அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?!
சென்னை: என்.டி.ஏ கூட்டணியில் அமமுகவுக்கு 12 சீட்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரபரக்கின்றன. டிடிவி தினகரன் டெல்லி சென்று அமித் ஷா, பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்த நிலையில் அமமுகவுக்கு தொகுதி எண்ணிக்கை இறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 12 இடங்களில் அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடும் எனத் தெரிகிறது.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் நாள் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு
அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் மிகப் பெரிய இழுபறி நீடித்து வருகிறது. அமமுக வேட்பாளர்கள் அனைவருமே இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுவதாக தெரிகிறது. ஆனால் தங்களது குக்கர் சின்னத்தில்தான் அமமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என டிடிவி தினகரன் உறுதியாக உள்ளார்.
இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பின் பேரில் டெல்லி சென்றார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, அமமுகவின் நிலையை டிடிவி தினகரன் தெளிவுபடுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
அமமுகவுக்கு 12 சீட்?
இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரும், பாஜக தமிழக பொறுப்பாளருமான பியூஷ் கோயலைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார் டிடிவி தினகரன். பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பின்போது அமமுகவுக்கு 12 சீட் உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 12 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் அமமுக போட்டியிடவும் பாஜக தலைமை ஒப்புதல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அமமுகவை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைக்கவேண்டும் என எடப்பாடி பழனிசாமி முயன்ற நிலையில், அக்கட்சி குக்கர் சின்னத்தில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தொகுதிப் பங்கீட்டை பாஜக உடன் தான் நடத்துவோம் என ஏற்கனவே டிடிவி தினகரன் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
டிடிவி தினகரன் பேட்டி
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், பியூஷ் கோயலையும் சந்தித்தோம். இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை செய்தோம்.
ஒவ்வொரு முறையும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பியூஸ் கோயல் சென்னையில் வந்து உட்கார்ந்து பேச முடியாது. அதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி வந்து அமித்ஷாவை பார்த்தார். பாஜகவுக்கான தொகுதிகளை பற்றி பேசி இருப்பார்கள். பேசி இருக்கலாம் எனக்கு தெரியவில்லை. நாங்கள் அமித்ஷாவிடம் 234 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் எல்லாம் எப்படி எதிர்கொள்வது என பேசினோம்.
பீகார் போல
பீகாரில் எவ்வாறு தேர்தல் வெற்றி பெற்றார்களோ, அவ்வாறு தமிழ்நாட்டில் தேர்தலை எதிர்கொண்டு அனைத்து தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்பது தொடர்பாக ஆலோசனை செய்தோம். மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால் தான் தமிழ்நாட்டுக்கு நிதி முறையாக வரவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு தமிழ் நாட்டுக்கு வழங்கி இருக்கிறது.
நிதி ஆளுமை சரியாக செய்யாமல் உள்ளது திமுக. பீகார் போல் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தமிழ்நாட்டில் திமுகவை தோற்கடிப்போம். சசிகலாவை தேசிய ஜனநாயக கூட்டணியில் கொண்டு வருவதற்கான எந்த ஒரு முயற்சியும் இல்லை. அவ்வாறு எந்த ஒரு திட்டமும் இல்லை. பஞ்சபாண்டவர் அணி போல் நாங்கள் செயல்படுகிறோம். திமுக என்கிற தீய சக்தியை வீழ்த்த தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். அதற்கான மாற்று அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
3 நாட்களில்
மத்திய நிதியை எளிமையாக பெற்று தரும் கூட்டணியே எங்கள் கூட்டணி. திமுக சரியாக நிதி நிர்வாகம் செய்யாமல் மத்திய அரசு நிதியை வெவ்வேறு விஷயங்களுக்கு செலவு செய்வதால் தான் நிதி பிரச்சனை. விஜய் உடனான கூட்டணி குறித்த தகவல்களுக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் மறுத்துவிட்டனர் அதுதான் இறுதி.
கூட்டணியில் மேலும் புதிய கட்சிகள் இணையாது என எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார். தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யாகிவிடும். மூன்று நாட்களில் முழுமையான அறிவிப்பு வெளியாகும்" என்று தெரிவிதிருந்தார்.
-
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்? -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
கொங்குவில் உடையும் அதிமுக கோட்டை.. 4 மண்டலங்களிலும் திமுக தான் ‘டாப்' - கருத்து கணிப்பு ரிசல்ட் -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்?













Click it and Unblock the Notifications