For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரும்பத் திரும்ப தவறினால்.. அது தப்பு!

Google Oneindia Tamil News

யாருமே இந்த உலகில் முழுமையானவர்கள் கிடையாது. தவறு செய்யாத மனிதர்களே கிடையாது.. தவறுகள் இயல்புதான்.. ஆனால் திரும்பத் திரும்ப தெரிந்தே செய்யும்போதுதான் அது தப்பாக மாறுகிறது.

தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் அதைத் தெரிந்து செய்தால் அந்த தவறு இறைவனால் ஒரு போதும் மன்னிக்கப் படாது. தவறு என்று தெரிந்து செய்யும் ஒரு மனிதன் நல்லியல்புகள் உடையவனாக இருக்க மாட்டான். பிறருக்குத் துன்பம் ஏற்படும் வகையில் தவறு என்று தெரிந்தே நடந்துகொள்பவனுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்காது. ஒரு நாள் நாம் தெரியாமல் நம் நண்பனின் சட்டையில் காபி கொட்டினால் அது தவறல்ல. ஆனால் இதுவே தினமும் தொடர்ந்தால் அது மிக பெரிய தப்பு தான்.

Erring is human nature

பிறருக்கு உங்களால் முடிந்தவரை உதவி செய்யுங்கள் மாறாக உபத்திரவம் செய்யாதீர்கள். பிறரைத் துன்புறுத்தி மகிழ்ச்சிக் கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. உயிர்களிடத்தில் அன்பு காட்டுங்கள். பிறர் உங்களுக்கு தீமை செய்தால் அவர்களை விட்டு விலகியே இருங்கள். ஒரு தவறை மீண்டும் மீண்டும் செய்வதால் அது சரியாகி விடாது.

குட்டீஸ்.. இனிமே கதை சொல்ல சொல்லி அப்பா அம்மாவ நச்சு பண்ணாதீங்க..யூட்யூபை கலக்கும் பெட்டைம் ஸ்டோரிஸ்குட்டீஸ்.. இனிமே கதை சொல்ல சொல்லி அப்பா அம்மாவ நச்சு பண்ணாதீங்க..யூட்யூபை கலக்கும் பெட்டைம் ஸ்டோரிஸ்

ஒரு குழந்தை கையில் கிடைக்கும் பொருளைத் தூக்கி ஒரு முறை வீசி எறியும் போதே அது தவறு என பெற்றோர் சுட்டிக் காட்ட வேண்டும். இதுவே பலமுறை தொடர்ந்தால் அந்த குழந்தையின் பிடிவாத குணம் அதிகமாகி விடும். சிலருக்கு தப்பை நாம் சரியாகச் செய்தால் அது தப்பு இல்லை என்ற மனோபாவம் உள்ளது. அந்த தவறுக்கு இன்று வேண்டுமானால் நீங்கள் தண்டனையிலிருந்து தப்பித்து இருக்கலாம் ஆனால் தெரிந்தே செய்த தவறுக்கு நிச்சயம் தண்டனை உண்டு.

தவறான வழியில் கிடைக்கும் செல்வம் வெகுகாலம் நிலைக்காது. ஒரு முறை செய்தால் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அறியாமல் செய்த தவறு ஆனால் அதே தவறை மீண்டும் மீண்டும் செய்தால் மாபெரும் தப்பு தான். அதனால் தவறுகளை ஆரம்பத்திலேயே திருத்திக் கொள்ளுங்கள்.

English summary
Erring is human nature, but we have to overcome this mistakes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X