். ரசிகர்கள் மாலை அணிவித்து பாலாபிஷேகம் செய்வது, ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாக மாறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த காட்சிகள் பலருக்கும் நடிகர் விஜயை நினைவூட்டுவதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் கிளம்பின. குறிப்பாக நட்டி நட்ராஜின் உடை, நடிப்பு ஸ்டைல், நரைத்த தாடி லுக், அவருக்காக வைக்கப்பட்ட கட்அவுட் என இவை எல்லாம் சேர்ந்து பார்த்த ரசிகர்கள், "இது விஜயின் பயோபிக் மாதிரியே இருக்கிறது" என்று கூற ஆரம்பித்தனர்.

அரசியல், சினிமா கலந்த கதைக்களம்

இந்த படத்தில் எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், விஜி சந்திரசேகர், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், கிங்ஸ்லி, இளவரசு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாண்டி சிறப்பு தோற்றத்தில் வருகிறார். கண்ணன் ரவி குழு மற்றும் கந்தாரா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் நட்டி பதில்

படத்தின் பிரமோஷன் தொடங்கிய நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அதில் முக்கியமாக, "இந்த படத்தில் நீங்கள் முதல்வராக வரவேண்டும் என்று நினைக்கிறீர்களா? அல்லது அல்லது உங்கள் நடிகை முதல்வராக வரவேண்டும் என்று நினைக்கிறீர்களா?" என்ற கேள்வி நட்டி நட்ராஜிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் அமைதியாக பதில் அளித்தார்: "இந்த படத்தை படம் போலவே பாருங்கள், இதில் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் இணைத்து எடுக்கவில்லை. டீசரில் உள்ள காட்சிகளை வைத்து நீங்களாக கற்பனை செய்ய வேண்டாம். படம் வெளியான பிறகு முழு கதையும் புரியும் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

விஜய் குறித்த சர்ச்சைக்கு விளக்கம்

டீசர் வெளியான பிறகு, "இந்த படம் நடிகர் விஜய்யை குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளது" என்ற விமர்சனங்களும் ட்ரோல்களும் அதிகமாக வந்தன. இதற்கு பதிலளித்த நட்டி, யாரையும் அசிங்கப்படுத்தும் நோக்கம் இல்லை. அவர் ஒரு சிங்கம் மாதிரி... யாராலும் அவரை ட்ரோல் செய்ய முடியாது.

நான் அவருடன் சில படங்களில் நடித்திருக்கிறேன் அவருக்கும் எனக்கும் நல்ல நட்பு இருக்கிறது. இந்த கதையை நாங்கள் பல மாதங்களுக்கு முன்பே எழுதிப் படமாக்கி முடித்துவிட்டோம்.‌ பின்னர் நடந்த அரசியல் சம்பவங்களுடன் இதை இணைத்து பார்க்க வேண்டாம் என்று விளக்கம் அளித்துள்ளார்.

TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு
TN 2026 படத்தில் விஜய் ரோலா? தன்னுடைய கெட்டப் பற்றி நட்டி ஓபனா பேசிட்டாரே? பின்னணி சம்பவம் பெருசா இருக்கு

ரியாக்ஷன்

இந்த விளக்கத்திற்குப் பிறகும் சமூக வலைதளங்களில் விவாதம் குறையவில்லை. சிலர், "படம் பார்த்த பிறகு தான் உண்மை தெரியும்" என்று காத்திருக்கிறார்கள். இன்னும் சிலர், "டீசரே எல்லாம் சொல்லிவிட்டது" என்று விமர்சிக்கிறார்கள். தேர்தல் சூழலில் இப்படியான ஒரு படம் வெளியாக இருப்பதால், எதிர்பார்ப்பு மட்டுமின்றி சர்ச்சையும் அதிகரித்துள்ளது.

'டிஎன் 2026' ஒரு சாதாரண படம் அல்ல, வெளியாவதற்கு முன்பே பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. டீசர் மூலம் உருவான எதிர்பார்ப்பு, அரசியல் பின்னணி, அதனைச் சுற்றிய சர்ச்சைகள் எல்லாம் சேர்ந்து இந்த படத்தை திரையரங்குகளில் எப்படி வரவேற்கப் போகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. படம் வெளியான பிறகே, இது உண்மையில் என்ன சொல்ல வருகிறது என்பது தெளிவாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+