பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீதையுடன் ஒயின் குடித்தவர் தான் கடவுள் ராமர்.. எழுத்தாளர் கேஎஸ் பகவான் சர்ச்சை..பரபரக்கும் கர்நாடகா

Google Oneindia Tamil News

பெங்களூர்: இந்து மத கடவுளான ராமர் தினமும் மதியம் மனைவி சீதையுடன் அமர்ந்து ஒயின் குடிப்பார் என கர்நாடகா எழுத்தாளர் கேஎஸ் பகவான் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது. அவருக்கு இந்துத்துவ அமைப்பினர், பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் கேஎஸ் பகவான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளன.

கர்நாடகாவை சேர்ந்தவர் கேஎஸ் பகவான். இவர் பல்வேறு நூல்களை எழுதி உள்ளார். பகுத்தறிவாதியாக அறியப்படும் நபர்களில் இவரும் ஒருவர்.

இந்நிலையில் தான் கேஎஸ் பகவான் கூறும் கருத்துக்கள் அடிக்கடி சர்ச்சையாகிவிடும். இதையடுத்து இந்துத்துவா அமைப்பினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், மிரட்டல் விடுக்கும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன.

சு.சுவாமியின் ராமர் பாலம் புராதன சின்ன கோரிக்கை- விரைவில் முடிவு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சு.சுவாமியின் ராமர் பாலம் புராதன சின்ன கோரிக்கை- விரைவில் முடிவு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

 ஒயின் குடிப்பதாக..

ஒயின் குடிப்பதாக..

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் கேஎஸ் பகவான் பங்கேற்றார். இந்த விழாவில் அவர் ராமர் குறித்து சில கருத்துகளை கூறினார். இது சர்ச்சையை கிளப்பியது. விழாவில் கேஎஸ் பகவான் பேசும்போது, ‛‛ வால்மிகியின் ராமாயணத்தில் ராமன், தனது மனைவி சீதையுடன் சேர்ந்து ஒவ்வொரு நாள் மதியமும் ஒயின் குடிப்பதாக தெரிவிக்கப்பட்டள்ளது. இதை நான் சொல்லவில்லை. வால்மிகியின் ராமாயணம் எனும் ஆவணம் தான் இதனை சொல்லியுள்ளது'' என்றார்.

விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு

விஷ்வ ஹிந்து பரிஷத் எதிர்ப்பு

இதற்கு இந்துத்துவா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடவுள் ராமன், சீதை ஆகியோர் பற்றி கேஎஸ் பகவான் அவதூறான கருத்துகளை பரப்புகிறார் என அவரது பேச்சை கண்டித்துள்ளனர். இதுபற்றி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் கூறுகையில், ‛‛இதுதான் அவர்களின் மனநிலை. தீய செயல்களை செய்பவர்கள் இந்து கடவுள்களும் அதையே செய்கின்றனர். இவர்களை நாம் கவனத்தில் எடுத்து கொள்ளக்கூடாது. அவர் அறிவாளி அல்ல. உண்மையில் அவர் இன்டலெக்சுவல்ஸ்களுக்கு எதிரானவர். இவர்களை இந்த சமூக மெல்ல மெல்ல புறக்கணிக்கிறதுது. விரைவில் காலாவதியாகிவிடுவார்கள்.காங்கிரஸின் மதச்சார்பற்ற கொள்கை தான் இவர்களை வளர்த்துள்ளது. இந்துக்களுக்கு விரோதிகளாக உள்ளனர். ராமரும் சீதையும் யார் என்பது குறித்து இந்த வகையான நபருக்கு எந்த விளக்கமும் அளிக்கப்போவது இல்லை. ஏனென்றால் இவர்கள் தீய மனநிலையில் இருந்து வெளிவராத தீய மனிதர்கள். இவர்கள் தொடர்ந்து இந்து மதத்தைத் தாக்கி வருகின்றனர்'' என்றார்.

நடவடிக்கை கோரும் பாஜக

நடவடிக்கை கோரும் பாஜக

இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாஜகவின் விவேக் ரெட்டி, ‛‛கேஎஸ் பகவானின் பேச்சு மிகவும் மோசமானது. இது அவரது மோசமான மனநிலையை வெளிக்காட்டுகிறது. அவரை சமூகத்தில் இருந்து அனைவரும் புறக்கணிக்க வேண்டும். இந்தியா மிகவும் சகிப்புத்தன்மையுள்ள நாடு தான். இருப்பினும் கூடநம் கடவுள்களை அவமானப்படுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது. எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. இதனால் கேஎஸ் பகவான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

முந்தைய சர்ச்சைகள் என்னென்ன?

முந்தைய சர்ச்சைகள் என்னென்ன?

எழுத்தாளர் கேஎஸ் பகவான் கடவுள் ராமர் பற்றி சர்ச்சையை கிளப்புவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும கடந்த 2018 ல் ‛‛ராமர் கோவில் ஏன் வேண்டாம்'' என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டார். அதில், ராமர் போதை பொருள் பயன்படுத்துவதோடு, சீதையையும் பயன்படுத்த செய்வார். இது வால்மிகியின் ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதா தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அவருக்கு எதிராக இந்துத்துவா அமைப்பினர் கடும் போராட்டம் நடத்தினர். அதற்கு முன்பு கடந்த 2015ல் பகவத் கீதையில் உள்ள சில பக்கங்களை எரிக்கப்போவதாக அவர் அறிவித்தார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் தற்போதும் அவர் ராமர் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

English summary
writer KC Bhagwan says, "In the afternoon, Rama's main activity was to sit with Sita and drink wine. I am not saying this. That's what the documents say and the Valmiki Ramayana’’. On the row for this controversy erupts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X