For Daily Alerts
Just In
சந்தோஷமாய் நகர்கிறேன்..

போயிருக்கவேண்டும்
மணல்களோடு பேசிப்பழகியாகிவிட்டது
இனி நீ வர தாமதமானால்கூட
என்னை இருக்கச்செய்யும் இவை..
காற்று மெல்ல ஊர்ந்து உடலெங்கும் படர்கிறது
இதுபற்றி உன்னிடம் சொல்ல ஒன்றுமில்லை
ஈர மணலில் கோடுகள் வரைந்துபோகும்
சிறு நண்டுகள் அனிச்சையாய் உன்
தொடுகையை நியாபகப்படுத்தின
இன்றைக்கும் உன்- என் பெயரெழுதி வைத்தேன்
முதல் இரண்டுக்கு தப்பினதை
மூன்றாம் அலை முற்றிலுமாக
எடுத்துப்போனது -உன் பெயரை மட்டும்
நட்சத்திரங்கள் அலைகளை கறுப்பாக்கியபின்னும்
காத்திருக்கிறேன் -மெல்லசினுங்கினாய் அலைபேசியில்
நாளை பார்போமென-
சந்தோஷமாய் நகர்கிறேன்
நாளையும் கடலும் கடல் சார்ந்தவையும்
சொல்லப்போகும்
மென்கவிதைகளுக்காக.....
- ரிஷி சேது
rishi_sethu23@rediffmail.com