For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளக்காரரான ஏடிஜிபி ஜார்ஜ் மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறார்- வெளியேற விவசாயிகள் கோரிக்கை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

ADGP George
கம்பம்: முல்லைப் பெரியாறு விவகாரத்தினால் தமிழக- கேரள எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நிலவி வரும் பதற்றத்தை தணிக்க, கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் தலைமையில் தேனி மாவட்டம் கம்பத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆனால் ஜார்ஜ் உடனடியாக இப்பகுதியிலிருந்து வெளியேற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தேனி மாவட்ட மக்கள் வரலாறு காணாத வகையிலான மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த 3 நாட்களாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஊர் ஊராக தாங்களாகவே கிளம்பி குமுளியை நோக்கி பேரணி நடத்தி கேரள அரசின் விஷமத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மக்கள் தாங்களாகவே திகழ்வதாலும், பெரும் கொந்தளிப்புடன் இருப்பதாலும் போலீஸாரால் எதுவும் செய்ய முடியவில்லை. மிகுந்த கட்டுப்பாட்டுடன் அவர்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீரென கூடுதல் டிஜிபி ஜார்ஜ் கம்பம் வந்துள்ளார். அங்கு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், காவல்துறை தென் மண்டல ஐ.ஜி. ராஜேஷ் தாஸ், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் கண்ணப்பன் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அந்த கூட்டத்தில் இரு மாநில எல்லைப்பகுதிகளில் எழுந்துள்ள பதற்றத்தை தணிப்பது குறித்தும், சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகளை சமாளிப்பது பற்றி, விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

கிராம சபை கூட்டங்களுக்கு சென்று மக்களை சமாதானப்படுத்துவது என்றும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூடுதல் டி.ஜி.பி ஜார்ஜ் தெரிவித்திருந்தார்.

ஏடிஜிபி ஜார்ஜுக்கு திடீர் எதிர்ப்பு

இந்த நிலையில் தற்போது கூடுதல் டிஜிபி ஜார்ஜுக்கு எதிராக விவசாயிகள் கிளர்ந்தெழ ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ஜார்ஜ் கேரளாவைச் சேர்ந்தவர். தமிழகத்தின் உரிமைக்காக மக்கள் போராடி வரும் இடத்திற்கு அவர் வந்துள்ளதன் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை.

அவரது தலைமையிலான போலீஸார் மக்கள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர். இதனால்தான் இன்று கம்பம் மெட்டில் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

அமைதியான முறையில் பேரணி சென்றவர்களைத் தடுத்து தடியடி நடத்தியுள்ளது ஏன்.?

கேரளாவில் அரசியல்வாதிகள், வக்கீல்கள், காவல்துறையினர் அந்த மாநில மக்களுக்கு ஆதரவாக உள்ளனர். அவர்களின் ஆதரவுடன்தான் தமிழர்களை அங்கு தாக்குகிறார்கள். இங்கு மட்டும் எங்களை ஏன் தாக்குகிறார்கள் என்று கேட்டனர்.

English summary
ADGP George is camping in Cumbum and holds talks with higher police officers including South Zone IG Rajesh Doss, Madurai CoP Kannappan and others.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X