For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலம் சீரமைப்பு பணி: வைகை, பல்லவன், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரங்கள் மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி: அரியலூர் மாவட்டம் ஈச்சங்காடு- மாத்தூர் இடையே பாலங்கள் சீரமைப்பு பணி நடைபெற இருப்பதால் வைகை, பல்லவன், குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட பல ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி சிவராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஈச்சங்காடு-மாத்தூர் ரயில் நிலையங்களுக்கு இடையே பாலங்கள் சீரமைப்பு பணி நேற்று தொடங்கியது. இந்தப் பணி நாளை (புதன்கிழமை) மற்றும் வரும் 5, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

குருவாயூர்-சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண்- 6128 ) குருவாயூரில் இருந்து இன்றும் (செவ்வாய்க்கிழமை), வரும் 4 மற்றும் 6ம் தேதி ஆகிய தினங்களில் இரவு 8.50 மணிக்குப் பதிலாக 10.15 மணிக்கு புறப்படும்.

சென்னை எழும்பூர்-மதுரை வைகை அதிவிரைவு ரயில் (வண்டி எண்- 2635 ) சென்னை எழும்பூரில் இருந்து நாளை (31ம் தேதி) மற்றும் 5, 7 ஆகிய தேதிகளில் பகல் 12.40 மணிக்குப் பதிலாக மாலை 3.30 மணிக்குப் புறப்படும்.

சென்னை எழும்பூர்-திருச்சி பல்லவன் அதிவிரைவு ரயில் (வண்டி எண்- 2605 ) சென்னை எழும்பூரில் இருந்து 31ம் தேதி மற்றும் 5, 7 ஆகிய தேதிகளில் மாலை 3.45 மணிக்குப் பதிலாக மாலை 4.15 மணிக்குப் புறப்படும்.

திருச்சி-கடலூர் துறைமுகம் பயணிகள் ரயில் (வண்டி எண்-806 ) திருச்சியில் இருந்து 31ம் தேதி மற்றும் 5, 7 ஆகிய தேதிகளில் பகல் 3.05 மணிக்கு பதிலாக மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு விருத்தாச்சலம் வரை மட்டும் இயக்கப்படும்.

கடலூர் துறைமுகம்-விருத்தாச்சலம் பயணிகள் ரயில் (வண்டி எண்- 833 ) 31ம் தேதி மற்றும் 5, 7 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

மதுரை-விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண்-701 ) 31ம் தேதி மற்றும் 5, 7 ஆகிய தேதிகளில் அரியலூர் வரை இயக்கப்பட்டு, அரியலூர் விழுப்புரம் இடையே மேற்கூறிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X