செக்ஸ் வைத்துகொள்ள மறுப்பு.. மனைவியை கொன்று வனப்பகுதியில் வீசிய கணவர்.. பெங்களூரில் கொடூரம்
பெங்களூர்: பெங்களூரில் செக்ஸ்க்கு மறுப்பு தெரிவித்த மனைவியை கணவர் படுகொலை செய்து உடலை சீரடி வனப்பகுதியில் வீசிய கொடூரமான சம்பவம் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் சீதாமர்கியை சேர்ந்தவர் பிருத்விராஜ் (வயது 28). இவர் கடந்த 15 ஆண்டுகளாக பெங்களூர் மடிவாளாவில் உள்ள மாருதி லேஅவுட்டில் வசித்து வரும் இவர் எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 9 மாதங்களுக்கு முன்பு பிருத்விராஜிக்கும், பீகாரை சேர்ந்த ஜோதி குமாரி (28) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இதையடுத்து இருவரும் பெங்களூரில் வசித்து வந்தனர்.

மாயமான மனைவி
இந்நிலையில் கடந்த 5 ம் தேதி மடிவாளா போலீஸ் நிலையத்திற்கு சென்ற பிருத்விராஜ் தனது மனைவி மாயமாகியதாக புகார் அளித்தார். போலீசார் அவரை தேடிவந்தனர். ஜோதி குமாரி கிடைக்கவில்லை. இதனால் போலீசார் பிருத்விராஜிடம் விசாரித்தனர். அப்போது டெல்லியில் குடியேற வேண்டும் என மனைவி கூறினார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மாயமானதாக கூறினார்.

கொலை செய்த கணவர்
இருப்பினும் அடிக்கடி பிருத்விராஜ் தனது நிலைப்பாட்டை மாற்றினார். இதனால் அவர் தனது மனைவியை ஏதாவது செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதனால் அவரை பிடித்து தீவிரமாக விசாரித்தனர். அப்போது அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டது. மேலும் போலீசாரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

செக்ஸ் வைத்து கொள்ள மறுப்பு
இதையடுத்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது பிருத்விராஜ் கூறுகையில், ‛‛என் மனைவி என்னிடம் வயதை மறைத்துவிட்டார். அவருக்கு 30 வயதுக்கும் அதிகமான வயது நிரம்பிய நிலையில் 28 எனக்கூறி திருமணம் செய்தார். மேலும் செக்ஸ் வைத்து கொள்ள அவர் மறுத்தார். இதனால் திருமணத்தை முறித்து கொள்ள கூறினேன். ஆனால் அவர் அதற்கும் மறுப்பு தெரிவித்தார். இதனால் கோபத்தில் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன்'' என கூறினார்.

தொடரும் விசாரணை
மேலும் அவர் கொலையை மறைக்க நினைத்தார். இதனால் பிருத்விராஜ் தனது மனைவி ஜோதி குமாரியின் உடலை ஹாசன் மாவட்டம் ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா அருகே சார்மடி வனப்பகுதியில் வீசியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சார்மடி வனப்பகுதிக்கு சென்ற போலீசார் ஜோதிகுமாரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
-
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
கும்மிடிப்பூண்டியில் 3 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை- காவல் துறை விளக்கம் -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
"என் கைய விடு" ஐஏஎஃப் அதிகாரி மனைவிக்கு தோழன் விரித்த வலை! வசிய மாந்திரீகம்! நாக்பூரில் யார் பாருங்க -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications