For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இஸ்ரேல் ஆயுத உதவி செய்கிறது ... இலங்கை அமைச்சர் கதிர்காமர்

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

விடுதலைப் புலிகளை எதிர்த்துச் சண்டையிட்டு வரும் இலங்கை ராணுவத்திற்கு,இஸ்ரேல் ஆயுத உதவி மற்றும் புலனாய்வு உதவிகளை செய்து வருகிறது என்றுஇலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் கூறியுள்ளார்.

வாஷிங்டனில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இஸ்ரேலுடன், இலங்கை உறவைப் புதுப்பித்துக் கொண்டதால், பல பலன்கள்கிடைத்துள்ளது. நவீன ஆயுதங்கள் மற்றும் உளவுத் துறை தகவல்களை இலங்கைக்குஇஸ்ரேல் அளித்து வருகிறது.

இஸ்ரேலுடன் தூதரக உறவு ஏற்படுத்திக் கொள்ள முக்கிய காரணம் வடக்குயாழ்ப்பாணத்தில் பெருகி வரும் விடுதலைப் புலிகளின் கடுமையானதாக்குதலேயாகும். இது திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல.

விடுதலைப் புலிகள் யானை இறவு பகுதியை கைப்பற்றிய பின்பு அவர்கள் இலங்கைராணுவத்திடமிருந்து யாழ்ப்பாண நகரத்தை கைப்பற்றும் முயற்சியில் இருந்த போதுஇந்தியாவும், அமெரிக்காவும் இலங்கை அரசுக்கு எந்த விதமான உதவியும் செய்யமுன் வரவில்லை. எனவேதான் இஸ்ரேலுடன் உறவு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

எந்த நிலையிலும் இலங்கை அரசு இந்திய அரசிடம் ராணுவ உதவியைக்கோரவில்லை. இந்திய அமைதிப்படை முன்பு இங்கு வந்து சென்ற போது ஏற்பட்டகசப்பான நினைவுகளை இரண்டு அரசுகளும் மறக்க முடியாது.

அது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடப்பதை விரும்பவில்லை அதனால்தற்போதுள்ள பிரச்சனையில் இந்தியாவின் ராணுவ உதவியை நாங்கள் கோரவில்லை.

மிகக் கஷ்டமான சூழ்நிலையிலும் நாங்கள் இந்தியாவிடமிருந்து ராணுவ உதவியைக்கோரவில்லை. எனவே இந்திய பத்திரிக்கைகளில் இது பற்றி வந்த செய்திகள்தவறானவை.

இந்தியாவுடனான எங்கள் உறவு நன்றாக இருந்து வருகிறது. இலங்கையில் ஏற்படும்நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது இந்திய அரசுக்கு தெரிவித்து வருகிறோம்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் சந்திரிகா அதிபராகப் பதவி ஏற்ற போது, 25ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலுடனான முறிந்து போன உறவை புதுப்பிப்பது பற்றிஆலோசித்தோம். இப்போது அது நடைமுறைக்கு வந்துள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேலுடன் உறவு கொண்டுள்ளன. அதனால் இலங்கைஅவர்களுடன் உறவு கொண்டதும் தவறானது அல்ல என கதிர்காமர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X