For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காந்தி போதித்த அகிம்சை எங்கே?

Google Oneindia Tamil News

மகாத்மா காந்தியின் அடையாளமே அகிம்சைதான்.. நம்மை யார் அடித்தாலும் பதிலுக்கு அகிம்சையை பதிலாக கொடுப்போம் என்றார் அன்னல். அந்த அகிம்சையும், அந்த அகிம்சை வழி போராட்டமும்தான் நாட்டையே அடிமைத்தளையிலிருந்து விடுவித்தது.. ஆனால் இன்று அந்த அகிம்சை எங்கே போனது என்றே தெரியவில்லை..

எங்கெங்கும் தலை விரித்தாடுகிறது துவேஷங்களும், வெறுப்புணர்வும். யாருக்கும் பொறுமை இல்லை. யாரும் யாரையும் பொறுத்துக் கொள்ளும் மன நிலையிலும் இல்லை.. என்னவானது காந்தி தேசம் கற்றுக் கொண்ட அந்த உயரிய பண்பு...

mahathma gandhi and his ahimsa

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்று கத்தியில்லாமல் போரிட்ட காலம் போய் எதற்கெடுத்தாலும் வன்முறை என்ற காலத்தில் தான் நாம் இருக்கிறோம். உங்கள் உரிமைகளைக் கேட்பதில் தவறில்லை ஆனால் மற்றவரைத் துன்பப்படுத்தி அதைப் பெற கூடாது. அனைவரும் எப்போதும் ஒற்றுமையோடு இருக்க வேண்டும்.

சாதிகள் இல்லையடி பாப்பா என்பது போல சாதி மத பேதமின்றி ஒற்றுமையோடு வாழ வேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும் அதிலிருக்கும் கருத்தை முதலில் முழுவதும் அறிந்துக் கொள்ள வேண்டும். அண்ணல் காந்தியடிகள் கூறியது போல கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பது பொய் தீர விசாரிப்பதே மெய் என தீர விசாரித்த பிறகே முடிவு எடுங்கள். எப்பொழுதும் உண்மையையேப் பேசுங்கள். வாய்மையே எப்பாதும் வெல்லும் என்பார்கள்.

மக்களாகிய நாம் நம்முடைய கோரிக்கைகளைக் கேட்பதில் தவறில்லை அதற்காக வன்முறையைத் தூண்டும் விதமாக கடைகளை அடைப்பது பஸ் எரிப்பது போன்று வன்முறையில் ஈடுபடக் கூடாது. எதிர்ப்பைக் காட்ட வேண்டுமென்றால் பந்த் மட்டும் தீர்வாகாது. அறவழியில் உங்கள் அன்றாட வேலைகளைச் செய்துக் கொண்டே உங்கள் எதிர்ப்பையும் காட்டுங்களேன். ஒரு நிறுவனத்தின் செயல் உங்களுக்குப் பிடிக்கவி்ல்லையென்றால் கருப்புக் கொடி அணிந்து உங்கள் எதிர்ப்பைக் காட்டுங்க அதை விடுத்து ஸ்டிரைக் செய்ய வேண்டாமே. காந்தியடிகளின் அறவழியைப் பின்பற்றுங்கள்.

சாதி மத பேதங்களை விட்டொழியுங்கள். அனைவரும் இந்தியர் என எண்ணுங்கள். காந்தியடிகளின் அறப்போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றி தான் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம். வன்முறை எந்த பிரச்சினைக்கும் தீர்வல்ல. ஆனால் அஹிம்சையைப் பின்பற்றினால் மலையையும் மடுவாக்கும் சக்தி அதற்குண்டு. எந்த விஷயமும் அஹிம்சை முறையில் கையாண்டால் வெற்றி நிச்சயம்.

காமராஜர் நினைவு தினம் - கல்வித்தந்தை காமராஜருக்கு முதல்வர் துணை முதல்வர் புகழாரம் காமராஜர் நினைவு தினம் - கல்வித்தந்தை காமராஜருக்கு முதல்வர் துணை முதல்வர் புகழாரம்

எத்தனையோ போராட்டங்களைக் கடந்து அறவழியில் போர் செய்து அடிகளாக இருந்த மக்களுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார். கூண்டிலிருந்து வெளிப்பட்ட பறவை போல மக்கள் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே என சுதந்திரத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர். மக்கள் அவரைப் பாசத்தோடு தேசப்பிதா என்றழைத்தனர். அவர் வழியைப் பின்பற்றி நாமும் சண்டையில்லாமல் ஒற்றுமையோடு வாழ்வோம் என்று இன்று உறுதி கொள்வோம்.

English summary
Mahathma Gandhi taught the higlhy popular principle Ahimsa to the world to conquor anything.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X